#உமையம்மாள்_ராணி_எனும்_ஶ்ரீ_அஸ்வதி_திருநாள்# 2
“அவர் பேரிளம் பருவத்தில் மாநிறத்தில் இருந்த பேரழகி. அவரது நீண்ட கருங்கூந்தலை பின்பக்கமாக கொண்டை போட்டிருந்தார் அவரது அழகிய நீண்ட காதுகள், கழுத்து முதல் கைகள் வரையில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அனிந்திருந்தார். உடையாக இடுப்பிற்கு மேலே ஒரு வெண்பருத்தி உடையை அரைகுறையாக போர்த்தியிருந்தார். அரை நிர்வானமாகவே இருந்தாலும் அது கம்பீரமான பேரழகு”.......
இப்படித்தான் அஸ்வதி திருநாள் உமையம்மை ராணியின் அழகை அவர் ஆற்றிங்கல் இளைய ராணியாக இருந்தபோது அவரை சந்தித்த டச்சு தூதுவன் எழுதி வைத்திருந்தான்.ஆம் உமையம்மாள் என்ற அஸ்வதி திருநாள் ராணி மாநிறமே என்றாலும் காண்போரை கிறுங்கடிக்கும் பேரழகியாக இருந்திருக்கிறார். அவரை சுற்றிய காதல் கதைகள் ஏராளம் பொதுவாக மருமக்கள் வழியை பின்பற்றும் தம்புராக்கன் தரவாடுகளின் பெண்களுக்கு இனைதேடுவதில் அதீத சுதந்திரம் உள்ளது என்று வரலாறு பதிந்து வைத்திருக்கிறது ஆனால் ஆற்றிங்கல் மகாராணிகளை எடுத்துக்கொண்டால் அந்த சுதந்திரம் பெரிதாக இல்லையெனலாம். ஆனால் வேணாட்டின் கடைசி மகாராணியான அஸ்வதி திருநாள் இதில் அத்தனை தடைகளையும் கட்டுப்பாடுகளயும் உடைத்திருந்தார்...............
வரலாற்றில் அவரது காதல் வாழ்வை பற்றிய குறிப்புகள் பல இருந்தாலும் மிக முக்கியமானது மாபெரும் வீரனும் கவிஞனுமான கோட்டயம் இளைய ராஜாவான கேரளவர்மாவுடனான உறவுதான். உமையம்மை ராணி அஞ்சுதெங்கு துறைமைகத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த வர்காலா அரன்மனையில் தங்கியிருந்த போது அந்த வழியாக ராம்நாட்டிற்கி சென்ற கோட்டயம் இளைய ராஜாவுடன் காதல் வயப்பட்டார். அவர் மீது கொண்ட காதலின் காரணமாக உமையம்மா வேணாட்டின் ராணியாக இருந்தபோது தன் காதலனை இரணியல் இளைய ராஜாவாக முடிசூட்டினார். மருமக்கள் வழிக்கு மாறி போயிருந்த வேணாட்டின் சட்டத்திட்டத்தின் படி ராணி தன் காதலனை ராஜாவாக முடிசூட்ட முடியாது என்பதால் தன் காதலனையே தன் மகனாக தத்தெடுத்து அவரை இரணியல் இளைய ராஜாவாக்கி தன் அரசியல் ஆலோசகராகவும் வைத்திருந்தார்.............
இன்றளவும் உலகமெங்கும் ஆணாதிக்கமும் களவியலை பொறுத்தவரை பெண்ணை ஆண் தன் இச்சையை தீர்த்து கொள்ள பயன்படுத்தும் பொருளாகவும் தான் பயன்படுத்திவருகிறான் . ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் மேற்குலகையே வியந்து பார்க்க வைத்திருந்தார் உமையம்மா ராணி இனைதேடுவதில் மட்டற்ற சுதந்திரத்தை கொண்டிருந்தவராக உமையம்மை ராணியை வரலாறு பதிந்திருக்கிறது. “ ராணியை கவர்ந்த எந்த ஒரு ஆண்மகனயும் ராணி தன் துணையாக தேரந்தெடுத்துக்கொண்டார். அதற்காக அவர் சட்ட முரண்களை பற்றி கவலைப்பட்டதே இல்லை. பொதுவாக பேரழகும் பேராண்மையும் கொண்ட இளைஞர்கள் தான் அவரது அந்தபுரத்தை நிறைத்திரிந்தார்கள்” என்று அன்றைய வெள்ளை அதகாரி ஒருவர் பதிந்திருக்கிறார்.........
