Pages

Saturday, March 28, 2020

கொத்தமல்லி புதினா சிக்கன்

கொத்தமல்லி புதினா தயிர் அரச்சி போட்டு வத்தவிட்ட சிக்கன்.......

ஒரு உருளில எண்ணெய் விட்டு எண்ணெய் காஞ்சவுடனே சோம்பு பட்ட லெவங்கம் இரண்டு நல்லமுளவு போட்டு தாளிக்கனும்.....

அஞ்சி பல்லு பூண்டு கொஞ்சம் இஞ்சி சதச்சி போட்டு இரண்டு பெரிய உள்ளிய ஸ்லைசா அரிஞ்சு போட்டு நல்லா வதக்கணும்......

உள்ளி வதங்கினதும் அதுல கொஞ்சம் கருவேப்பிலை உப்பு போட்டு கிண்டி அடுப்ப சிம்ல வச்சி மூடி போடனும்.....

அடுத்து கால் கரண்டி மஞ்ச போடி அர கரண்டி வத்த பொடி அர கரண்டி மல்லி பொடி அர கரண்டி சீரக பொடி போட்டு கிண்டி அதுல அர கிலோ சிக்கன போட்டு வதக்கி மூடி வைக்கனும்.....

அஞ்சி நிமிசம் கழிச்சு ஒரு கைப்புடி கொத்தமல்லி இல ஒரு கைப்புடி புதினா இல கொஞ்சம் கருவேப்பில இரண்டு கையாப்ப தயிர் போட்டு மைய அரச்சி சிக்கனில் சேர்த்து கிண்டி மூடு போடவும்......

அஞ்சாவது நிமிசத்தில் மூடிய திறந்து கொஞ்சம் இறச்சி மசாலா கொஞ்சம் நல்லமிளகு பொடி போட்டு கிண்டி மூடி போடவும்.......

அடுத்த அஞ்சாவது நிமிசத்தில் நம்ம சைட்டிஷ் ரெடி சுடு சோறு மற்றும் ரொட்டிக்கி அருமையா இருக்கும்...............

செப்
#கிழவனார்

No comments:

Post a Comment