#சாணக்கியத்தனம்_எனும்_பொறு
சாணக்கியன் சாணக்கியர் அவர் செய்தது சாணக்கியத்தனம் போன்ற வார்த்தைகளை ஒருவரை அறிவாளிகளாக காட்டவும் அவர் செய்தது சிறந்த செயல் என்று சொல்லவும் நாம் மிக சாதாரனமாக பயன்படுத்தும் வார்த்தைகள். சாணக்கிய நீதியை வாசித்தால் ஒரு காலமும் சாணக்கியத்தனம் எனும் வார்த்தையை ஒருவரை சிறப்பு படுத்து பயன்படுத்தவே மாட்டோம்.......
சில சாணக்கிய போதனைகளை அறிந்துகொள்வோம் சாணக்கியன் பெண்களை பற்றி கூறிய பொன்மொழிகளை கீழே தொகுத்துள்ளேன்..........
• பெண் என்பவள் ஆண்களைவிட இருமடங்கு பசியும் நான்கு மடங்கு வெட்கமும் ஆறு மடங்கு தைரியமும் எட்டு மடங்கு காமவெறியும் கொண்டவள்......
• பெண் ஒரே நேரத்தில் ஒரு ஆணிடம் பேசவும் மற்றொருவனிடம் காம பார்வை வீசவும் மூன்றாமவனிடம் கள்ள உறவு கொள்ளவும் அறிந்த வேசக்காரி.......
• பொய்விளம்புதல் , வேசமிடுதல் ,மடமை பேசல், பேராசை, குரூர புத்தி இவையே பெண்களின் இயற்கை குணங்களாகும்.....
• பேரழகியாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட இழிகுலத்தில் பிறந்த பெண்ணை மணமுடிப்பது அறிவான செயலாகாது.....
• கணவனின் அனுமதியில்லாமல் விரதமிருக்கும் பெண் தன் கனவனின் ஆயுளை குறைப்பதோடு எரி நரகத்திற்கு செல்வாள்.......
• கணவனுக்கு பாதபூசை செய்த நீரை அருந்திய பெண்ணே பக்தியுள்ள பெண்ணாகிறாள்.......
இது தான் சாணக்கியன் எனும் பொறுக்கி எழுதி வைத்த தர்மம் அவனைத்தான் அறிவாளியாக கொண்டாடி திரிகிறோம் நம் பேச்சு வழக்கில்.....
சாணக்கியத்தனம்_எனும்_பொறு
சாணக்கியன் எனும் மனுதர்ம அடிவருடியின் முத்தான சில அறிவுரைகள்.......
> பிராமணன் இல்லாத இடம் எந்த உயிரும் வாழ தகுதியற்ற இடம்.......
>பிராமணரை தொட்டு பேசுவது என்பது நாகரீகமற்ற செயல்......
> இரண்டு பிராமணருக்கு இடையேவோ பிராமணனுக்கும் நெருப்பிற்கும் இடையிலோ செல்ல கூடாது.........
>பிராமணருக்கு சரியான வெகுமதி கொடுக்காதவர்கள் அழிந்தே போவார்கள்......
>பிராமணரை மக்கள் தெய்வமாக வணங்க வேண்டும்.......
> பிராமணர்கள் மட்டுமே எப்போதும் சுத்தமானவர்கள்.......
>பிராமணர்களின் பலம் அவர்களுக்கு இருக்கும் அபரிதமான அறிவு......
>பிராமணர்களின் கீழ் பயணித்து அவர்கள் அறிவுரை கேட்டு நடந்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்..........
>சூத்திரனிடம் உணவு பெற்று உண்ணும் பிராமணன் எதற்கும் பயன்ற்ற வெறும் ஒரு பொருளே.........
இனி எவனாவது சாணக்கியன் சாணக்கியத்தனம் என்று பெருமை பேசுவதற்கு முன் இதை நினைவில் வைத்து பேசுவது நலம்.......
#சாணக்கியத்தனம்_எனும்_பொறு
சாணக்கியன் தர்மத்தை போதனை செய்தவன் அவன் ஒரு ஒப்பில்லா அறிவாளி ஒரு ராஜ்யத்தை உருவாக்கவும் அதன் அரசனை வலிமையானதாக்கவும் வல்லமை பெற்றது அவனது போதனைகள் என்று கதை அளந்து தள்ளுவார்கள்.......
சாணக்கியனை படித்தால் தெரியும் அவன் எப்படி பட்ட எம்போக்கி என்று. ஆம் இறை வணங்கி தர்மத்தை போதிக்கின்றான் அவன் போதிக்கும் தர்மம் என்பது மனித குலத்திற்கே எதிரான தர்மம்தான்..........