ராணி தன் இணையர்களோடு சலிப்பு ஏற்படும்போது உடனடியாக புது இணை தேடியிருப்பார் சட்ட திட்டங்களுக்கோ மற்றவர்களுக்கோ அவர் பயந்ததில்லை என்கிறது வரலாறு. மொத்த உலகமும் பாலியல் சுதந்திரம் என்பது ஆண்களுக்கான உரிமை சொத்து என்றிருந்த காலத்தில் தென்கோடியில் வாழ்ந்த உமையம்மாள் ராணியன் வாழ்வியலை பார்த்து மேற்குலகமே வியந்து போயிருந்தது என்பது தான் உண்மை........
ராணியன் இந்த காதலர்கள் பட்டயலில் வெள்ளையர்களும் டச்சி காரர்களும் இருந்திருக்கிறார்கள். அப்படி ஒரு வெள்ளை அதிகாரிக்கு காதல் பரிசாக கிடைத்தது தான் அஞ்சுதெங்கு துறைமுகம் என்று குறிப்பு சொல்கிறது..........
அந்தபுரங்கள் மன்னர்கள் அந்தி உறங்கும் இடங்களாக இருந்த ஒரு காலகட்டத்தில், தான் விருப்ப பட்டவரோடு தன் விருப்பத்திற்கேற்ப வாழ்ந்த உமையம்மாள் திருவாங்கூருக்கு பிள்ளை பெற்று கொடுக்கவும் அல்லது யாரோ பெற்ற பிள்ளைகளை வளர்த்தி கொடுக்கவும் இருந்த ஆற்றிங்கல் ராணிகளின் மத்தியில் தனித்தே தெரிகிறார்............
தொடரும்.........
1. The Honorable Company- History of English East India company -John kaey
2. A Voyage to the East Indies- John Henry Grose
3.English East Indian company and the local rulers in India- Leena Moore
4. VOC document during Conrnellis van Meckeeren
5. Umayamma rani - Ibrahim Kunju
6.The kulesekhara perumals of Travancore- Mark De Lennay
7 .Queen of Kuppakkas- The Ivory Throne
8. Travancore state Manual- TK velupillai
“அவர் பேரிளம் பருவத்தில் மாநிறத்தில் இருந்த பேரழகி. அவரது நீண்ட கருங்கூந்தலை பின்பக்கமாக கொண்டை போட்டிருந்தார் அவரது அழகிய நீண்ட காதுகள், கழுத்து முதல் கைகள் வரையில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அனிந்திருந்தார். உடையாக இடுப்பிற்கு மேலே ஒரு வெண்பருத்தி உடையை அரைகுறையாக போர்த்தியிருந்தார். அரை நிர்வானமாகவே இருந்தாலும் அது கம்பீரமான பேரழகு”.......
இப்படித்தான் அஸ்வதி திருநாள் உமையம்மை ராணியின் அழகை அவர் ஆற்றிங்கல் இளைய ராணியாக இருந்தபோது அவரை சந்தித்த டச்சு தூதுவன் எழுதி வைத்திருந்தான்.ஆம் உமையம்மாள் என்ற அஸ்வதி திருநாள் ராணி மாநிறமே என்றாலும் காண்போரை கிறுங்கடிக்கும் பேரழகியாக இருந்திருக்கிறார். அவரை சுற்றிய காதல் கதைகள் ஏராளம் பொதுவாக மருமக்கள் வழியை பின்பற்றும் தம்புராக்கன் தரவாடுகளின் பெண்களுக்கு இனைதேடுவதில் அதீத சுதந்திரம் உள்ளது என்று வரலாறு பதிந்து வைத்திருக்கிறது ஆனால் ஆற்றிங்கல் மகாராணிகளை எடுத்துக்கொண்டால் அந்த சுதந்திரம் பெரிதாக இல்லையெனலாம். ஆனால் வேணாட்டின் கடைசி மகாராணியான அஸ்வதி திருநாள் இதில் அத்தனை தடைகளையும் கட்டுப்பாடுகளயும் உடைத்திருந்தார்...........
