Pages

Friday, August 30, 2019

பாஜகவும் அதன் அறிவியல் அறிஞர்களும்- #1

பாஜகவும் அதன் அறிவியல் அறிஞர்களும்- #1

இந்திய துனை கண்டத்திலேயே ஏன் ஆசியாவிலேயே ஏன் அகில உலகிலேயே அறிவியல் அறிஞர்கள் நிறைந்த ஒரே கட்சி என்று உண்டென்டால் அது நமது ஒரு பாரதிய ஜனதா கட்சி ஒன்றுதான்.அதன் தலைவர்கள் முதல் தொண்டர் படை வரை அனைவரும் அறிவியல் ஆய்வாளர்கள்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு அவர்கள் எடுத்துரைத்த சில அறிவியல் கருத்துக்கள் அபாரமானவை.......

திருவாளர் நரேந்திர மோடி அவர்கள் மும்பையில் ஒரு மருத்துவ கல்லூரியை திறந்த வைத்தபோது இந்தியா மருத்துவர்களின் மருத்துவத்தின் பிறப்பிடம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன மருத்துவத்தின் திறவுகோலாக இருந்தது இந்தியாதான்  உலகின் முதல் ப்ளாச்டிக் அறுவை சிகிச்சை செய்த ஒரு நாடு நாம் தான் அதன் விளைவுதான் நாம் இன்று மரியாதையுடன் வணங்கும் கனபதி பாபா என சொல்லி கேமராவை பார்த்து சிரித்தார் அரங்கமே கரவொலி எழுப்பி அடங்கியது ஆம் இந்தியர்கள் பெருமை கொண்ட தருணம் அது.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மனிதனின் கழுத்தல் சிறிய யானையின் தலையை பொருத்துவது என்பது எவ்வளவு பெருமையான விடயம்........?

ஒரு குழந்தை பெற்று கொள்வது என்பதே பெரும் பாடாகிப்போன இந்த காலத்தில் செயற்கை கருத்தரித்தலுக்கு பணம் வாறி இறைக்கும் லட்சக்கணக்கான மக்கள் வாழும் இந்த இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குந்திதேவி நூறு குழந்தைகளை செயற்கை கருத்தரிப்பின் வழி பெற்றடுத்தார் என்று இந்திய மருத்துவத்தின் உன்னதத்தை ஒருமுறை எடுத்துரைத்தார்.அன்று மட்டும் பேட்டன் ரைட்ஸ் இருந்திராந்தால் நாம் தான் இன்று மருத்துவ ஆராய்ச்சி துறையில் முதன்மை நாடாக இருந்திருப்போம்.............

ஐயா  மோடி அவர்கள் ஒரு நுண்ணறிவு கொண்ட சுற்றுசூழல் ஆர்வலர் வழிமண்டலங்களை பற்றியும்  காலமாற்றத்தை பற்றியும் அவரது கருத்துக்களை இதுவரை யாரும் மறுத்ததேயில்லை இரண்டாயிரத்து பதினாலாம் ஆண்டு பள்ளி குழந்தைகளுடனான உரையாடலின் போது காலச்சூழல் என்பது மாறுவதேயில்லை நாம் தான் மாறி கொண்டிருக்கிறோம் வந்து ஏறும்போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை காலச்சூழலோடு சேர்த்து குழப்பி கொள்ளகூடாது என மாணவர்களுக்கு பாடம் எடுத்தார் நம் அறிவியல் மகான்............

உலகம் வெப்பமயமாதல் என்பது ஒரு மாயை மட்டும் தான் அது நமது நமது மனதில் ஏற்படும் ஒரு மாயதோற்றம் என்று தெளிவு படுத்தியவரும் நம் அறிவியல் மகான் தான். ஆனால் அதே அறிவியல் மகானிடம் உலகம் வெப்பமடைகிறது என நம் ராஜா சர்மா அவர்கள் பூஜை நடத்தி பூமியை குளிர்விக்கிறாரே அது அவரது மனநிலை கோளாரா என யாரும் கேட்பதில்லை ஒரு வேளை  சிறு வயதிலேயே முதலைகளை பிடித்து விளையாடும் அளவிற்கு இயற்கையோடு இணக்கம் கொண்ட ஒருவர் எதை சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற தெளிவாக கூட இருக்கலாம்.........

இந்திய அறிவியலை உலகுக்கு உரைக்கும் சுற்றுசூழல் அறிவு அபரிதமான கொண்ட நம் நாயகனை போற்றுவோம்

#அறிவியல்_வளர்ப்போம்
#தொடரும்

நன்றி
#கிழவனார்

No comments:

Post a Comment