ஒரு மனிதனின் தொழில் கல்வி பொருளாதாரம் ஆகிய மூன்றும் அவனது தலையைழுத்து படியும் அவன் பிறந்த குடியின் படிதான் அமையுமாம் ஆந்தைகளுக்கு கண் தெரியாது என்பதற்காக கதிரவனை குற்றம் சொல்லமுடியாது என்பதுபோல ஒருவனின் பிறப்பையையும் அதனை ஒத்த வாழ்வும் அவனது பிறப்பே தீர்மானிக்கிறது புறச்சூழலை குறை சொல்லக்கூடாது என்கிறான் சாணக்கிய பாப்பான்..........
மேலோட்டமாக படித்தால் சரிதானே தலையெழுத்து தானே தீர்மானிக்கும் என்று தோன்றலாம் ஆனால் அவன் எடுத்து வைப்பது பிறப்பே தீர்மானிக்கும் அதாவது ஒருவனின் பிறப்பு எனக்கூறுவது வர்னாசிரம கூறிய அதே பிறப்பு பாகுபாட்டை..............
பிராமணரும் , வட்டிக்கு விடுபவனும், அதிகாரத்தில் இருக்கும் அரசனும் இல்லாத ஊரில் வாழ்வது பாவம் என்கிறது அவனது தர்மம்..........
பிராமணரை போற்றாதவன் நாற்பது பிறப்புக்கு நாய்களாக பிறப்பார்கள் என்று தர்மத்து போதிக்கிறது அந்த பொறுக்கியின் தர்மம்...........
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது வள்ளுவன் வகுத்த தர்மம்........
தாழகிடப்பவனை தூக்கி விடுவதே தர்மம் என்கிறார் எங்கள் அய்யா வைகுண்டர்.......
ஆதலால் மீண்டும் சொல்கிறேன் பொறுக்கித்தனம் செய்பவனைதான் சாணக்கியன் எனும் இழிச்சொல்லால் அழைக்க வேண்டுமே தவிர்த்து நுன்மதி உள்ளவர்களை அல்ல........
#சாணக்கியத்தனம்_எனும்_பொறு
ஒழுங்குபடுத்தபடாத மக்கள் ஆண்மீக தேடல் இல்லாமல் இருந்த காலத்தில் அந்த மக்களின் இழி நிலையில் இருந்து காக்க அவர்களுக்கு வாழ்வியல் முறையை வகுத்தவர் தானாம் இந்த இந்தியர்கள் தி க்ரேட் பிலாசப்பர் என்று கொண்டாடும் சாணக்கியன்.........
சாணக்கியன் தான் வகுத்திருக்கும் சாணக்கிய நீதியில் முழுக்க முழுக்க பிற்போக்குத்தனத்தை தான் கற்பித்திருக்கிறான். அவன் வகுத்த நீதியில் குரு, பிராமணன், வைசியர் இந்த மூவரும் தான் மனிதர்களாகவே மதிக்க பட்டிருக்கிறார்கள். இதுவரை நான் படித்த நூல்களில் பெண்களை இந்த அளவு கீழ்தரமாக எழுதிய ஒரு புத்தகத்தையும் நான் பார்த்ததில்லை...........
வடக்கர்கள் குறிப்பாக உத்தர பிரதேசம் பிஹார் பகுதிகளில் உள்ளவர்கள் சூதாடுவதில் பெயர் போனவர்கள். சூது ஆடும்போது எதையும் அவர்கள் பணயமாக வைப்பார்கள். சமீபத்தில் ஒரு செய்தியை படித்தேன் அதில் பீஹாரி ஒருவன் சூதாடிவிட்டு நேராக வீட்டிற்கு வந்து அவனது மனைவியிடம் நீ உடனடியாக அவனோடு போக வேண்டும் ஏனெனில் நான் உன்னை பணயம் வைத்து தோற்றுவிட்டேன் என்று அவளை அடித்து உதைத்து மற்றவனிடம் அனுப்பிவைக்கிறான்.......
அதே ஊரில் அதே போன்ற ஒரு சூதில் ஒருவன் தோற்றுவிட கணவனின் ஆணைக்கினங்க தோற்றவனோடு மகிழ்ச்சியாக சென்று இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய மனைவியை பற்றியும் படித்தேன். ஆக பெண் என்பவள் யாராலும் எப்படி வேண்டிமென்றாலும் கையாள படலாம் அவர்கள் கணவனுக்கு அடிமை சாசனம் எழுத பட்டவர்கள் என்று இன்றும் உறுதியாக நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது..........
இதற்கு விதை சாணக்கியன் கற்பித்த நீதி தான் அவனது சாணக்கிய நீதியில்
“ஒருவன் நெருக்கடியான காலத்தில் தன்னை காத்துகொள்ள தன் மனைவியையும் இழக்கலாம் தன்னை காப்பதே முதன்மை”
என்று குறிப்பிடுகிறான்......
இப்படி நீதி கற்பிக்கும் ஒரு எம்போக்கி பயலைத்தான் சாணக்கியன் சாணக்கிய தர்மம் சாணிக்கியத்தனம் என்று கொண்டாடுகிறது.......
#கிழவனார்
No comments:
Post a Comment