ஒவ்வொருவருக்கும் சைக்கிள் பறந்த கதைகள் என்று எழுத தொடங்கினால் பல கதைகளும் அதற்கு கிளை கதைகளும் கிடைக்கும். இன்று வளக்கொழிந்து போன சைக்கிள் எனும் அரிய வகை வாகனம் அன்று ஒரு காலத்தில் ஸ்டைலின் சின்னமாக இருந்தது.அதில் பறந்த கதைகளின் தொகுப்பு இது........
அந்த காலத்துல சைக்கிள் ஓட்ட படிக்கும் எல்லா குமரியான்வளும் ஒரு மூத்தவன தாஜா பண்ணி அவனின் நேரத்தை வாங்கி சைக்கிள் வாடகைக்கு எடுத்து அவனின் அசைக்க முடியாது கட்டளைகளுக்கு கீழ் படிந்துதான் சைக்கிள் ஒட்டி படிக்க முடியும். வண்டிக்க புறத்தால ஒரு கம்போட வண்டி ஓட்டுறவன் பின்சீட்டை கம்பால அடிச்சிட்டே டிக்கிய ஆட்டாம வண்டியா ஒட்டுல குரல்களோடோ கண்டிப்போடோ வண்டி ஓட்ட படிச்சி குடுக்கும் அண்ணன் மாறுவல லீவு நாட்களில் ரோட்டில் நிறைய பாக்கலாம் அப்படி பட்ட அனுபவம் எதுவுமே வாய்க்காமல் சொந்தாமாக சைக்கிள் ஒட்டி படித்த ஒரே ஒருத்தர் ஊருக்குள் உண்டு என்றால் அந்த ஒரே ஆள் இந்த கிழவனார் மட்டும் தான்............
வெவரம் தெரிஞ்ச காலத்துல வெளிநாட்டுல இருந்து அப்பா ஊருக்கு வந்த நேரம் அப்போ எல்லாம் வண்டி ஒண்ணோ ரெண்டோ தான் ஊருக்குள்ள ஓடும் சைக்கிள் வைத்திருப்பவன் பெரிய வசதி படச்சவன். அந்த காலத்துல மவனுக்கு வாங்கி வச்சிருந்த பிஸ்ஏ சைக்கிள அண்ணன பாத்த பாசத்துல அல்லது அண்ணன் கொடுத்த பேரிச்சம்பழதுக்கு பரிசாக நீ ஊருக்கு போற வரை நீயே வச்சி ஒட்டு அண்ணானு கொடுத்து விட்டிருந்தாவ எங்க மூத்த மாமி அப்படித்தானே சைக்கிள் நம்ம வீடுகள்ள வந்திச்சு..........
சைக்கிள் வந்த நாள் முதலா நம்ம வேல அப்பா இல்லாத நேரம் அந்த சைக்கிள எடுத்து வீட்ட சுத்தி கெடக்கும் நிலத்துல உருட்டி விளையாடுவது அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அரைகால் போட்டு வீட்டடில நட்டு உட்டுருக்கும் மரிச்சீனி மூட்டுல விழுந்து எழும்பி கடைசியா முழுசா சீட்ல இருக்கும் அளவுக்கு வந்தாச்சு பெடல் போட்டு ஏறவும் தெரியாது கால ஊனி இறங்கவும் தெரியாது. சைக்கிள்ள நல்லா ஏறி இருந்து வீட்டின் முன் அளிய புடிச்சிட்டு ஒரு தள்ளு அப்படியே சைக்கிள் சவுட்டிடு பொய் வீட்டடியோட முக்குல நிக்கும் சாஞ்சதென்ன மர மூட்டில் கால முட்டு கொடுத்து வண்டிய நிறுத்துவது. இப்படி சுயமா சைக்கிள் ஒட்டி படிச்சதாலையோ என்னமோ நாம் சைக்கிள் பறக்கவிடாத இடமே இல்ல...............
