புட்டு கண்டுபிடித்தவனை சுட்டு கொல்லவேண்டும்
இது தான் வீட்டில் புட்டு சமைக்கபடும் எல்லா தினங்களிலும் எனது தந்தையார் சொல்லுவார் இதுதான் எனது நிலைப்பாடாக ரொம்ப காலமாக இருந்தது........
குமரி மாவட்டத்தின் காலை உணவுகளில் மிக அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படும் உணவு புட்டு. அரசிப்புட்டோடு சிறு வாழைபழமும் அவித்த சிறுபயறும் அப்பளமும் சீனியும் சேர்த்து உண்பதின் சுவையே தனிதான்........
ஆனால் புட்டின் மேல் வெறுப்பு வருவதற்கான காரணிகளில் ஒன்று வாரத்தில் ஐந்து நாள் புட்டு என்று சில நேரங்களில் ஆகிவுடும் அடுத்து புட்டோடு உண்ண வெறும் சீனியும் பயறும் என வந்து நிற்கும் நாளில் வெறுப்பே வந்துவிடும். புட்டு தின்பதை தவிற்க விக்கல் நாடகெல்லாம் ஆடியுருக்கிறேன்.........
ஒரு முறை திருவனந்தபுரத்திற்கு போனபோது புட்டும் சுட சுட கடலைகறியும் உண்ண வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது புட்டா என்று முகம் சுழித்தபடி தட்டை பார்த்தேன் ஆனால் சாப்பிட ஆரம்பித்த பின்பு தான் ஆகா அந்த சுவை இன்றும் நாவில் வந்து நிற்கும்.............
பதினைந்து வருடங்களுக்கு முன்பு சிலகாலம் திருவல்லாவின் மல்லப்பள்ளியில் வசித்தேன் அப்போதுதான் பீபிற்கு முழுவதுமாக அடிமையானது. ஒரு ஞாயிற்று கிழமை லிபர்ட்டி ஓட்டலில் காலை உணவிற்காக ஏறியபோது புட்டை தவிற வேறொன்றுமே இல்லை தொட்டுக்க பீபும். அன்றுதான் புட்டிற்கு கடலை கறியை விட பீபே சரியான தேர்வு என்று அன்று முடிவுக்கு வந்தேன்..............
ஆரூயிர் நன்பனிடம் புட்டுக்கு பீப்தான் மாப்ள சூப்பர் என்று சொல்லுவேன் அதற்கு சிரிச்சிட்டே சூர மீன் கறி வச்சி சுட சுட புட்டு சாப்பிட்ட நீ பீப மறந்திருவ என்றான்........
குமரிமாவட்டத்தில் விலாங்கு மீன புட்டு மாவில் போட்டு விரவி புட்டு சுடும் ஒரு வழக்கம் உண்டு அதன் சுவையே அலாதிதான்......
பிலிப்பைன்ஸை சேர்ந்த அலுவலக தோழி ஒருவரிடம் புட்டை பற்றி சிலோகித்து கொண்டிருந்தபோது அவர் அது அவர்கள் பகுதி உணவு என்று சொல்லி கனினியில் படத்தயும் காண்பித்தார் ஆம் அவர்கள் அவிக்கும் புட்ட அவர்களைபோல் சிறிய சைஸில் இருந்தது.........
ஆக புட்டு அதனுடன் சேர்க்கும் கூட்டான்களுக்கு ஏற்ப அதன் சுவை கூடி கொண்டேயிருக்கும்.......
எத்தனை சுவையாக புட்டு தின்றாலும் என் நிலைப்பாடு இன்றுவரை மாறவேயில்லை ஆம் இந்த நடு பாலைவனத்தில் புட்டை நினைத்து ஏங்க வைத்த அந்த புட்டை கண்டுபிடித்தவனை சுட்டே கொல்ல வேண்டும்......

No comments:
Post a Comment