மாம்பழத்துறையாறு அணையும் இனையம் துறைமுக கணக்கும்.......
எம் குமரி விவசாயிகளின் மேல் என்ன பாசமோ தெரியவில்ல நீர் வளம் நிறைந்நதிருக்கும் எம் மாவட்டத்தில் 2007 காலக்கட்டத்தில் வில்லுக்குறியின் ஆனைக்கிடங்கு பகுதியில் அணை ஒன்று கட்டத்தொடங்கினர்.பெரும் அரசியல் அறிவோ ஈடபாடோ இல்லாத காலக்கட்டம் ஏதோ நடக்கிறது என கடந்து சென்று கொண்டிருப்போம்.......
எம் குமரி விவசாயிகளின் மேல் என்ன பாசமோ தெரியவில்ல நீர் வளம் நிறைந்நதிருக்கும் எம் மாவட்டத்தில் 2007 காலக்கட்டத்தில் வில்லுக்குறியின் ஆனைக்கிடங்கு பகுதியில் அணை ஒன்று கட்டத்தொடங்கினர்.பெரும் அரசியல் அறிவோ ஈடபாடோ இல்லாத காலக்கட்டம் ஏதோ நடக்கிறது என கடந்து சென்று கொண்டிருப்போம்.......
சிலமாதங்களுக்கு பின்பு அதாவது 2008ஆம் ஆண்டின் தொடக்க காலக்கட்டத்தில் வில்லுக்குறி பகுதியின் அரசியல் நன்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கையில் அவரிடம் கேட்டேன் உங்க ஊரில் அணை கட்டுகிறார்களே அதன் பயண் என்ன என்று அதற்கு அந்த நன்பர் தம்பி பயண் என்பதெல்லாம் யாருக்கு வேண்டும்ம் மொத்தம் இருபது கோடி ருபாய் திட்டம் லோக்கல் மந்திரிக்கு ஒண்ணு எம்பிக்கு ஒண்ணு அப்புறம் எல்லா அதிகாரிகளுக்கும் சேர்த்து ஒன்னு அதில் எனக்கும் சின்னதா ஒரு தொகை கிடைத்தது என்றார்........
மந்திரி ஓகே அண்ணே அந்த எம்பி கட்சிதான் காசு வாங்காத சுத்தமான கட்சினு சொல்லுவாங்க நீங்க அவருக்கு ஒரு கோடின்னு சொல்லுறீஙக இதெல்லாம் நம்பிற மாதிரியா இருக்கு என்று கேட்டேன் அதற்கு அவர் தம்பி இன்னும் அரசியல் தெரியாம இருக்கீங்களே அது தேசிய கட்சிப்பா கட்சிய யாருப்பா நடத்துவா கட்சிக்காரனுக்கு சம்பளம் எஙகேயிருந்துப்பா போடவானுங்க கார் வண்டிக்கெல்லாம் தண்ணி ஊத்தியா ஓட்டறாங்க என சொல்லி சிரித்தார்(இன்று வரை என்னால் இதை நம்ப முடியவில்லை பின் வந்த காலங்களில் இந்த கட்சி ஆட்களின் சில நடைமுறையால் நம்பாமலும் இருக்க முடியவில்லை).......
ஆக ஒரு இருபது கோடி ரூபாய் திட்டத்தில் மூன்று கோடி ரூபாய் கமிஷன் அடிக்கப்பட்டதை மிக தைரியமாக ஒரு அரசியல் கட்சியின் கீழ்நிலை பொறுப்பில் உள்ள ஒருவர் சொல்கிறார் அவர் வரை அந்த மூன்று கோடியின் பங்கு பாய்ந்திருக்கிறது இருபது கோடியில் மூன்ற கோடி என்றால் அதன் சதவீதத்தை பார்த்தால் பதினைந்து சதவீதம் இந்தப் பதினைந்து சதவீதம் சிறு தொகை போல் தெரியலாம் ஆனால் எல்லா திட்டங்களிலும் அடிக்கப்படும் தொகை வெறும் பதினைந்தாக இருக்காது இருபது சில சமயம் நாற்பது வரை கூட போன திட்டஙகளுன்டு.........
இந்த கமிஷன் கணக்கை அப்படியே நம் இனயம் துறைமுகம் திட்டத்தினுடன் ஒப்பீடு பார்த்தால் அதன் தொகை புரியும்.ஏன் இன்று ஒட்டு மொத்த குமரியின் அரசியல் பேய்களும் இந்த திட்டம் வேண்டுமென ஒற்றைககாலில் நிற்கிறது என்பதும் புரியும்.குமரி மக்களுக்கு வாழ்வு கொடுக்க வந்த திட்டம் எனவும் வேலை வாய்பபை அள்ளி கொடுக்கும் திட்டம் எனவும் கூறி வருகிறது என்பதும் புரியும்...........
மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஆகும் செலவாக கூறியிருப்பது இருபத்தொன்பதாயிரம் கோடி இதன் பதினைந்து சதவீதத்தை கணக்கு செய்தால் நானூற்ற முப்பத்தந்து கோடி ஆக சும்மா இதை எத்தனை துண்டாக உடைத்தாலும் பெரும் தொகை மிஞ்சும் இது போக இந்தத் தி்டத்தை நடைமுறைப்படுத்தும் போது கிடைக்கும் ஒப்பந்தங்கள் அதில் வரும் லாபம் போனறவையெ்லாம் தனிக்கணக்கு இதிலிருந்து இந்த அரசியல் வாதிகளின் எதிரப்பும் திடீர் ஆதரவு நாடகமும் புரியும் அவர்களது எதிர்ப்பு நாடகமெல்லாமல் கமிஷன் தொகை பத்தாது என்பதறகாக அன்றி அதில் துளி அளவும் மக்கள் நலன் இல்லை.இதன் பிறகு ஒப்பந்தம் வழி யார் யாருக்கு எப்படியெல்லாம் பணம் பாயும் என்பதை குமரியில் கண் திறந்து கொண்டு வாழ்பவனுக்கு புரியும்.....
ஆக யாரோ ஒரு சிலர் இலாபம் பெற எம் கடலும் எம் மலையும் எம் நிலமும் பாழாக்கப்படுகிறது இதற்கு வேலைவாய்ப்பு பெருகும் இந்தத் திட்டம் வந்தால் தமிழகெமெங்கும் பாலாரும் தேணாறும் ஓடும் எனும் மாபெரும் பொய் மூட்டையை அள்ளித்தெளிக்கிறார்கள்.தன்னை படித்தவனாய் அறிவு நிறைந்தவனாய் காட்டிக்கொளளும் குமரித் தமிழன் சிறுசிந்தனையுமில்லாமல் கணவு கண்டு கிடக்கிறான.......
ஒரு நாள் வரும் இந்த கணக்கு புரிவதற்கு அதற்குள் இந்த மலையும் கடலும் நிலமும் அழிந்துப்போயிருக்கும் வழக்கம் போல் என் குமரித்தமிழன் தன்னை மட்டும் படித்தவனாய் அறிவானவனாய் மெச்சிக்கொண்டு மதம் பிடித்து திரிவான்.........
நன்றி
குமரியை நேசிக்கும்
குமரித்தமிழன்......
குமரியை நேசிக்கும்
குமரித்தமிழன்......


No comments:
Post a Comment