அப்படித்தானே அந்த முதல் சம்பவம் நடந்திச்சு. எனக்கு ரெண்டு வயசுக்கு மூத்தவன் சுரேஷ் அண்ணன். எங்க வீட்ல நின்ன அந்த இரவல் சைக்கிள வந்து அடிகடி இரவல் வாங்கிட்டு போவான். எங்க அம்மையும் அவன் வந்து கேட்டா இல்லன்னு சொல்றதில்ல ஓன்று எங்க அம்மைக்க உயிர் தோழிகளில் அவங்க அம்மா ரொம்ப முக்கியமானவர் அது மட்டுமில்லாம சுரேஷ் அண்ணன் அவிய பாட்டி வீட்டுக்கு போனா நல்ல கருவாடு கிட்டும் அதுனால பாட்டி வீட்டுக்கு போறேன்னு அண்ணன் சைக்கிள் கேட்டா எங்க வீட்ல நோ எனும் பதமே இல்லை
இப்படித்தான் எனக்கு சனி உச்சத்தில் இருந்த சுப தினத்தில் சைக்கிள் வாங்க வந்த அண்ணன்கிட்ட எங்க அம்மா பிள்ளே வரும்போது அஞ்சு கிலோ உரம் வாங்கிட்டு வருவியானு சொல்ல அவன் அதுக்க என்னையும் துணைக்கு கூப்பிட அந்த முதல் பறக்கும் பயணம் அரங்கேறியது. முதல்ல கருவாடு வாங்கிட்டு அடுத்து உரத்த வாங்கிட்டு வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தோம். அவன் ஓட்ட நான் பின்னாடி உர சாக்க கைல வச்சிட்டு கேரியர்ல இருந்தேன். வீட்டுக்கு போறதுக்க முன்னாடி ஒரு குத்தற இறக்கம் எதிர்தால அஞ்சர நாரோயில் வண்டி வருது அப்பதான் அண்ணன் லேய் மக்கா சைக்கிள்ள பிறேக்கு நிக்கல கேட்டியா கீழ சாடி வண்டிய பிடிச்சு இழுலன்னு சொன்னான் இதுபோன்ற அவசர காலத்தில் இத தான் நாங்க அடிக்கடி செய்வோம் ஆனா அன்னைக்கு நான் அண்ணா இது குத்தர இறக்கம் நான் சாடுனா வண்டிய பிடிச்ச முடியாது வண்டில விழுந்து சாவதா இருந்தா ரெண்டு பெரும் சேந்து சாவுவோம்னு சொன்னேன. அப்படி சாவ ஒன்னும் மாட்டோம்ல கண்ண மூடிக்கனு சொல்லி சைக்கிள பறக்க விட்டான் கண்ண தொறந்து பார்த்தா டெலிபோன் குண்டுகுள்ள நான் என்மேல உரச்சாக்கு அதுக்க மேல சைக்கிள் அதுக்க மேல அண்ணன். அப்புறம் அங்க நின்ன மக்க எல்லாம் சேந்து நம்மள எழுப்பி விட்டாவ...................
அப்பறும் ஆறாம் கிளாஸ் படிச்சிகிட்டு இருந்த சமயத்துல வீட்ல சைக்கிள் வாங்கலாம்னு முடிவு பன்னி ஒரு முழு சைக்கிள் வீட்டுக்கு வந்துச்சு சில விதிகளோடு. அண்ணைக்கு நம்ம இருந்த ஒடம்புக்கு அதுதான் நமக்கு புல்லட்டு மாதிரி அரைக்கால் போட்டுதான் ரொம்ப காலம் ஓட்டிகிட்டு இருந்தேன்............
சைக்கிள் வீட்டுக்கு வந்தபோது வைக்கபட்ட விதிகளில் முதன்மையானது வீட்டு கேட்ட தொறந்து இருநூறு மீட்டர ஒத்தயடி பாதைல உருட்டிகிட்டே தான் போவனும் ஒரு பக்கம் குளமும் மறுபக்கம் தென்னந்தோப்பும். குளத்தில விழுந்திர கூடாதுனுதான் அப்பாரு இந்த விதிய போட்டருந்தாரு ஆனா வண்டி வாங்கி கொஞ்ச நாள்லயே வீட்டு நடைல இருந்து அரக்கால் போட்டு ரோட்டுக்கு ஓட்ட தொடஙகியாச்சு. இப்படி ஓட்டிட்டு போன ஒரு நாள்ல வண்டி வரப்புல ஏறி கொளத்துல பாஞ்சது கைல வண்டியோட ஸ்டான்டு சிக்க நான் அத மேல இழுக்க அது என்ன கீழ இழுக்க கடைசில வண்டிய விட்டுட்டு நான் கரையேறினேன் ஆனா கொளத்துல குளிச்சிகிட்டு இருந்த மக்கள் எல்லாம் ஆழுதான் முங்கிட்டான்னு விழுந்தடிச்சு தேடி கடைசில சைக்கிள பத்திரமா மீட்டாவ. சாயந்திரம் வீட்டுக்கு வந்த அப்பாரு வீட்டு வாசல்ல பள பளனு நின்ன சைக்கிள பாத்திட்டு என்னடே விசேசமா சைக்கிளு மின்னுது இப்படி வாரத்துக்க ஒருக்காயாவது தொடச்சி வச்சா வண்டி நெறைய நாள் ஓடும்னார். ஆனா உடப்பிறந்தவன் நான் சைக்கிள குளத்தில பறக்க விட்டத போட்டு உடைக்க அவரு என்ன ஏர்ல பறக்க விட்டு ஒரு கொய்யா கம்ப முழுசா உடச்சாரு.............,,,,,
இப்படியாக போய் கொண்டிருந்த சைக்கிள் பறக்க விடும் சம்பவத்திணூடே முழகால் எட்டும் காலமும் வந்துவிட்டது அடுத்தா என்ன அதேதான் கையவிட்டு வண்டி ஓட்டி பயில்வது இப்படித்தான் ஒரு முறை அதே இறக்கம்தான் உப்பு வாங்கிவிட்டு ஒரு கையில் உப்போட வந்த எனக்க இரண்டு கை விடும் ஆசை வந்தது கையை எடுக்க அழகாக போய்கொண்டிருந்த வண்டி ரோட்ட விட்டு இறங்கி பல்டி அடிக்க ஒரு கிலோ உப்பயும் சிதற விட்டு ரத்தம் ஒழுக ஒழுக சைக்கிள உருட்டிகிட்டே வீட்டுக்கு வந்தேன். அம்ம பதறி போய் சானாங்கி சுட்டு வைக்க வலில படுத்திருந்தேன். ஒரு மணிநேரம் கழித்து வந்த அப்பா வைது தள்ளுனாரு குளத்தங்கரைல நின்ன அவருக்க குடிகார மாமன் உப்போடு சேத்தி சைக்கிளயும் பறக்க விட்ட கதைய அப்பிடயே விளம்பியுருக்கிறார்.......
