போத்தீஸ் நாகர்கோவிலின் அடையாளமா.....?
தொண்ணூறு வருடங்களுக்கு முன் துணி வியாபாரத்தை தொடங்கி இரெண்டாயிரம் கோடிக்கு வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கியது போத்தீஸின் பெருமைமிகு அடையாளமாக இருக்கலாம் ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் நாகர்கோவிலுக்கு நாங்கள் தான் இனி அடையாளமென முன்னிறுத்திக்கொள்வதில் எவ்விதத்தில் நியாயம்................?
இந்திய தீபகற்பத்தின் தென்முனையில் மலைகளால் சுழப்பட்ட எழில் சுழ்ந்த நகரம் என்பதே எங்களின் தனியடையாளம்தான்......
சேரர்களும்,பாண்டியர்களும்,சோழனும் வளமிக்க இந்த நாஞ்சில் பூமியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முட்டி மோதிக்கொண்டார்கள் என்பதே பெரும் வரலாறு .......
இலக்கியங்களின் கூறப்படும் பழந்தமிழரின் பெரும் வர்த்தக நகரங்களில் ஒன்றான கோட்டாறை சுற்றி தானே வளர்ந்து நிற்கும் நகரமிது என்பது தான் எங்களின் அடையாளம்.........
எம் நகரத்தி்ன் மத்திமத்தில் அமைந்திருக்கும் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையை தாஙகி கொண்டு பல்தரப்பட்ட மக்களால் பக்தியிடன் கொண்டாடப்படும் நாகர்களால் நாகராஜனுக்காக கட்டப்பட்ட நாகராஜா கோவில் நாகர்கோவிலின் பெரும் அயைாளம்.........
மஹாராஜா ஸ்ரீமூல திருநாளும் நாஞ்சில் நாட்டு மக்களும் இனைந்து நூற்றிருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட ஊசலைக்கொண்டு கட்டியமைத்த இன்றும் கம்பீரமாக வீற்றிருக்கும் மணிக்கூன்டு நாகர்கோவிலின் தனி அடையாளம்.........
வேணாட்டை தன் திருச்சிலுவையால் பதகர்களிடமிருந்து காப்பாற்றிய புனித சவேரியாருக்கு உன்னி கேரளவர்மர் கொடையாக கொடுத்த சிறு நிலப்பரப்பில் நானுாற்றி பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பன்மதமக்களாலும் பெரும்பக்தியிடன் கொண்டாடப்படும் சவேரியார் ஆலயம் எம்மண்ணின் பெருமைமிகு அடையாளம்......
கிரேக்க கட்டடகலையை தழுவி இருநூறு ஆண்டகளக்கு முன் கட்டப்பட்டு இன்றுவரை ஆசியாவின் மிகப்பெரும் மற்றும் பழைமையான கிறுத்தவ ஆலயங்களில் திகழும் தென்னிந்தய திருச்சபையின் கற்கோவில் நாகர்கோவிலின் அடையாளம்........
ஒற்றைச்சலவைக்கல்லால் இருபத்திரண்டு அடிக்கு உயர்ந்து நிற்கும் அனுமாரையும் பதினெட்டு அடி உயர ஒற்றைக்கல் நான்குதூண்களயும் தாங்கி நிற்கும் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவிலே எம் மண்ணி்ன் பெரும் அடையாளம்.........
ஒட்டுமொத்த தமிழகமே வேண்டாமென துாக்கி எறிந்த பெரும் தமிழன் காமராஜரை கருநாகங்களின் சூழ்ச்சிகளை மீறி(கிட்டு கொலையும் கருனாநிதியையும் தெரிந்தவர்களுக்கு இது புரியும்)தன் நெஞ்சில் தாங்கிய நகரமிது அதுவே எங்கள் பெருமைமிகு அடையாளம் தான் இன்று வரை தாங்கிக்கொண்டிருக்கிறோம் அதனால்தான் காங்கிரஸ் எனும் பேரியக்கம் பிழைத்துக்கிடக்கிறது தமிழ்நாட்டில் .......
சுதந்திர இந்தியாவிற்கே முன்பே இங்கே கல்வி வளர்த்து உலகமெங்கும் பெரும்நிறுவனங்களில் எம்மவர்கள் வெற்றிககொடி நாட்ட காரணமாய் இருந்த இருந்துககாண்டிருக்கும் கார்மல் பள்ளியும்,ஸ்காட் கல்லூரியும் ,சேதுஇலக்குமிபாய் பள்ளியும்,தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லாரியும் தான் நாகர்கோவிலின் உண்மை அடையாளம்.....
தமிழகத்தின் மாசற்ற கல்வி தந்தை காமராஜரை நெஞ்சில் கொண்டதால் தொண்ணூற்றைந்து சதவிகிதம் கற்றவர்கள கொண்ட நகரமிது உலகமெங்கும் பெரும் கல்விக்கூடங்களுக்கு ஆசிரியர்கள இன்றுவரை அளித்துக்கொண்டிருக்கும் நகரமிது இதுதான் எங்களின் அடையாளம்.....
சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகியும் பெண்குழந்தைகளை வளர்போம் வளர்ப்போம் என்று தேசமே விளம்பரம் மூலம் விழிப்புனர்வை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்க பெண் குழந்தை பிறந்தால் உச்சி முகர்ந்து கொண்டாடி தீர்க்கும் சமுதாயம் எங்கள் நாஞ்சில் சமுதாயம் ஆயிரம் ஆண்களுக்கு ஆயிரத்து நாற்ப்பத்தைந்து பெண்கள் கொண்ட ஒரே திருநகரமிது இது தான் நாங்கள் பெருமை பட்டுக்கொள்ளும் அடையாளம்.......
தமிழ்ச்சினிமாவை விசால்களும் சிவகார்திகேயன்களும் அட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையி்ல் எனறென்றைக்கும் தமிழ் சினிமாவின் பெரும் ஆளுமைகளான நாகர்கோவில் சுடைலைமுத்து கிருஷ்னனும்(என்.எஸ் கிருஷ்னன்),கிருஷ்னன்கோவில் வெங்கடாச்சல மகாதேவனும்(கேவி மகாதேவனும்) தான் எம்மண்ணின் கலையடையாளங்கள்.........
மலையாள சினிமாவின் பிதாமகர்களாகிய ஜோசப் செல்லயா டேனியேல் நாடாரும்(ஜேசி டானியேல்),திக்குறிச்சி சுகுமாறன் நாயரும் இம்மண்ணின் அடையாளங்களாக காலத்தால் அழியாமல் நிற்பவர்கள்........
இலக்கியத்தின் பெரும் ஆளுமைகள் கவிமணியும்,சுந்தர ராமசாமியிம்,தோப்பில் முகமது மீரானும்,சதாவதானி சேக் தம்பி பாவலரும், பொன்னீலனும்,நாஞ்சில் நாடனும் தந்தது இம் மண்ணின் அடையாளம் பெரும்புலவன் வள்ளுவனே எம்மண்ணின் அடையாளம்தான் என்கிறது வரலாறு.............
எல்லை மீட்பு போராளி தானுலிங்க நாடார் எம்மண்ணின் அடையாளம்,குமரி தந்தை மார்ஷல் நேசமணி எம் அடையாளம்,உறுதிமிகு கொள்கையுடன் ஹிந்தியத்தின் அணு உலைகளை எதிர்த்து பெரும் போராட்டத்தை முன்னடுத்து இன்றுவரை அதில் உறுதியாய் நிற்கும் சுப உதயகுமார் எம் மண்ணின் மானபுமிகு அடையாளம்..........
உணவுக்கு தமிழ் கூறம் நல்லுலகால் போற்றப்படும் நாஞ்சில் நாட்டு உணவுகளே எம்மண்ணின் அடையாளங்கள்.........
இப்படி கல்விக்கும், கலைக்கும்,தமிழுக்கும், அரசியலுக்கும்,அறிவுவளர்ச்சிக்கும் ,கட்டிடக்கலைக்கும்,பெண்ணியத்திற்கும், பெரும் அடையாளங்ள் பல உண்டு எம் நாகர்கோவில் மண்ணுக்கு.........
இன்ற மிக அபத்தமான நிர்வாகத்தால் எம் நாகர்கோவில் பொலிவிழந்து போய் கிடக்கலாம் அதற்காக அந்த அபத்தமான நிர்வாகத்தின் துணையுடன் விதிகளை வளைத்தொடித்து ஏழு மாடி கட்டிடம் கட்டிவிட்டால் போத்தீஸ் புது அடையாளம் ஆகி விடுமா........?
துணிவிற்க வந்தால் துணி விற்று கல்லா கட்டுங்கள் அடையாளம் நாங்ள் தான் என்று கூவி திரியாதீர்கள்.........
நாகர்கோவிலின் விதிமீறல்களில் கட்டப்பட்ட பெரிய கட்டிடம் என பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.....
நாகர்கோவிலின் போக்குவரத்து இடையூறுகளின் புது அடையாளம் என பெருமை பட்டுக்கொள்ளுங்கள்...........
பல சிறுநிறுவனங்ளை கபளீகரம் செய்யப்போகும் புது அடையாளம் என மார்தட்டிக்கொள்ளுங்கள்.....
தயவு செய்து பெருமைமிகு எம் மண்ணின் அடையாளம் இனிமேல் விதிமீறல்களின் முழு அடையாளமான நீங்கள் தான என கதை வளர்க்காதீர்கள்............
வலியுடன்
நாகர்கோவில் தமிழன்.....
நாகர்கோவில் தமிழன்.....
No comments:
Post a Comment