Pages

Sunday, September 18, 2016

போராட்டங்களும் பாஜகவும் அதன் தலைவர்களும்.............
காவிரி நதிநீர் பிரச்சனையில் அடிமைகள் பாசறைய தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஒருங்கினைந்தோ அல்லது தனியாகவோ தங்கள் எதிர்ப்பையும் கருநாடகத்தில கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி தாக்குதலை கண்டித்து போராட்டங்களயும் முன்னனெடுத்து வருகின்றன ஆனால் பாஜகவின் தலைவர்கள் சிலர் போராட்டங்கள் தேவையற்றது மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படுமென்றும் முற்றுகை போராட்டங்களில் தங்கள் கட்சி எக்காலத்திலும் கலந்துகொள்ளாது எனவும் தங்களை ஒழுக்க சீலர்களாக காட்டிக்கொள்ள முனைகிறார்கள்............
இந்த நேரத்தி்ல் 2014க்கு பிறகு பிறந்த அக்கட்சியின் 'காவி'யத்தவைர்களுக்கும் தொணடர்களுக்கும் சில பழைய செய்திகளை நியாபகப்படுத்த வேண்டி உள்ளது. கடந்த நாடாடாளுமன்று தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அதாவது 2014ன் தொடக்கத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்கு வியுகம் அமைத்துக்கொண்டிருந்த நேரத்தில் நடந்த சில போராட்டங்கள் அதாவது காவிரி நதிநீர் விடயத்தில் போராட்டங்களே தேவையற்றது போல் சிந்தனயை தூவி வரும் பாஜக முன்னெடுத்த சில போராட்டங்கள் துளிகள்............
2014ன் தொடக்கத்தில் குமரி மேற்கு மாவடத்தின் ஒரு பள்ளியில் நடந்த சிறுவர்களுக்கு இடையேயான சிறு தகராறு அதாவது இரு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நடந்த வகுப்பு அளவிலான் சிறிய கைகலப்பை மதச் சாயம் பூசி பள்ளிக்கு வெளியே இந்து-முஸ்லீம் சண்டையாக மாற்றி தக்கலை நகரத்தை ஸ்தம்பிக்க வைத்து இந்து முன்னனியுடன் கைகோர்த்து கிட்டதட்ட வேட்பாளர் இவர்தான் என முடிவு செய்யப்பட்ட இந்நாளய மத்திய மந்திரி தலைமையில் பெரும் போராட்டம் நடத்தினார்கள் அறிவிக்கப்பட்ட அந் போராட்டத்தின் முந்தய நாள் தோட்டிகோடு சந்திப்பில் இரெண்டு பேருந்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன(அன்று எங்க அக்கா தமிழிசை போராட்டத்தில் கலந்துகொள்ளவில்ல ஏனென்றால் அன்றைய மாநில தலைவர் அவரில்லை)..........
அதேபோல 2013 ஏப்ரல் 22தேதி பாஜகவின் மூத்த தலைவர் திரு.எம்.ஆர் காந்தி அவர்கள் அதிகாலையில் நடைப்பயிற்சி சென்று திரும்பும்போது ஆயர் இல்லச் சாலையில் வைத்து வெட்டப்படுகிறார்(?).அன்று குமரி மாவட்டத்தில் மட்டும் உடைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்ககை 33(ஆங்கில நாளேடு டைம்ஸ் ஆப் இந்தியாவின் கணக்கு இது).அதன் பின்னர் போராட்டம் ஆர்ப்பாட்டம் என குமரி மாவட்டமே அமளி துமளியானது திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த இரு வரை பிடித்து அந்த வழக்கையே இழுத்து மூடினார்கள்.இன்று வரை நாகர்கோவில் டீக்கடைளில் அது குடும்ப தகராறில் நடந்தது என்றும் பிஜேபியின் தேர்தல் நாடகம் என்றும் பல கதைகள் ஓடும்......
ஜீலை மாதம் 2013 ஆம் வருடம் சரியாக மூன்றுமாதத்தில் சேலம் பாஜக பிரமுகர் வி.ரமேஷ் கொல்லப்படுகிறார். அதை வைத்து தமிழ்நாடு முழுவதும் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களது திட்டம் நிறைவேறியது திருச்சியிலும் குமரியிலும் மட்டும்தான்.ஜீலை 23 ஆம் தேதி கணக்குபடி குமரியில் மட்டும் உடைக்கப்பட்ட பேருந்துகள் 36 கைது செய்யப்பட்டவர்கள் 136 பேர்.....
