Pages

Saturday, October 15, 2016

றெக்க சத்தியமா படும் மொக்க...

றெக்க சத்தியமா படும் மொக்க...


சேதுபதி சார் ஏன் சார்....?விஜய்யும் விஷாலும் சிவகார்த்திகேயன்களும் வாழுற பூமி இதுல நீங்களுமா சார்........?
மசாலா படம் நடிப்பதில் தவறேதும் இல்லை ஆன தவறான படங்களை தேர்வு செய்யாதீர்கள்.நாயகன் நடப்பதும் அடிப்பதுவும் தான் மசாலா படமென யாரோ இந்த டைரக்டருங்க மனசுல ஆளமா பதிய வைத்திருக்கிறார்கள் போலும்........
அய்யோ இன்னும் எத்தனை படத்துல தான் நாயகியை லூசாக கான்பிப்பீர்கள்னே தெரியல எப்பா குஷ்பு முதல் சமந்தா வர எல்லாரும் ட்ரை பண்ணியாச்சு இந்த அறிவு என்பது அரை சிட்டிகை கூட இல்லாத லுாசு ஹீரோயினி கேரக்டர் இன்னும் ஏன்பா அதேயே பிடிச்சி தொங்குறீங்க..........
இந்த லூசு ஹீரோயினி கேரக்டர் ஜெனிலியாவுக்கு வேணா செட்டாயிருக்கலாம் ஆனா ஜெனிலியாவுக்கு பெரியம்மா மாதிரி இருக்கும் லட்சுமிமேனனுக்கு எப்படியா செட் ஆகும்.......
ஆனா அந்த பெரியம்மாக்கு மேக்கப் போட்டவன் மட்டும் கையில கெடச்சான் சத்தியமா ஒரு அரைகிலோ மைதா மாவு வாங்கி மூஞ்சிலயே தேய்ச்சி விட்டிரலாம்னு இருக்கேன்.............
படத்தில பெரும் ஆறுதல் நம்ம சூரியெல்லாம் கூப்டு வந்து காமெடி பண்ண வைக்காததும் தம்பிராமய்யாவ கூப்டு வந்து சாவடிக்காததும்தான் ஆனா எல்லாத்துக்கும் சேர்த்து சதீஷ் செய்ராப்டி புரியாமா பேசறது தான் காமெடி போல.......
படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரயும் கிஷோரயும் வச்சிட்டு அவர்களது திறமை வீணடித்ததை தவிற இயக்குனர் பெருசா ஒண்ணும் செய்யவில்லை.பிளாஷ்பேக்ல அந்த கண்ணம்மா பாட்டயும் மாலாக்கு கேரக்டருயும் தவிர படத்தில வேற ஒண்ணுமே மனசில நிக்கல........
இசை அய்யோ இசை நம்ம இமான் அண்ணன் கையில சிக்கி படுற பாடிருக்கே அய்யா சாமி ஒரே டியுன்ல எத்தன பாட்டு.....? காத கட்டுதுய்யா.......
சேதுபதியிடம் ரசிக்க வைக்கும் விஷயமே அவரது உடல்மொழிதான அவரது கழிந்த நான்கு படத்திலும் மனுஷன் அசத்தியிருப்பார் ஆனா இந்த படத்தில என்னவோ கை நீட்டி காசு வாங்கிட்டோம் வந்து நின்னுட்டு போவோம்ங்கிற மாதிரி நடிச்சிருக்கார்.........
சேதுபதி சார் வெள்ளிகிழமை தோறும் படம் ரிலீஸ் அகட்டும் நல்ல விஷயம்தான் ஆனா விமலு விமலுன்னு உங்க நண்பர் ஒருத்தர் இங்க நடிச்சிட்டிருந்தாருங்கிறது மறந்திராதீங்க.....
நல்ல படங்கள தேர்ந்தெடுங்க காத்துகிட்டிருக்கோம்..........
ஆனா றெக்க படும் மொக்க சார் இதுக்கு உங்க வண்மம் படத்து நூறு தடவ பாத்திரலாம்.......

No comments:

Post a Comment