இது நடந்து இரண்டு வாரம் இருக்கும் பிறந்தநாள் வந்தது அப்ப பள்ளியடத்துல முட்டாய் கொடுக்கனும்னு நான் கேக்க எங்க அப்பா இருபது ரூவா தந்து விட்டாரு நான் இரண்டாமவனா தொனைக்கு வானு கூப்ட அவரு ஒருத்தன் போயிட்டு வாங்கல டபுள்ஸ் அடிக்க இன்னும் வளரனும்னு சொல்ல அவருக்கு நாங்க முன்னாடி டபுள்ஸ் அடிக்க படிச்சு பலநாளு ஆவுது என்பதை எப்படி சொல்லனு தெரியாம அவரு கண்ண வெட்டி இரண்டுபேருமா போயிட்டோம். முட்டாய வாங்கிட்டு திரும்பி வர வழில ஊருல உறக்கமே வராம நடுஇராத்திரியும் வயல்வரப்புல திரியும் ஒரு கிழவி சைக்கிள்ள விழுந்துடிச்சு பட்ட கால்லயே அடிபட்டு ரத்தம் வடிய அரம்பிச்சு........
அங்க கினத்தடில இருந்த பொம்பளையளுவல் எல்லாம் கிழவி மேலதான் தப்பு பிள்ளே நீங்க பாத்து வீட்டுக்கு போங்கனு சொல்ல தம்பிட்ட சைக்கிள கொடுத்திட்டு தோப்புக்குள்ளோடி வீட்டுக்கு போன என்ன பச்ச கிளாஞ்சிய கையில் பிடித்தபடி எங்க அப்பா வரவேற்றார் ஆமா வளக்கம்போல் சைக்கிள் பறக்க விட்டதற்கான மெடல தருவதற்காக.........
இப்படி பல இடத்தில் சைக்கிள் பறக்க விட்ட எனது வாழ்வில் மறக்க முடியாத தரமான சம்பவம்னா கடைசி கடைசியா சைக்கிள் பறந்தது ஒன்பதாம் க்ளாஸ் படிக்கும் போதுதான. அப்ப எங்க அப்பா கடை வச்சிருந்தார் கிருஸ்மஸ் நேரம் அதனால பட்டாசு விக்கலாம்னு சிவகாசில இருந்து கொஞ்சம் பட்டாச இறக்கியிருந்தாரு நல்ல தரம்பிருச்சி பார்சல் கட்டி சைக்கிள்ள ஏத்திட்டு கிளம்பினா எங்க அப்பா அதே ஒத்தயடி பாதைல வண்டிய வரப்பு மேல விட்டு சைக்கிள் பட்டாசு உட்பட எல்லாத்தயும் ஏர்ல பறக்கவிட்டு குளத்துல இருந்து பட்டாசு பார்சல மட்டும் கைல தூக்கிட்டே கரயேறுனாரு.........
நான் பொங்கி வந்த சிரிப்ப அடக்கிட்டு அப்பாருக்கு உதவியா போய் பார்சல கையில வாங்குனேன் ஆனா ஒன்னு அன்னைக்கு மட்டும் நான் சிரிச்சிருந்தேன் அவரு பறக்க விட்ட சைக்கிளுக்கும் சேத்து என்னதான் பறக்க விட்டுருப்பாரு............
#கிழவனார்
No comments:
Post a Comment