ஆக மூன்றே மாதத்தில் அவர்கள் உடைத்தெறிந்த பேருந்துக்களின் எண்ணிக்கை 69. அது பொதுச்சொத்து இல்லை போலும் வடிவேலு படித்தது போல இத உங்கள் சொத்து என படித்து விட்டார்களோ என்னவோ.... அதே அன்று தான் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவரான பார்த்திபன் இப்படிச் சொன்னார் பிஜேபி இந்துமுன்னனி மற்றும் விகெச்பி தொண்டர்களின் உனர்ச்சி கொந்தளிப்பில்(இதுதான கொண்டையை மறைக் மறந்த மூமன்ட்) தவறு நடந்துவிட்டதென்று. ஆக அவர்களுக்கு உணர்ச்சி கொந்தளிப்பு வந்தால் பேருந்தை உடைப்பார்கள் ஆனால் தமிழனின் பொது பிரச்சனையில் ஒரு பொதுநல உணர்வில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது மக்கள் தொந்தரவு..........
இன்று தமிழிசை அக்கா அவர்கள் ஏதோ உணர்ச்சியை உசுப்பேற்றி விட்டு தற்கொலக்கு தூண்டுகிறார்கள் என்று கண்ணீர் விடுகிறார்கள் தொண்டர்களுக்கு தான் முந்தய வரலாறு தெரியாதென்றால் தலைவருக்குமா.....?ரமேஷ் கொல்லபட்டதை தொடர்நது நடந்த போராட்டங்களின் போது பாஜக சேர்ந்த 51 வயது பெண்மனி தீக்களித்தார் என்று வந்த செய்தி என்ன உணர்ச்சி உசுப்பேற்றல் இல்லயா..........?
இதுபோல தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் உள்ள போராட்டங்களும் பேருந்து உடைப்புகளும் ஏராளம் அதில் எல்லாமே மதரீதியாக முன்னெடுக்கப்பட்டவை அதாவது அவர்கள் போராட்டம் செய்தாலே பொதுச்சொத்து சேதம்தான் அது கர்நாடகவாக இருந்த தாலும் சரி தமிழ்நாடாக இருந்தாலும் சரி....
ஆக செய்த போராட்டங்களெல்லாம் ரௌடித்தனமும் அழிச்சாடியங்ளும் தான் இதில் இவர்களது நியாயம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் போராட்டங்களை ஆதரிக்கமாட்டார்களாம்.......
இதில் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு வண்முறையில் ஈ்டுபட வேண்டாம் என்று தமிழிசை அக்காத்தரப்பில் இருந்து அறிவுரை வேற....சொல்லமாட்டார்களா பின்ன வண்முறை அவர்களின் சுயலாபத்திற்கு உரியதாயிறே்றே பெங்களூரில் வண்மறையை தாங்களே கட்டிவிழ்த்து விட்டால் இங்கே கட்சியினர் பொத்திகிட்டுத்தான் இருக்கனும்..........
அதேப்போல் முன்னுக்குப்பின் முரன் என்பதற்கு நம்ம பாஜக தலைவர்களைப்போல பெரும் எடுத்துக்காட்டு யாரும் இருக்கமாட்டார்கள் ஒருத்தர் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்பார் அடுத்தவர் முற்றுகைப் பேராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்பார் இனனொருவர் போராட்டம் வெற்றி வெற்றி என்பார் என்ன போராட்ட நாடகமோ தெரியவில்லை.......
நீங்கள் போராட்டம் நடத்துங்கள் நடத்தாமல் போங்கள் நாடகம் ஆடுங்கள் ஆடாமல் போங்கள் ஆனால் நீங்கள் என்னவோ அன்னை தெரசாவின் வாரிசுகளப்போல் உங்களை நீங்களே மெச்சிக்கொள்ளாதீர்கள்........
தமிழ் நாட்டில் மட்டுமல்ல எந்த ஊரிலும் புனித வேடம் போட பிஜேபியால் முடியது என்பதை என்றைக்குதான் அதன் 'காவி'யத்தலைவர்களும் தொணடர்களும் புரிந்துகொள்ளப்போகிறார்களோ........
இப்போது நமக்கு இருக்கம் பயமெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வேறு நெருங்கியாகிவிட்டது இவர்களின் வேறென்ன்ன நாடகமெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறதோ.............

No comments:

Post a Comment