Pages

Saturday, October 15, 2016

எம்மவர் நிலமாள்வர் எரியுமுன் கண்டிடனும்......

விதைத்தவன் அறுத்திடாமல்
வினைகள் அறுக்கப்படா........
விதைத்ததின் பலன்பெறாது
விடை பெற்றிடல் விதிமுறனே.....
நாட்டியத்தில் தொடங்கியது
நாடகத்தால் தீர்ந்திடுமோ
நாட்டுமக்கள் அழுகுரல்தான்
நாயகன்பதி சேராதோ.......
வெட்கமற்ற ஆட்டமாடி
வேட்டையாடி பலபெற்று
சடுதியில் மரணித்தால்
புனிதநிலை பெறுவாரோ...
தோலை முதலாக்கி
தொழில்தனை தொடங்கிற்று
தோல்வியே இல்லையென
தோட்டத்தில் மறைந்திட்டு
மக்களை மாக்களாக்கி
மடயர்களை ஆரசனாக்கி
திறைமறைவில் செய்ததெல்லாம்
கண்முன்னே நிற்குதம்மா
லஞ்சமே ஊழலே
கஞ்சா வழக்கெனவே
தன்னாட்சி தானென்று
கொலை பலசெய்ததுவும்
பொய்மையும் தீமையும்
நிறைந்தி்ட்ட வாழ்வதனை
தவமெனவே மெச்சியதை
மறவாது எம்மனமே........
வஞ்சக வாழ்வுதனை
வாய்மை வெல்வதுன்டு
வென்றிடாமல் நின்றிடுமோ
மனமது பதறுதின்று........
அணையாத நெருப்பென
மனதினில் பலவுண்டு
எரிந்து தீரும்முன்
எம்மனம் குளிர்ந்திடனும்...
நின்பாவத்தை கழுவிடவே
எம்நிலத்தில் நீரில்லை
கடன்தனை பகிர்ந்தடைக்க
உம்வசம் ஆளில்லை
நாடகமோ நாட்டியமோ
நடப்பது நெசம்தானோ
நாதனை வேண்டுவதெல்லாம்
சாகாவரம வேண்டும்.......
வினைதனை அறுக்குமுன்
செத்துடாமல் காக்கவேண்டும்
விதைத்ததை அறுக்காமல்
விண்ணுலகம் ஏற்கவேண்டாம்
மூத்த அவரைப்போல்
எத்தனை அழுதிடினும்
எமக்கும் எமனுக்கும்
வேண்டாத நிலைவேண்டும்
இந்நிலத்தில் விதைத்தவற்றை
நிறைவாய் பெற்றிடனும்
எம்மவர் நிலமாள்வர்
எரியுமுன் கண்டிடனும்.......

No comments:

Post a Comment