Pages

Sunday, March 29, 2020

தலைவர்களுக்கு_திருமுழுக்கு_தரவேண்டாமே.

#தலைவர்களுக்கு_திருமுழுக்ககு_தரவேண்டாமே.


முகநூல் எங்கும் சாதிபற்றாளர்களும் சாதிமறுப்பாளர்களும் நிரம்பி கிடக்கிறார்கள் . இந்த இரண்டு குழுவுமே செய்யும் தவறு தங்கள் எண்ணம் போல் தலைவர்களுக்கு திருமுழுக்கு கொடுப்பதுதான்

குமரி எல்லை போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை பற்றி எழுதும் போது இரண்டுவிதமான தவறுகளை செய்கிறார்கள் ஒன்று குஞ்சன் நாடார் தாணுலிங்க நாடார் போன்ற தலைவர்களை குஞ்சன் தாணுலிங்கம் என்று எழுதுவது.அடுத்து சாம் நத்தானியேல், ஏ. நேசமணி போன்ற தலைவர்களை சாம் நத்தானியேல் நாடார் என்றும் நேசமணி நாடார் என்றும் எழுதுவது....

குஞ்சன் நாடார் நெய்யாற்றின்கரை வட்டியூர்காவு பகுதியை சார்ந்தவர் அவரது தந்தையார் இராயன் நாடார் அவருக்கு இட்ட பெயரே குஞ்சன் நாடார் தான். அந்த பெயரை தாங்கித்தான் நாயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து திரு கொச்சி மாநிலத்தின் நாயர் ஆதிக்க சட்டமன்றத்தில் முழங்கினார் நாடார்களை அடக்கியாளுவதே லட்சியமாக இருந்து பட்டம் நாயருக்கு சிம்மசொப்பனமாக இருந்த வட்டயூர்காவு வீரன் குஞ்சன் நாடார் அப்படித்தான் அவரை வரலாறு பதிந்திருக்கிறது...............

தாணுலிங்க நாடார் ஆகஸ்ட் புரட்சியின் மார்த்தாண்ட போராட்டத்தை தலைமை தாங்கியவர். அவரது தந்தை பரமார்த்தலிங்க நாடார் அவருக்கு பெயர் அதுதான் தன் அரசியல் வாழ்க்கையில் அவர் சேர்ந்த கட்சிகளிலும் சரி நடத்திய போராட்டங்களிலும் இவரது பெயர் இப்படித்தான் பதிவு செய்யப்பட்டுகிறது . அவரை தாணு என்றோ தாணுலிங்கம் என்றோ பதிவு செய்வது தவறு அவரது போராட்ட காலத்தில் தாணுலிங்க பிள்ளயும் உண்டு தாணு பிள்ளயும் உண்டு........

ஐய்யா சாதி எதிர்ப்பாளர்களே உங்கள் பெயரில் சாதியை துறப்பது உங்கள் உரிமை ஆனால் பெரும் தலைவர்கள் பெயரில் சாதியை துறக்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தார்கள்.......?
எனது நன்பர் ஒருவரின் தந்தையன் பெயர் நாடார் மட்டும் தான் எங்கள் பக்கத்து ஊரில் ஒருவரது பெயர் நாடான் மட்டும் தான் இவர்களையெல்லாம் எப்படி டேஷ் என்றா பதிவு செய்வீர்கள்........?

அடுத்து சாம் நத்தானியேல் ஐயா அவர்களின் பெயரில் நாடார் இல்லை திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் தொடங்கியபோது அதன் தலைவராக இருந்தவர். நாஞ்சில் நாட்டு வேளாளர்களோடு இணக்கமாக பணியாற்றியவர் சென்னை மாகானம் முழுவதிலும் சென்ற எல்லா தமிழ் தலைவர்களயும் சந்தித்து திருவாங்கூரின் வெளியே திருவாங்கூர் தமிழர் நிலையை எடுத்து வைத்தவர் கொச்சி மன்னரின் ஐக்கிய கேரளத்தை எதிர்த்து அறிக்கை போர் நடத்தியவர் ஆனால் எந்த இடத்திலும் அவரது பெயர் சாம் நத்தானியேல் நாடார் என்று பதிவாகவில்லை..........

குமரி தந்தை என்று போற்றபடும் மார்ஷல் .ஏ . நேசமணி அவர்களின் பெயரிலும் நாடார் இல்லை அவர் திருவாங்கூரின ஒன்பது வட்டத்திற்கும் போராடியவர். பீர்மேடும் தேவிகுளமும் தமிழர் நிலமென்று சான்றுகளோடு பாராளுமன்றத்தில் பேசியவர். அவரின் பேரன்பிற்குரிய தளபதி ஏஏ.ரசாக் ஒரு இஸ்லாமியர் அவருக்கு மார்ஷல் பட்டம் கொடுத்தவரும் அவரே. ஆகஸ்ட் போராட்டத்தை அவர் கோட்டாறில் தொடங்கி வைத்தபோது அவரோடும் குஞ்சன் நாடாரோடும் நின்றவர் ஏ.எம் சைமன் எனும் மீனவர் இப்படி எல்லா மக்களோடும் இணக்கமாக பனியாற்றிய நேசமணி அவர்களின் பெயர் எந்த ஒரு இடத்திலும் நாடார் என ஆவனபடுத்த படவில்லை..........

ஐயா சாதிபற்றாளர்களே குமரி நிலத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த திருவாங்கூரில் இன்னலுற்ற மொத்த தமிழர்களுக்காகவும் போராடியவர்கள் சாம் நத்தானியேலும் நேசமணி ஐய்யாவும் இவர்களின் போராட்ட வரலாறை படித்தால் புரியும் அவர்கள் மக்களுக்கானவர்கள் இவர்கள் மேல் உங்கள் சாதிப்பற்றை தெளிப்பதினால் நீங்கள் அவர்களை மற்ற சாதி மக்களிடமிருந்த அன்னியபடுத்துகிறீர்கள். அதாவது உங்கள் பெருமைக்காக அவர்கள் பெருமையை வெறும் நாடார்களோடு சுருக்குகிறீர்கள்.........

குஞ்சன் அல்ல குஞ்சன் நாடார்......
தானுலிங்கம் அல்ல தானுலிங்க நாடார்.....
சாம்நத்தானியேல் நாடார் அல்ல
சாம்நத்தானியேல்......
நேசமணி நாடார் அல்ல ஏ.நேசமணி.......

நன்றி
#குமரிக்கிழவனார்

No comments:

Post a Comment