உமையம்மாள் ராணி எனும் ஶ்ரீ அஸ்வதி திருநாள் # 1
வேணாட்டு வரலாற்றில் எத்தனையோ ராணிகள் இருந்திருக்கிறார்கள் பேரழகிற்கும் பெரும் வீரத்திற்கும் அடையாளமான ராணிகள் அவர்கள். இவர்களில் வரலாற்றில் இன்று வரை விவேகத்திற்கும் வீரத்திற்கும் தடைகளை உடைப்பதிற்கும் பெயர் பெற்றவர் உமயம்மை எனும் அஸ்திவதி திருநாள் மகாராணி. திருவிதாங்கூர் வரலாற்றில் மார்த்தாண்ட வர்மா எத்தனை முக்கியமானவரோ அதேபோன்று மிக முக்கியமானவர் அவர். மார்த்தாண்ட வர்மாவின் வெற்றிகரமான ஆட்சிக்கு பாதை அமைத்து கொடுத்த பேரரசி அவர். குயின் ஆப் அஷயுர்(Ashure)/ உமயம்மை ராணி என்று அழைக்கப்பட்ட ஆற்றிங்கலின் ராணியான அஸ்வதி திருநாளின் சில பக்கங்களை எழுதலாம் என்று தோண்றியது.......
கிபி 1630 ஆம் ஆண்டு கொச்சி வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தல் வசித்து வந்த கொல்லத்தின் உன்னி கேரள வர்மாவின் சகோதரிகளில் ஒருவரான மகயிரம் திருநாள் வேணாட்டு அரச குடும்பத்திற்கு தத்து எடுக்கப்படுகிறார்.அவருக்கு
இரண்டு பிள்ளைகள் ஒன்று ஆதித்யா வர்மா மற்றொன்று அஸ்வதி திருநாள் அவரது
தந்தையை பற்றிய குறிப்புகள் இல்லை மருமக்க தாயத்தை பின்பற்றிய தாய்வழி
சமுதாயத்தில் தந்தை பெயர்கள் பெரியவிடயமில்லை இருபிள்ளைகளுக்கும் ஒருவரே
தந்தையாக இருக்கலாம் அல்லது இருவேறு ஆட்களாக இருக்கலாம். மகயிரம் திருநாளை
பற்றிய குறிப்புகள் பெரிதாக இல்லை சில சமாதான பேச்சிவார்த்தைகளில்
ஈடுபட்டது தவிர்த்து அவரது செயல்பாடுகள் வியக்கதக்கவையாக இல்லை. ஆனால்
மகயிரம் திருநாளின் மகளும் ஆற்றிங்கலின் இளைய ராணியான அஸ்வதி திருநாளை
பற்றிய குறிப்புகள் அதிகமாக பதியபட்டுள்ளன............
ஆற்றிங்கல் ராணியன் மகனான ஆதித்யா வர்மா வேணாட்டின் மன்னனாகவும் அஸ்வதி திருநாள் ஆற்றிங்கல் இளைய ராணியாகவும் பொறுப்பேற்கின்றனர். ஆற்றிங்கலின் இளையா ராணியாக இருந்தாலும் வீரத்தில் சிறந்து விளங்கியதால் மகயிரம் திருநாளை விட மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார். ஆற்றிங்கல் இளையராணியாக இருந்தபோதே தனக்கென தனியாக ஏழாயிரம் பேர் கொண்ட நாயர் படையை வைத்திருந்தார் என்று ஒரு குறிப்பு சொல்கிறது.......
ஆற்றிங்கள் இளைய மகாராணியார் அஸ்வதி திருநாளினை பற்றி ஒரு தொடர்ச்சியாக எழுதலாம் என்று இருக்கிறேன் இது முதல் பதிவு அடுத்த பதிவில் அவரது
காதல் கதைகள்
போர் தந்திரங்கள்
அவரது தத்தெடுப்புகள்
அவரது காலத்து தொழில் வளர்ச்சி
அவரை சுற்றும் புரளிகள்
இறுதியாக அவரது சாதி ஆராய்ச்சியும்..........
திரவாங்கூர் மன்னர்களின் தலைமயிலான வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய ஸ்டேட் மேனுவல் அனைத்திலும் உமையம்மாள் என்று குறிப்பிடப்படும் இவர் அந்த காலத்தில் உள்ள அனைத்து டச்சு மட்டும் பிரிட்டிஷ் குறிப்புகளில் அஸ்வதி திருநாள் என்று தான் குறிப்பிடு படுகிறார்........
