Pages

Saturday, March 28, 2020

மசாலா_சிக்கன்



ஒரு கிலோ சிக்கனில் ஒரு ஸ்பூன் வத்தல் பொடி ஒரு ஸ்பூன் காஷ்மீரி வத்தல் பொடி ஒன்றரை ஸ்பூன் மல்லி பொடி ஒரு ஸ்பூன் இறச்சி மசாலா அரை ஸ்பூன் சீரக பொடி கால் ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அரை எலுமிச்சை சாறு கால் கப் தயிர் ஊத்தி பிரட்டி தேவையான உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் பிரஜ்ஜில் வைக்கவும்..........

ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை லெவங்கம் கிராம்பு ஏலம் பெருஞ்சீரகம் போட்டு பொரிஞ்சதும் மூன்று பெரிய உள்ளியை கீத்தாக அரிந்து போட்டு வதக்கவும் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை இரண்டு பச்ச மிளகு அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதங்கியதும் மசாலா பிரிட்டி வைத்த சிக்கனை போட்டு பத்து நிமிடம் வேக விடவும்........

இரண்டு சின்ன தக்காளியை அரைத்து சிக்கனில் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் மல்லிப்பொடி அரை ஸ்பூன் நல்லமிளகு பொடி போட்டு வறுத்து சிக்கனில் சேர்த்து கொஞ்சிம் இறச்சி மசாலா தூவி உப்பு பார்த்து ஐந்து நிமிடம் வேக விடவும்...........

ஐந்தாவது நிமிடம் மல்லிதழை சேர்த்து சிக்கனை இறக்கி விடவும்.மசாலா சிக்கன் ரெடி

வெள்ளை சோறு, ரொட்டி பரோட்டா மற்றும் மாவீரனுக்கு சுவையான கூட்டு.......

நன்றி
செப்
#கிழவனார்

No comments:

Post a Comment