Pages

Monday, September 2, 2019

பாஜகவும் அதன் அறிவியல் அறிஞர்களும்#3

பாஜகவும் அதன் அறிவியல் அறிஞர்களும்#3

எண்ணிலடங்கா அறிவியல் அறிஞர்களை கொண்டு திகழும் நம் பாரத தேசத்தின் தவப்புதல்வர்களான பாஜக எனும் அறிவியல் அறிஞர் கட்சியின் அராய்ச்சிகளும் கற்பிதங்களும் அச்சரியமூட்டுபவை.....

இப்பூமி பந்தின் உயிரினங்கள் யாவும் பலுகி பெருகி நிறைந்திருப்பதன் காரணம் இனசேர்க்கை ஒன்றுதான் இந்த இனசேர்க்கையில் வீரியம் கொண்டவையும் காலச்சூழலை கடந்து இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களும் மட்டும்தான் இப்பூமிபந்தில் பிழைத்து கிடக்கும் என்பதும் தான் இயற்கைவியலாளர் டார்வினின் கொள்கையின் சாராம்சம் ஆனால் இதை சங்கிகள் ஏற்று கொள்ள தயாராகவேயில்லை என்பதை முந்தைய பதிவில் விளக்கியிருந்தேன்.........

இந்திய நாட்டின் நீதித்துறையில் மகேஷ் சந்திர சர்மா எனும் பார்ப்பன நீதிபதி இருந்தார். மாடுகளை தேசிய மிருகமாக மாற்ற வேண்டும் என்று வெகு காலமாக பேசிவரும் அதிமேதாவி அவர் உதித்த உன்னத அறிவியல் கருத்துகளில் மிக மிக்கியமானது பாரத தேசத்தின் தேசிய பறவை மயில் கடைப்பிடிக்கும் பிரம்மச்சரியத்தை குறித்துதான்.....

அதாவது மயில் முழுநேர பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் ஒரு அற்புத பறவையாகும் அது இனசேர்க்கை செய்வதில்லை ஆனாலும் அவை பலுகி பெருகுகின்றன அதற்கு காரணம் அதன் கண்ணீரை விழுங்கும் பெண்மயிலானது முட்டை இட்டு குஞ்சி பொரிக்கிறது என்று அறிவியல் பட்டத்தாரியான இந்த நீதிபதி அறிவியல் பூர்வமாக இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு பேசியிருக்கிறார்.........

ஒரு அறிவியல் பட்டத்தாரி நாட்டின் உன்னத்தமான  பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி பேசிவிட்டாரே என ஆதங்கபடவும் முடியவில்லை ஏனைன்றால் மயிலெனும் தேசிய பறவையை யார்  பகைத்தாலும் ஆன்டிநேஷனல் பட்டம் வாங்க முடியும்.....

ஒட்டுமொத்த சங்க பரிவார்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை எதிர்த்து நம்மால் கண்ணீர் வடிப்பதை தவிர ஒன்றுமே செய்யமுடியவில்லை. ஆனால் கண்ணீர் வடிப்பதற்கு முன்பும் நம்மை சுற்றி ஏதாவது பெண்மியல் உள்ளதா என பார்க்க வேண்டயிருக்கிறது............

#அறிவியல்_அறிவோம்
#தொடரும்

No comments:

Post a Comment