Pages

Friday, August 30, 2019

பாஜகவும் அதன் அறிவியல் அறிஞர்களும்# 2

பாஜகவும் அதன் அறிவியல் அறிஞர்களும்# 2

உலகம் போற்றும் இயற்கையியல் அறிஞர் சார்லஸ் டார்வின் அவர்கள் பெரும் ஆராய்ச்சிகளுக்கு பிறகு வெளியிட்ட  அறிவியல் கொள்கை தான் உயிரினங்களின் பரினாமவளர்ச்சி கொள்கை இயற்கையில் நிலவியல் ஆராய்ச்சியாளரான டார்வின் தான் படித்த இறையியல் பட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு தன் குழுவுடன் பல கடல் பயனங்களை மேற்கொண்டு ஆராய்ச்சிகள் பல செய்தார்........

அவரது ஆராய்ச்சி முடிவு படி தகுதியான உயிர் வாழும் என்பதாகம். உயரினங்கள் பரினாம வளர்ச்சி படி குரங்குகளின் பரினாம வளர்ச்சியே இன்றைய நாம் அதாவது மனிதர்கள்.இறையியல் படித்த ஒருவர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டபோது அன்றைய கடவுள் மனிதரை படைத்தார் எனும் கொள்கை படி மதம்பரப்பிய மத நிறுவனங்கள் அவரை எதிர்த்தன எள்ளி நகையாடின ஆனால் அவர் இறப்பதற்குள் அகில உலகமே அதை ஏற்று கொண்டது இன்றைய உயிரியலின் அடிநாதமாய் விளங்குவது அவரது பரினாம வளர்ச்சி கொள்கை தான்.இன்று டார்வின் உலக மக்களால் பரினாமத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்........

ஆனால் நம் கோ மூத்திரம் குடித்து அறிவு வளர்த்த பாஜகவின் அறிஞர்களால் இந்த கருத்தை ஏற்று கொள்ள முடிவதில்லை. இன்றைய மோடி அரசின் மந்திரிகளிள் முக்கியமானவரான சத்திய பால் சிங் முந்தய அரசில் கல்வித்துறையின் இனை அமைச்சராக இருந்தவர் வேதியியல் படித்து காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்து பின்னர் அரசியலில  புகுந்து மோடி அரசின்  இரண்டு ஆட்சிகளிலும் மந்திரி பதவியில் இருப்பவர். அத்தகைய உயர் பொறுப்பில் இருக்கும் இவரால் டார்வினின் பரினாம வளர்ச்சி கருத்துகளை ஏற்று கொள்ள முடிவதில்லை........

மனுதத்துவத்தின் படி பிரம்மனின் தலை மார்பு தொடை பாதம் இதிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்னும் கட்டுக்கதையை நம்பும் இவரால்/இவர்களால் டார்வினின் பரினாம வளர்ச்சி தத்துவத்தை ஏற்று கொள்ள முடியவில்லை.டார்வினின் தத்துவம் என்பது சுத்த பேத்தல் அது அறிவியலின் போதாத காலம் என்ற ரீதியில் அடித்து பேசுகிறார் அதற்கு அவர் வைக்கும் உறுதியான வாதம்தான் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது ........

“இந்த உலகில் நான் வாளும் காலத்தில் இதுவரை ஒரு குரங்கும் மனிதனாக மாறியதை நான் இதுவரை பார்த்ததில்லை என்னை விடுங்கள் நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா......?” என்று நம்மை நோக்கி கேள்வியை எழுப்புகிறார்.....

இப்படி பட்ட அறிவு நிறை அறிவியல் அறிஞர்களை தலைவர்களாக கொண்ட பாஜக தொண்டர்கள் மாரிதாஸ்களை எங்கள் புள்ளைங்க எல்லாம் பயங்கரம் என்று கொண்டாடுவதில் என்ன தவறு......?

#அறிவியல்_வளர்ப்போம்
#தொடரும்

நன்றி
#கிழவனார்

No comments:

Post a Comment