Pages

Sunday, July 24, 2016

குளமும் குளம் சார்ந்த நிலமும்

     குளமும் குளம் சார்ந்த நிலமும்

       

குளங்களும் குளம் சார்ந்த நிலங்களும் நிறைந்த பகுதியில் பிறந்தவன் வரம் பெற்று வந்தவன்.மண் வாசனையும் மீன் வாசனயும் நீர் வாசனையுமாக வாழ்க்கை வசந்தமாகவே இருக்கும்.

    விளையாட்டோ கல்வியோ எதுவாயினும் வாழ்க்கையின் முதல்படி குளக்கரை படிகளை தொட்டே தொடங்கும்.நீச்சல் படிக்கும் முன் பலமுறை மூழ்கி எழுந்திடும் வாழ்க்கையது சிறுவயதில் ஒரு முறையேனும் குடம்பத்தினரை பதைபதைக்க வைத்து வயிற்று நீரோடு ஏதோவொரு மருத்துவமனையில் விழுந்து எழுந்திடும் வாழ்க்கையது.மணிக்கனக்கில் நீந்தலும் விளையாட்டுமாக இளம்  வாழ்ககையின் பல பக்கஙகளை மகிழ்ச்சியுடன் கடத்திச்செலலும்.........

      நீர் விளையாட்டு என்றால் இன்றைய அலங்கார நீர் விளையாட்டு கூடங்களில் காசை கரியாக்கும் விளையாட்டுகள் அல்ல அதைவிட பலமடங்கு இன்பம் பெற்றுத்தரும் சாகச விளையாட்டுகள்.ஒற்றைத் தென்னைமரத்தின்  முழு உயரத்தைத் தொட்டு பல கரணங்கள் அடித்து நீரை தொடும் சாகச வளையாட்டில் கிட்டும்  இன்பம் வேறெதிலும் கிட்டவே கிட்டாது.நீரில் மூழ்கி ஆழம் சென்று காதைடைக்க கட்டி மண்ணோ அல்லது ஓட்டாஞ்சில்லோ எடுத்து வரும் முயற்சி இருக்கிறதே இன்றைய யோகாவின் அத்தனை மூச்சிப் பயிற்சிகளயும் கடந்து நிற்கும்.இவ்விளையாட்டின் உடனடி பயனே நீரில் விழுந்த துணி சோப்பை எடுத்து பத்திரப்படுத்தி  வீட்டித்துவைத்தலில் இருந்து தப்பிப்பதே.......

     குளத்தில் மீன்பிடி என்பது ஒரு பெரும் கலையே முதன்மதலில் மீன் பிடித்தபோது ஏழு வயதிருக்கும் வயலில் பயறு பறிக்க குடும்பத்துடன் சென்றிருந்தோம் காலை நேர இளம் வெயிலில் பயிறு  பறிப்பது என்பது ஒரு ஏழு வயதுச்சிறவனுக்கு பெரும் வேதனையான ஒரு செயலாகத்தான் இருக்கும் காலும் மதுகும் வலி கொடுக்க தொடங்கியவுடன் மூளை வேலை செய்யத் தொடங்கிவடும்.பெரும் வயிற்றுவலியில் ஆற்றைக்கடந்தே வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக அப்பாவின் தூண்டிலை எடுத்துக்கொண்டு குளத்தில் எறிய இறங்கியாயிற்று மிகச்சுழுவாக ஒருகை அகல ஸ்லோபி மீன் வந்து சிக்கியது.மீனும் கையுமாக அப்பம்மாவை பார்த்து ஒடினேன் சிலுப்பி நின்ற அந்த மீனை விடுவித்து அப்பமா  சொன்னது கொப்பன் பாத்தான்னா கால ஒடச்சிருவான்னு.அன்று தொடங்கிய மீன்பிடி பல மீன்பிடி திருவிழாக்களை கடந்தது........  

    மீன்பிடி திருவிழாவென்றால் வலைவீசிகள் குளத்ததை நிரப்பி நிற்கும் வரத்து மீன்களை பிடித்து செல்லும் மீன்பிடி வியாபாரம் அல்ல.மே மாதம் குளத்ததை சுத்தம் செய்ய மொத்த நீரையும் திறந்துவிட்டு ஊர் கூடி மீன்பிடிக்கும் திருவிழா அது.குளம் திறந்து விடப்பட்டு முட்டளவு நீர் இருக்கும்போது மொத்த உறவுகளும் வீட்டை நிறத்திருப்பார்கள்.அத்தைகளும் மாமன் களும் மச்சான்களுமாக வீடு நிறைந்திருக்கும்.வாளியில் மீன் பிடித்து வீட்டு முற்றத்தில் கொட்டும்போது மீன் துள்ளும் அழகே தனி.வீட்டை சுற்றிய நிலப்பரப்பு முழுவதும் மீன் மணக்கும் காலமது.ஸ்லோப்பி,கைலி,கிளுறு,தேளி,விலாங்கு,விராலு என பல்வகை மீன்களின் சங்கமாக வீட்டின் அடுப்பங்கறை மாறிடும்.
இன்று யாரோ ஒருசிலர் வீசிடும் வலையில் சிக்கிய மீன்கள் நெடுஞ்சாலைகளில் கடும் விலைக்கு விற்கபடுகின்றன.நீர்நிறைந்த நிலப்பகுதியை சார்ந்தவன் வேடிக்கை பார்த்து நிற்க்கும பெரும்சோகமாக மாறிவிட்டது.........


     குளங்களை தன் ஊரிலே பெற்றவன் அடையும் மகிழ்ச்சியேிலே ஒன்று ஒவ்வொரு முறையும் குளம் வற்றும்போதும் ஒரு வண்டி தொழியாவது(மண்) அள்ளி தன் வீட்டு தென்னைக்கு வைத்தது விடுவதுதான்.அந்த தொழி அள்ள அடையாளம் இட்டு இடம்  பிடிக்க நடக்கும் சண்டைகள் வெட்டு குத்து வரை போன காலங்களும் உண்டு.இன்றும் நிலமும் தென்னும் இல்லை தொழியும் இல்லை குளமும் இல்லை என பல ஊர்கள் மாறிவிட்டன.குளம்வற்றிய கரையோரங்களில் தேந்நீருற்றின்  சுவையை மிஞ்சிய நன்னீர் சுவை எங்கும கிட்டியதில்லை.........

     தென்னை மரங்களும் பனை மரங்களும சூழ  மன்கரையில் வாலிப வயதவர்களின் பலகாதல் கதைகளையும இளங்காளைகளின் வீரத்தையும் குடும்பங்களின் பாசத்தையும உறவு ஒன்று கூடலின் அடையாளத்தயும் கொண்ட குளக்கரைகள் பல இன்று கருங்கற்கரையாக காங்கிரீட் படிகளாக மாறி நிற்கிறது.........

     
குளமும் குளம் சார்ந்த நிலமும் பெற்றவனின் வாழ்க்கை  பெரும் ஓட்டத்தை அடையும்போது பால்கனியில் தேனீர் பருகும்வேளையில் கண்டுகளிக்கும் வெறும்காட்சி பொருளாக மாறியே போய்விட்டது குளத்தங்கரைகளின் என்னிலா அழகு..........

No comments:

Post a Comment