Pages

Monday, September 2, 2019

நீர் சூழ் குமரி #2

நீர் சூழ் குமரி #2

பழையாறு

மேற்கு தொடர்ச்சி மலையின் சுருளோடு எனும் இடத்தில் தோன்றி பல நீரூற்றுகள் சிற்றோடைகளாக இனைந்து பழையாறாக உருவாகி குமரி மாவட்டத்தில் நாற்பத்திநாலு கிலோமீட்டர்கள் ஓடி மணக்குடியில் கடலில் கலக்கும் இந்த ஆறு பல வரலாற்று சிறப்புகள் கொண்ட ஆறாகும்.......

குமரி  கண்டத்தில் ஓடிய பக்றுளியாறு தான் இந்த பழையாறு என இலக்கியங்கள் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். இது போக இந்திரனின் ஐராவதம் யானை தன் தந்தால் கிழித்த கோட்டால் உருவான ஆறு என்பதால் இந்த ஆற்றிற்கு தந்தந்தி என்று பெயர் வழங்கப்பட்டதாக ஒரு கதையும் உண்டு..........

குமரியின் வளங்களில் லயித்து போய் அதை தங்கள் அதிகாரத்திற்குள் வைத்துகொள்ளு சேர சோழ பாண்டியர்கள் தொடர்ந்து மோதிக்கொண்ட இந்த நிலத்தின் வளமைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று நூறடிக்கு மேல் வீதியில் நாற்பத்திநாலு கிலோமீட்டர்கள் ஓடி நாஞ்சில் நாட்டயும் இடநாட்டயும் வளம் கொழிக்க வைத்த இந்த ஆறென்னால் அது மிகையாகாது...........

வேணாட்டு மன்னர்களால் கட்டப்பட்ட வீரப்புலி அணைகட்டும் பள்ளிகொண்டான் அணைக்கட்டும் சாட்டபுதூர் அணைக்கட்டும் பிள்ளைபெத்த அணைக்கட்டும் பாண்டியர்களால் கட்டப்பட்ட குட்டி அணைக்கட்டும் சோழர்களால் கட்டப்பட்ட சோழக்குட்டு அணைக்கட்டும் மிஷனரிகளால் கட்டப்பட்ட மிஷன் அணைக்கட்டும் அதன் பின்னர் கட்டப்பட்ட சபரி அணைக்கட்டும் குமரி அணைக்கட்டும் வீரானிமங்கலம் அணைக்கட்டும் இந்த நிலத்திற்கான நீராதாரம் மட்டுமல்ல இந்த நிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியவர்களின் ஆட்சியில் வைத்திருந்தவர்களின் வரலாறும் தான்.............

சுருளோட்டில் உருவாகி பூதப்பாண்டி தாழக்குடி ஒழுகினசேரி கோட்டாறு சுசீந்திரம் என் ஓடி மணக்குடியில் கடலில் கலக்கும் இந்த ஆறு அனந்தனாறு  பள்ளிக்கொனடகாலு பெரும்காளையாறு பறக்கைக்காலு சுசீந்திரம் காலு மணக்குடியன் காலு  என சிற்றாறுகளாக பிரிந்து மொத்த நாஞ்சில் நிலத்தின் பசுமைக்கும் ஆதாரமாக திகழ்கிறது........

ஒரு காலத்தில் நூறடி வீதியில் பாய்ந்து  குமரி நிலத்தில் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீராகவும் இருந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆறு இன்று பதினான்கு கிலோமீட்டருக்குமேல் முழுவதுமாக மாசடைந்து விட்டதாகவும் மொத்தமாக இதை தூர்வார கோடிகள் ஆகும் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.அளவுக்கு அதிகமாக கிடைத்தவை யாவும் மதிப்பிழந்து போகும் என்பதற்கு உதாசீனப்படுத்தபட்டு ஆக்கிரமிக்கப்பட்டு மாசுப்படுத்தப்பட்டு  குமரி மாவட்டத்தில் அழிந்து வரும் நீர்நிலைகளே சாட்சி...............

வேணாட்டயும் இடநாட்டயும் நாஞ்சில் நாட்டயும் ஒருங்கே கொண்ட குமரியின் நிலத்தையும் நீரையும் பாதுகாப்போம் பழம்பெரும் ஆறுகளை கழிவுநீரோடையாக்காமல் இருப்போம்.......

ஐயன் வள்ளுவன் சொன்னதை நினைவில் கொள்வோம் #நீரின்றி_அமையாது_உலகு

#நன்றி
கிழவனார்....


No comments:

Post a Comment