தொடரும்....
படிக்க:
1.The Geneology of sovereigns of Travancore- s. Parameshwara Iyer.
2. The kulesekhara perumals of Travancore- Mark De Lennay
3.The Ivory Throne- Chronicles of Travancore
4. No Elephants for the Maharaja- Louise ouwerkerk
5.A short treatise by way of essay of attinga - John walis -
6. VOC documents during Henrick van Rheede (Dutch commander 1669 to 1677).
வேணாட்டு வரலாற்றில் எத்தனையோ ராணிகள் இருந்திருக்கிறார்கள் பேரழகிற்கும் பெரும் வீரத்திற்கும் அடையாளமான ராணிகள் அவர்கள். இவர்களில் வரலாற்றில் இன்று வரை விவேகத்திற்கும் வீரத்திற்கும் தடைகளை உடைப்பதிற்கும் பெயர் பெற்றவர் உமயம்மை எனும் அஸ்திவதி திருநாள் மகாராணி. திருவிதாங்கூர் வரலாற்றில் மார்த்தாண்ட வர்மா எத்தனை முக்கியமானவரோ அதேபோன்று மிக முக்கியமானவர் அவர். மார்த்தாண்ட வர்மாவின் வெற்றிகரமான ஆட்சிக்கு பாதை அமைத்து கொடுத்த பேரரசி அவர். குயின் ஆப் அஷயுர்(Ashure)/ உமயம்மை ராணி என்று அழைக்கப்பட்ட ஆற்றிங்கலின் ராணியான அஸ்வதி திருநாளின் சில பக்கங்களை எழுதலாம் என்று தோண்றியது.......
கிபி 1630 ஆம் ஆண்டு கொச்சி வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தல் வசித்து வந்த கொல்லத்தின் உன்னி கேரள வர்மாவின் சகோதரிகளில் ஒருவரான மகயிரம் திருநாள் வேணாட்டு அரச குடும்பத்திற்கு தத்து எடுக்கப்படுகிறார்.அவருக்கு
ஆற்றிங்கல் ராணியன் மகனான ஆதித்யா வர்மா வேணாட்டின் மன்னனாகவும் அஸ்வதி திருநாள் ஆற்றிங்கல் இளைய ராணியாகவும் பொறுப்பேற்கின்றனர். ஆற்றிங்கலின் இளையா ராணியாக இருந்தாலும் வீரத்தில் சிறந்து விளங்கியதால் மகயிரம் திருநாளை விட மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார். ஆற்றிங்கல் இளையராணியாக இருந்தபோதே தனக்கென தனியாக ஏழாயிரம் பேர் கொண்ட நாயர் படையை வைத்திருந்தார் என்று ஒரு குறிப்பு சொல்கிறது.......
ஆற்றிங்கள் இளைய மகாராணியார் அஸ்வதி திருநாளினை பற்றி ஒரு தொடர்ச்சியாக எழுதலாம் என்று இருக்கிறேன் இது முதல் பதிவு அடுத்த பதிவில் அவரது
காதல் கதைகள்
போர் தந்திரங்கள்
அவரது தத்தெடுப்புகள்
அவரது காலத்து தொழில் வளர்ச்சி
அவரை சுற்றும் புரளிகள்
இறுதியாக அவரது சாதி ஆராய்ச்சியும்..........
திரவாங்கூர் மன்னர்களின் தலைமயிலான வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய ஸ்டேட் மேனுவல் அனைத்திலும் உமையம்மாள் என்று குறிப்பிடப்படும் இவர் அந்த காலத்தில் உள்ள அனைத்து டச்சு மட்டும் பிரிட்டிஷ் குறிப்புகளில் அஸ்வதி திருநாள் என்று தான் குறிப்பிடு படுகிறார்........
தொடரும்....
படிக்க:
1.The Geneology of sovereigns of Travancore- s. Parameshwara Iyer.
2. The kulesekhara perumals of Travancore- Mark De Lennay
3.The Ivory Throne- Chronicles of Travancore
4. No Elephants for the Maharaja- Louise ouwerkerk
5.A short treatise by way of essay of attinga - John walis -
6. VOC documents during Henrick van Rheede (Dutch commander 1669 to 1677).
No comments:
Post a Comment