சுதந்திரத்தை கொண்டாடுவோம்.
ஆம் சுதந்திரம் எனும் மாய சொல்லை எட்டுத்தி்க்கும் ஒலிக்க மேள தாளங்களுடன் கொண்டாடுவோம்.நாம் பெற்றுவிட்டதாக கருதிக்கொண்டிருக்கும் சுதந்திரம் எனும் மாயையை உலகமெங்கும் அறிந்திட கொண்டாடுவோம்.....
ஜிஷாக்களயும்,நிர்பயாக்களயும் மிருகத்தனமாக மேய்ந்துவிட்டு கத்தியோ கடப்பாறையோ ஏற்றிக்கொன்றாலும் தையல் மிஷினோடு கிடத்திடும் சுதந்திரத்தை பார் போற்ற கொண்டாடுவோம.........
மதுபோதையில் ஜஸ்வர்யாக்கள் முனுசாமிகளை கொண்று சிரிக்கும்போது சிறப்பு வழக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே ஒரு லட்சம் காந்தி நோட்டுக்களில் கிடைத்திடும் சுதந்திரத்தை கொண்டாடுவோம்.........
மனிதருக்கும் மானுக்கும் பெரும் வித்தியாசம் இல்லை மனித வேட்டை என்றாலும் மான்வேட்டை என்றாலும் மான்கான்களுக்கு அள்ளி கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை கொண்டாடுவோம்.......
துப்பாக்கி என்ன வெடிகுண்டே மடியில் கட்டி நடந்தாலும் கனமில்லாமல் ஜெயில் கம்பிகளில் இருந்து தத்துகளுக்கு கிடைக்கப்பெறு்ம் சுதந்திரத்தை கொண்டாடுவோம்.........
அறுபத்தியாறு கோடியோ அறுநுாறு கோடியோ எந்த ஊழலாய் இருந்தாலும் சிரித்தபடியோ கணக்குப்பிழை கொண்டு சுதந்திரம் சாத்தியப்படும்போது அதை மறவாமல் கொண்டாடுவோம்...........
கோடிகள் கடன் வாங்கி கட்டமுடியாமல் தினறும்போது நாட்டு விட்டு மேல் நாட்டில் குடியேற இந்திய குடிமகனுக்கு கிடைத்திட்ட சுதந்திரத்தை கொண்டாடுவோம்......
ஏதும் அறியா கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துவிட்டு எக்காளமாய் அம்மா விற்காக பேருந்தை கொளுத்தியவன் என பதாகைகள் தொங்கவிடும் பெரும்சுதந்திரத்தை பெருமையுடன் கொண்டாடுவோம்.........
போலி என்கவுன்டரெல்லாம் எத்தனை நடத்திடினும் தலைமை படியேறி அலுங்காமல் குலுங்காமல் கட்சி வளர்த்திட ஷாக்களுக்கு கிடைத்திட்ட சுதந்திரத்தை கொண்டாடுவோம்........
பதஞ்சலிகளுக்கும் ஜக்கி சாமியார்களுக்கும் ரவிசங்கர்களுக்கும் பணம் வளர்க்க கிடைத்திட்ட சுதந்திரத்தை கொண்டாடுவோம்......
ஏறுபூட்டி நிலத்த பண்படுத்தி உணவு உற்பத்தி செய்திடும் கடவுள்கள் வாழவழியில்லாமல் கயிற்றிலோ விஷப்புட்டயிலோ அடைந்திடும் சுதந்திரத்தை கொண்டாடுவோம்.......
விவசாயி எதை செய்யவேண்டும் எந்த மாட்டை வளர்க்க வேணடும் என்பதை முடிவு செய்ய எங்கிருந்தோ வந்த பீட்டாக்களுக்கு கிடைத்திட்ட சுதந்திரத்தை கொண்டாடுவோம்......
நிலவளங்களை காக்க காலம்காலமாய் போராடும் நிலத்துச்சொந்தங்ளை மாவோயிஸ்ட் எனும் முத்திரை குத்தி வேட்டையாட வழிவகுத்த இந்தச சுதந்திரத்தை கொண்டாடுவோம்.....
பிஆர்பிக்களுக்கும் வைகுன்டராஜன்களுகும் இயற்கையை திருட கிடைத்திட்ட சுதந்திரத்தை கொண்டாடுவோம்..........
உண்மையை திரித்திச்சொல்லி வயிறு வளர்க்க ஊடகங்களுக்கு கிடைத்திட்ட சுதந்திரத்தை கொண்டாடுவாம்.........
நாட்டின் ஒரு பிரிவு மக்களை வேட்டையாடியும் தோலுரித்தும் கற்பழித்தும் கொன்றுகுவித்தும் அடிமைபடுத்த உரிமை கிடைத்த இந்த நன்னாளை கொண்டாடி தீர்த்திடுவோம்.........
சாதிவெறி சுதந்திரத்தை கொண்டாடுவோம்......
மதவெறி சுதந்நிரத்தை கொண்டாடுவோம்......
மாட்டுவெறி சுதந்திரத்தை கொண்டாடுவாம்.....
மதவெறி சுதந்நிரத்தை கொண்டாடுவோம்......
மாட்டுவெறி சுதந்திரத்தை கொண்டாடுவாம்.....
நாம் சூறயாடபட்டுக் கொண்டிருக்கிறோம் எனும் சிறு நினைவும் இல்லாமல் மூவர்ன கொடியால் கண்ணை கட்டிக்கொன்டு இந்த ஹிந்தியம் சொல்லும சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்வோம்............
மொழிவாரி இனக்குழுக்களை ஒன்றினைத்து சர்வாதிகாரம் செய்ய ஹிந்தியத்திற்கு கிடைத்திட்டு சுதந்திரத்தை மேளதாளம் எட்டுத்திக்கும் ஒலிக்க கொண்டாடுவோம்.................
போலோ பாரத் மாதாகி ஜெய்........!
No comments:
Post a Comment