#குமரி_கல்யானவீட்டு_சாப்பா டு
குமரி மாவட்டத்தின் அழகியல்களில் ஓன்று கல்யான வீட்டில் தலைவாழை இலை போட்டு ஓன்பது கூட்டுகள் நான்கு கறிவகைகள் இரண்டு பாயாசம் பழம் பப்படம் சேர்த்து உண்ணும் உணவு தான்.கல்யாண வீட்டு சாப்பாட்டு ரசித்து ருசித்து சாப்பிட அதீத பொறுமையும் சிறுதும் கூச்சமின்மையும் இன்றிமையாதது.........
வாழை இலை போடும் போது சிரித்தபடியே இருக்க வேண்டும் இடைத்துண்டு வாழை இலை வந்தால் இலை கிழிந்திருக்கிறது அழுக்கு இலை என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி இலையை தலை வாழை இலைக்கு மாற்றி நீர் தெளித்து தயாராக இருக்க வேண்டும்..........
அவியல், முட்டகோஸ் துவரன், வாழக்காய் பொரியல், கிழங்கு கூட்டு, பீடர்ரூட் பச்சடி, வெள்ளரி பச்சடி ,மாங்காய் ஊறுகாய், நார்த்தங்காய் தீயல், இஞ்சி தீயல் என்று ஒவ்வொன்றாக வரும்போதும் வெட்கமே படாமல் தொட்டு சுவைத்து பார்க்க வேண்டும் இலையில் அவியல் வைக்கும் போது ஒரு முறை கூட வைக்க சொல்லி கேட்டு வாங்கி கொள்ள வேண்டும்...........
சோறு இலைக்கு வந்தவுடன் நடுவில் கணக்கா ஒரு கோடு வரைந்து பிரித்து வைத்து வலது பக்க பங்கில் பாத்தி கட்டி பருப்பு ஊத்த தயார் படுத்த வேண்டும். பருப்பு சோற்றில் ஊத்தியவுடன் அவசரபடாமல் அடுத்து வரும் பப்படத்தை வாங்கி பாதியாக உடைத்து சோற்றில் பொடித்து போட்டு சாப்பிட தொடங்கலாம்.......
சரியாக பருப்பு தீரும்போது இடது பக்கம் இருக்கும் பாகத்தை இலைக்கு நடுவில் மாற்றி சாம்பாருக்கு பாத்தி கட்ட வேண்டும் இதனிடையே வரும் வாழைப்பழத்தை இலையின் இடது ஓரத்தில் மாத்தி வைக்க வேண்டும். சாம்பார் இலைக்கு வந்தவுடன் மீதி இருக்கும் மொத்த சோற்றில் போட்டு பிசைந்து சாப்பிட வேண்டும்.........
இஞ்சி தீயலையும் மாங்காய் உறுகாயையும் அளவோடு தொட்டு கொள்ள வேண்டும் இல்லையேல் ரசத்திற்கும் மோருக்கும் கூட்டான் இருக்காது. அடுத்த ரவுண்டு சோறு இலைக்கு வந்தவுடன் முதலில் செய்தது போலவே பிரித்து சிறிய பாகத்தை இடது ஓரத்தில் ஒதக்கு வைத்த ரசத்திற்கு தயாராக வேண்டும்.பக்கத்து இலைக்கு ரசம் வருவது தெரிந்ததும் இடது கையால் இலையின் ஓரத்து மடக்கி வலது கையை நீட்டி முதல் கரண்டியு குடித்துவிட்டு இரண்டாம் கரண்டியை சோற்றில் ஊற்ற வேண்டும்......
பாதி வைத்த பப்படத்ததை ரச சோற்றில் உடைத்து போட்டு கலந்து சுவைக்க சுவைக்க உள்ளே தள்ள வேண்டும். ரசம் காலியான நேரத்தில் இலையில் இடது ஓரத்தில் இருந்த பழத்தை பிழிந்து வைத்து ப்ப்படம் போட்டு பாயசம் ஊற்றி இலையில் முழுவதுமாக வழித்து குடித்தபின் இடது பாகத்தில் ஒதுக்கி வைத்திருந்த சோற்றை நடுவில் தள்ளி மோர் கேட்டு வாங்கி பிசைந்து மீதி இருக்கு இஞ்சி தீயலும் மாங்கா ஊறுகாயின் துணையோடும் கலந்து இலையை சுத்தமாக துடைத்து காலி செய்ய வேண்டும்.............
இனி கையில் வழிந்தோடும் பாயசமும் மோரும் கலந்த சோறை கல்யான பந்தியில் நாம் மட்டும் தான் இருந்து உணவருந்துகிறோம் என்ற ரீதியில் நக்கி சுத்தம் செய்யவேண்டும். கவனமாக உங்கள் பின்னால் பந்திக்கு காத்திருக்கும் ஆட்களின் மேல் சோற்று கறை பட்டுவிடாதபடி இடத்தை காலி செய்யவேண்டும்............
பந்தியில் இடம் கிடைத்தது இலை போட்டார்கள் என்று அரக்க பரக்க அள்ளி போட்டால் பருப்பு ஊற்றும்போதே வயிறு கட்டிவிடும் அப்புறம் சாப்பாடு இறங்காது............
அடுத்தவன் பார்ப்பான் நான் படித்த பன்புள்ளவன் என்று பந்தியில் காண்பிப்பீர்களேயேனால் கல்யானவீட்டு சாப்பாட்டின் அருமை அறியாதவர்களாகி விடுவீர்கள்..........
ஆம் குமரி கல்யான வீட்டு சாப்பாடு என்பது ஒரு அழகியல் அதை சுவையாடு உண்பது என்பது ஒரு கலை இன்றைய சிக்கன் பிரியாணிக்கோ நெச்சோறுக்கோ பொரித்த கோழிக்கோ இறுதியாக கப்பில் வரும் ஐஸ்க்ரீமிற்கோ அடிமைப்பட்டவர்களுக்கு அது புரியவே புரியாது..........

No comments:
Post a Comment