Pages

Monday, September 2, 2019

குமரி மாவட்டமும் பெருகிவரும் சாதிய பற்றும்

குமரி மாவட்டத்தில் சில வருடங்களாக இளைஞர்களின் மத்தியில் சாதிய பெருமைகள் பேசும் தன்மை
கூடி கொண்டே வருகிறது சுயசாதி  பற்று என்பது மெல்ல மெல்ல மாறி அது சுயசாதி வெறியாக மாறி நிற்கிறது.......

இதன் அடுத்த கட்டம் என்ன என்பதை ஆராயும் அளவிலான அறிவும் அனுபவமும் இருப்பதால் தான் இதை எழுதுகிறேன். இந்த மண்ணில் நடந்த மத  கலவரமும் இப்படித்தான் சிறுக சிறுக ஊற்றி வளர்க்கப்பட்டிருந்த மதவெறி வெடித்து கிளம்பியபோது பெரும் சேதத்தில் போய் நின்றது அதுபோன்ற மற்றொரு சம்பவம் நடைபெறாதிருக்க வேண்டும் என்பது நம் எல்லாவரின் விருப்பம்..............

ஐயோ நாங்கள் கல்வி அறிவுபெற்ற மாவட்டத்தில் இருக்கிறோம் இங்கே சாதி சண்டைகள் வரவே வராது என தம் கெட்டுகிறீர்கள் என்றால் நீங்கள் உங்களை சுற்றி நடப்பவற்றை கவனிக்காமல் இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் எல்லாம் அறிந்தும் இதை ரசித்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இன்று இந்த சாதிய பெருமைகளை அல்லது வேறு வார்த்தையில் சொல்வதென்றால் சாதிய வெறியை வளர்த்து கொண்டிருப்பதே படித்த இளைஞர்கள் தான்.இன்று குமரிமாவட்ட முகநூல் பக்கங்களில் பத்து பதிவுகளை படித்தால் பதினொன்றாவது பதிவு சாதி பெருமை பேசும் பதிவு. இது எங்கே இருந்து அது தொடங்கிட்டு என்று வருடங்களாக  ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் அதற்கான சரியான இடத்தில் வந்து நிற்க முடியவில்லை..............

வடதமிழகத்தை இல்லாமல் செய்து  கொண்டிருக்கும் இந்த சுயசாதி வெறி நெல்லை மாவட்டம் வரை பரவியிருந்த காலம் போய் இன்று குமரி மாவட்டத்தையும் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது. இங்கு குறிப்பிட்ட சாதி என்று இல்லை இங்கு இருக்கும் எல்லா சாதிகளுக்கும் தம்மை ஆண்ட சாதிகளாக நிறுவ சமீப காலமாக மெனக்கெட்டு கொண்டிருக்கின்றார்கள் அதிலும் குறிப்பாக படித்த இளைஞர்கள் அதை பெருமையாகவும் மிகவும் இன்றியமையத்தாகவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.............

சில வருடங்களுக்குள் நடந்தவற்றை பாருங்கள் 

1. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் புகழ் பெற்ற குருபூஜைகள்  திடீரென இங்கேயும்  முளைக்க தொடங்கிவிட்டன. குமரி பாலன் என்ற ஒருவருக்கு குருபூஜை நடத்துகிறோம் பேர்வழி என்று பெரும்பான்மை ஆழவேண்டும் சிறுபான்மை  வாழ வேண்டும் என்று சிறுபான்மையிலும் சிறுபான்மையான ஒரு சமுதாயம் பதாகைகள் வைத்து மாற்று சமுதாயத்தினரை சீண்டுவது......

2.அனந்த பத்மனாபன் எனும் திருவிதாங்கூர் சமஸ்தான மெய்காப்பாளரை சுதந்திர போராட்ட வீரராக  உருவகப்படுத்தி அவருக்கு குருபூஜை  நடத்தி மாற்று சமுதாயத்தினரை சீண்டுவது......

