Pages

Saturday, October 15, 2016

ரெமோ எனும் அதி அற்புத குப்பை

தமிழ் சினிமா வார வாரம் அள்ளித்தெளிக்கும் குப்பைகளில் மிகச்சமீபத்தய குப்பைகள் றெக்கயும் ரெமோவும்.றெக்க பாத்த வயித்தெரிச்சல தீர்துக்கலாம்னு ரெமோவ பார்த்தாலும் பார்தேன் எங்க எங்கெல்லாமோ எரியுது........
தமிழ் சினிமா குப்பைக்கிடங்கை துளாவி பார்த்தால் இதுபோல பல குப்பைகள் குவிந்துகிடக்கும்.ஆனா இது ஒரு உன்னதமான குப்பை அதாவது இந்த படத்தில் எல்லாருக்கும மனநிலை பாதிக்கப்பட்டவர் வேடம்தான்.......
பெரும் பரிதாபத்துக்குரியவர் கீர்த்தி சுரேஷ் நடித்தது மூன்று படம் அதில் மூன்றிலுமே இதே மாதிரி வேடம் தான் அதாவது அரை லுாசு கேரக்டர்.தொடரிலயாவது டச்சப் பெண்ணதான் அரைவேக்காடா காமிச்சானுங்க இதுல என்னனா ஒரு டாக்டரயே கோமாளினியா காமிச்சிட்டானுங்க.
ஒரு டாக்டர் ஆகனும்னா குறைந்தபட்சம் ஒருத்தர் இந்திய கல்விமுறைப்படி பதினேழு வருடம் பாடம் படிச்சிருக்கனும் அதில் முழு ஐந்து வருடம் மனித உடலை பத்தி மட்டுமேயான படிப்பு அவ்வளவு படிப்பு படிச்ச டாக்டர ஒருத்தன் பெண் வேஷம் போட்டு ஏமாத்திரலாம்னா அந்த டாக்டரு எவ்வளவு அரைவேக்காடா இருக்கணும்....?
எவ்வளவு சிரத்தயாக பணத்த கொட்டோ கொட்டுனு கொட்டி வழுக்கை விழுந்தவர்கள் தலைல முடிய நட்டு வச்சாலும் நூறு அடி தூரத்தில இருந்தே கண்டுபிடிச்சிரலாம் இங்க ஒரே அறைல தூங்கினாலும் கண்டு பிடிக்கலயாம் அடய்களா டாக்டருங்க எல்லாம் அவ்வளவு கேவலமா போச்சு உங்களுக்கு.....?
ஒரு காட்சில கீர்த்தி சுரேஷ் ரெமோவ தேடி வீட்டுக்கு வந்திருவாங்க அப்ப கதவ திறக்கிற நம்ம சரன்யா அப்படியே அவங்க அழகில சொக்கி போயிடிற மாதிரி ஒரு சீன் அந்த சீன்ல கீர்த்தியோட சிரிப்பிருக்கே யப்பா மேல் உதடு அவங்க அப்பா ஊரான திருவனந்தபுரத்துக்கும் கீழ் உதடு அவங்க அம்மா ஊரான நாகர்கோவிலுக்கும் போயிட்டு வருது ஜனகராஜ் கூட ஒரு படத்திலயும் இவ்வளவு அழகா சிரிச்சிருக்கமாட்டார்.இவ்வளவு முகலட்சனமான நாயகிகள் உங்களுக்கு எங்கயிருந்துயா கிடைக்கிராய்ங்க.......?
சரி இந்த ஹீரோயினிகள் படித்த பொண்ணுகளா இருந்தாலும் படிக்காத பொண்ணுங்களா இருந்தாலும் அவங்கள ஒரு மாதிரி அரவேக்காட காமிக்கிறது தமிழ் சினிமாவில் தொண்டு தொட்டு இருந்துவரும் நடைமுறை அதயாவது பொறுத்துக்கலாம் ஆனா அம்மா கேரக்டரும் இவ்வளவு கேவலமா போச்சா உங்களுக்கு சும்மா நிஜத்திலயே ஒரு பொண்ண ஏமாத்தி கரெக்ட் பனண்ணிட்டேன்னு அம்மாகிட்ட சொல்லிப்பாருங்க தொடப்பக்கட்ட பிய்யிற அளவுக்கு அடிகிடைக்கும் ஆனா சரன்யாவ விட்டு அதுக்கு நியாயம் கற்பிக்கும் காட்சிகளை வைத்து அம்மா கேரக்டரயும் அரைவேக்காட மாத்திட்டீங்களே இது நியாயமாரே பெண்கள் எல்லோரும் அவ்வளவு கேவலமா போயிட்டாங்களா டைரக்டர் சார்..........?
அப்புறம் அந்த சிவா தம்பியோட கேரக்டர் யப்பா எத்தன படுத்தில தான் இந்த பொண்ணுங்கள ஏமாத்திற கேரக்டர்...?ஏமாத்தி லவ் பண்ணனும் அப்புறம் அதுக்கு ஒரு நியாயம் கற்பித்து ஒரே அழுவாச்சி அழுவனும் இதுதான் நீங்க நடிச்ச படங்களோட கதைகளம்.வேல வெட்டி இல்லாம பொண்ணே கதின்னு சுத்திறதுல இந்த சமூகத்துக்கு என்ன சொல்ல வறீங்கு சிவா.....?