வரலாற்றில் அவரது காதல் வாழ்வை பற்றிய குறிப்புகள் பல இருந்தாலும் மிக முக்கியமானது மாபெரும் வீரனும் கவிஞனுமான கோட்டயம் இளைய ராஜாவான கேரளவர்மாவுடனான உறவுதான். உமையம்மை ராணி அஞ்சுதெங்கு துறைமைகத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த வர்காலா அரன்மனையில் தங்கியிருந்த போது அந்த வழியாக ராம்நாட்டிற்கி சென்ற கோட்டயம் இளைய ராஜாவுடன் காதல் வயப்பட்டார். அவர் மீது கொண்ட காதலின் காரணமாக உமையம்மா வேணாட்டின் ராணியாக இருந்தபோது தன் காதலனை இரணியல் இளைய ராஜாவாக முடிசூட்டினார். மருமக்கள் வழிக்கு மாறி போயிருந்த வேணாட்டின் சட்டத்திட்டத்தின் படி ராணி தன் காதலனை ராஜாவாக முடிசூட்ட முடியாது என்பதால் தன் காதலனையே தன் மகனாக தத்தெடுத்து அவரை இரணியல் இளைய ராஜாவாக்கி தன் அரசியல் ஆலோசகராகவும் வைத்திருந்தார்............
இன்றளவும் உலகமெங்கும் ஆணாதிக்கமும் களவியலை பொறுத்தவரை பெண்ணை ஆண் தன் இச்சையை தீர்த்து கொள்ள பயன்படுத்தும் பொருளாகவும் தான் பயன்படுத்திவருகிறான் . ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் மேற்குலகையே வியந்து பார்க்க வைத்திருந்தார் உமையம்மா ராணி இனைதேடுவதில் மட்டற்ற சுதந்திரத்தை கொண்டிருந்தவராக உமையம்மை ராணியை வரலாறு பதிந்திருக்கிறது. “ ராணியை கவர்ந்த எந்த ஒரு ஆண்மகனயும் ராணி தன் துணையாக தேரந்தெடுத்துக்கொண்டார். அதற்காக அவர் சட்ட முரண்களை பற்றி கவலைப்பட்டதே இல்லை. பொதுவாக பேரழகும் பேராண்மையும் கொண்ட இளைஞர்கள் தான் அவரது அந்தபுரத்தை நிறைத்திரிந்தார்கள்” என்று அன்றைய வெள்ளை அதகாரி ஒருவர் பதிந்திருக்கிறார்.........
ராணி தன் இணையர்களோடு சலிப்பு ஏற்படும்போது உடனடியாக புது இணை தேடியிருப்பார் சட்ட திட்டங்களுக்கோ மற்றவர்களுக்கோ அவர் பயந்ததில்லை என்கிறது வரலாறு. மொத்த உலகமும் பாலியல் சுதந்திரம் என்பது ஆண்களுக்கான உரிமை சொத்து என்றிருந்த காலத்தில் தென்கோடியில் வாழ்ந்த உமையம்மாள் ராணியன் வாழ்வியலை பார்த்து மேற்குலகமே வியந்து போயிருந்தது என்பது தான் உண்மை........
ராணியன் இந்த காதலர்கள் பட்டயலில் வெள்ளையர்களும் டச்சி காரர்களும் இருந்திருக்கிறார்கள். அப்படி ஒரு வெள்ளை அதிகாரிக்கு காதல் பரிசாக கிடைத்தது தான் அஞ்சுதெங்கு துறைமுகம் என்று குறிப்பு சொல்கிறது..........
அந்தபுரங்கள் மன்னர்கள் அந்தி உறங்கும் இடங்களாக இருந்த ஒரு காலகட்டத்தில், தான் விருப்ப பட்டவரோடு தன் விருப்பத்திற்கேற்ப வாழ்ந்த உமையம்மாள் திருவாங்கூருக்கு பிள்ளை பெற்று கொடுக்கவும் அல்லது யாரோ பெற்ற பிள்ளைகளை வளர்த்தி கொடுக்கவும் இருந்த ஆற்றிங்கல் ராணிகளின் மத்தியில் தனித்தே தெரிகிறார்............
தொடரும்.........
1. The Honorable Company- History of English East India company -John kaey
2. A Voyage to the East Indies- John Henry Grose
3.English East Indian company and the local rulers in India- Leena Moore
4. VOC document during Conrnellis van Meckeeren
5. Umayamma rani - Ibrahim Kunju
6.The kulesekhara perumals of Travancore- Mark De Lennay
7 .Queen of Kuppakkas- The Ivory Throne
8. Travancore state Manual- TK velupillai
No comments:
Post a Comment