3. வரலாற்று திரிபுகள் களரியை நாங்கள் தான் பயற்றுவித்தோம் என்று இந்த மண்ணிற்கும் அந்த கலைக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு சாதியினர் களரியை உரிமை கொண்டாடி களரி கலையினை உருவாக்கிய இன்று வரை  பயற்றுவித்துவரும் சமுதாயத்தினரை சீண்டுவது......

4. மதத்தின் பேரை உட்புகுத்தி ஒரே சமுதாயத்தை சேர்ந்து இருவேறு மதப்பிரிவினரை சீண்டி கொண்டே இருப்பது........

5. கட்டுக்கதைகளயும்  கதைப்பாடல்களயும் அடிப்படையாக கொண்டு அடிப்படை தரவுகளே இல்லாமல் குளச்சல் போரின் வெற்றியை சொந்தம் கொண்டாடுவது குளச்சல் போர் நினைவு  நாளில் முகநூலில் மோதிக்கொள்வது........... 

6. குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இனைந்த பிறகு இங்கே வாழும் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மலையாளிகள் எனும் பக்கத்தை தொடங்கி ஒவ்வோரு பதிவிலும் குமரிநிலத்தின் மற்ற சாதியினர் அனைவரயும் சீண்டுவது.......

7.சாதி பெருமைகள் நிறைந்த பாடல்களை இசையமைத்து உருவாக்கி  இனையத்தில் வைரலாக்குவது.........

8. சேர மன்னர்கள் தம் சாதியினர் தாம் சூரிய குலம் என்று ஆதாரம் அற்ற புனைவு வரலாற்றுகளை உருவாக்கி அதை எதிர்த்து கேள்வ கேட்பவர்களை புழுக்கைகள் எனவும் கலப்பு எனவும் சாதிய தூய்மை வாதம் பேசுவது............

இப்படி அடுக்கி  கொண்டே போகலாம்  ஆனால் நான் சில விடயங்களை  மட்டுமே தொட்டிருக்கிறேன். ஒன்று நினைவில் வைத்துகொள்ளுங்கள் இங்கே இந்த மண்ணின் மக்களின் ஒர்மை பலரை பாதிக்கும் அதை கலவரத்தின்  பெயரிலோ அல்லது காழ்ப்புனர்ச்சியின் பெயரிலோ தடுத்தாக  வேண்டும்.அதற்காக ஆட்களை வைத்து மக்கள் மனதில்  விசம் கலக்கும் வேலைகள் தான்  இந்த சாதிவெறியும் மற்ற சாதி துவேசமும் வரலாற்று திரபுகளும்..............

இந்த நிலத்திற்கு என்று ஒரு பெருமை உண்டு கல்வியாளர்களை அறிவியல் அறிஞர்களை எழுத்தார்களை என்று பலரை உருவாக்கிய மண் இது .சாதி பெருமையை தூக்கி பிடித்து இந்த மண்ணின் பெருமைகளை சிறுமைகளாக்காதீர்கள் இல்லை இன்னும் சேரர்கள் நாங்கள்தான் குளச்சல் போரை கடலில் நடத்தி வெற்றி கண்டது நாங்கள்தான் விரஷ்னி சத்திரியர்கள் நாங்கள் தான் களரியை கண்டுபிடித்தவர்கள் நாஙகள் என கூப்பாடுதான் போடுவீர்கள் என்றால் தரவுகளை தந்துவிட்டு சாதி சண்டை போட்டு சாகுங்கள்...........

மீண்டும் சொல்கிறேன் குமரியை சாதி சண்டைக்கான மைதானம் ஆக்காதீர்கள் உங்கள் ரத்தங்களை குடிக்க கொடும்பசியெடுத்த ஒரு கூட்டம காத்துகிடக்கிறுது..................

நன்றி
#கிழவனார்

No comments:

Post a Comment