அப்புறம் பொம்பள வேஷம் பிராக்டீஸ் கொடுக்குமபோது ரவிக்குமார் சொல்லுவாரு நீலாம்புரிய மாதிரி முன்னாடி வச்சிக்கனுமாம் ரஜினிய முகத்தில காமிக்னுமா பின்னாடி கொஞ்சம் துாக்கின மாதிரி வச்சிகி்ட்டா பொம்பள ரெடியாம் என்னா நடிப்பு தத்துவம் கண்ண கட்டுதுடா.......
இந்த நண்பர் கேரக்டர்ல நம்ம சதீஷ் அடுத்த சூரியா மார்ரதுக்கான அனைத்து தகுதிகளயும் கையில் வைத்திருக்கிறார்.என்கிட்ட எவனாவது ஒரு நண்பன் வந்து பொண்ண கரெக்ட் பண்ண பொம்பள வேஷம் போடுறன்னு சொன்னா காது கிழிற மாதிரி செவுல்லயே நாலு அறய விட்டு பைத்தியக்கார ஆஸ்பித்திரில சேர்த்து விட்டுருவேன்.நம்ம சதீஷ் என்னன்னா அவரோட சொத்து பத்தெல்லாம் செலவு பண்ணி மேக்கப்போட வைத்து நண்பனின் காதலுக்கு உதவுவாராம்..... வாய்க்குள்ள வைத்து ஏதேதோ முனகினால் காமெடியாம் உங்க காமெடிக்கு நீங்கதான் சிரிக்கனும் சதீஷ் சார் ......
சமீபத்தய நம்பிக்கையான யோகிபாபுவும் மொட்டை ராஜேந்திரனும் இருந்தும் மருந்துக்கூட சிரிப்பு வராத ஒரு படம் காமெடியான ஜெனரஞ்சகமான அப்பறும் என்னவோ சொன்னாளுவனே குடும்ப படமாம் நல்லா வாய்ல ஏதாவது வந்திர போவது.........
பெண் எவ்வளவு படித்தி ருந்தாலும் திருமண நிச்சயமே ஆகியிருந்தாலும் படிக்காத வேல வெட்டிக்கே போகாத சமூகத்தை பத்தி சிந்திக்காமல் தெரு தூத்து திரியும் ஒரு பையன் நினைச்சா என்ன வேஷம் போட்டும் ஒரு பெண்ணை ஏமாத்தி வலையில் விழவைக்கலாம்னு ஒரு கருத்தை தாங்கி படம் எடுத்துவிட்டு காதலுக்கு விளக்கம் வேற........
சாதாரன பையன் சாதாரன பையன் எனும் வசனம் அடிக்கடி இந்த சிவகார்த்திகேயன் தனுஷ் படங்களில் வந்து இம்சை படுத்துவது பெருங்கோபத்தை வரவழைக்கிறது சாதாரன பையன எனும் அளவுகோல் என்ன என்பது புரியவேயில்லை.
நம்மை பொறுத்தவரை சாதாரன பையன் என்பவன் கடும் குடும்ப சுழல்களில் தன் கல்வியை முடித்து பெரும் போட்டிகளுக்கிடையில் வேலை கிடைத்து தன் குடும்ப முன்னேற்றித்திறகான பொருளீட்டலின் வேகத்தில் காதலை தொலைத்தோ அல்லது காதலில் முதலீடு செய்ய நேரம் கிடைக்காமல் குடம்பத்தினர் பார்த்த பெண்ணை மனைவியாக்கி காதலை அள்ளித்தந்து ஒரு சரித்திர வாழ்க்கை வாழ்பவன் தான் மாறாக காதலுக்காக நாடகமாடி பெண்களை ஏமாற்றுபவனுக்கு தெருப்பொறுக்கி என்று தான் பெயரிட முடியும்...........
சிவகார்திகேயன் படங்களென்றால் குழந்தைகளுக்கு படு இஷ்டமாம் இந்த மாதிரி அபத்தை தெளிக்கும் படங்களயே குறி வைத்து நடிக்கும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு நம் குழந்தைகளை கூட்டிப்போவாமல் இருப்பது நாம் அவர்களுக்கு செய்யும் நன்மையாகும்.......
அய்யா சிவகாரத்திகேயன் அவர்களே நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடியுங்கள் தமிழ் சினிமா ரசிகன் உங்களை கொண்டாடுவான் அதை இதுபான்று குப்பைகளை கொட்டிவிட்டு எங்களை வேலை செய்யவிடுங்கள் விளக்கெண்ணெயை நீவ விடுங்கள்னு விஜய் டிவி கற்றுக்கொடுத்த வித்தயான அழவாச்சி காவியம் வரையாதீர்கள்.....
நல்ல படங்கள் வருங்காலங்களில் நடிப்பீர்கள்(?) என நம்புகிறோம்

No comments:

Post a Comment