Pages

Tuesday, September 24, 2019

மாவீரன் சுடலை பாண்டி நாடார்

மகேந்திரகிரி மலையின் நறுமணத்தை நுகர்ந்தபடி தமிழ் தேவ சித்தர்கள் வாழ்ந்த வாழ்வியலின் சித்த மருத்துவ எச்சங்களை சுமந்தபடி மேற்கு நோக்கி தமிழ் பிறந்த நிலமாம் குமரியை நேரே கிழித்து நாற்பது கல்லுக்கு வளம் நிறைத்தோடி அரபிக் கடலை முத்தமிடும் பஃறுளியாற்றின் நடுமத்திய கரையில் அமைந்திருக்கும் கொற்றமாறு எனும் மாநகரம் அதன் ஆண்டு தோறும் நிகழும் சித்திரை பவுர்னமி முழு நிலவு விழாவை கொண்டாட கோலாகலமாய் தயாராகி கொண்டிருந்தது......

பண்டைய ரோமர்கள் கிரேக்கர்கள் முதல் இன்றைய சோழர்கள் பாண்டியர்கள் சேரர்கள் மற்றும் எல்லா குறு சிறு நில மன்னர்கள் ஆண்ட நிலத்தின்  மக்கள் அகமகிழ்ந்து கொண்டாடும் இந்த பெருவிழாவை  காண  இந்நகரத்தை முற்றுகையிடும் நாள்.சேரர்களும் பாண்டியர்களும்  சோழர்களும் நாயக்கர்களும் இப்பெரும் நிலத்தின் பேரழிகில்  மயங்கி மாநகரினை சொந்தம் கொண்டாட மோதி திரிந்த வரலாற்றை இன்றும் நினைத்தால் குருதியாறுகள் நினைவில் வந்துபோகும்..........

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை களைகட்டும் இந்த மாநகர சந்தையில் இல்லாத பொருளே இல்லை பாண்டிய தேசத்து உப்பு முதல் கொண்டு மத்திய கிழக்கின் தங்க வைடூரியம் வரை பாரசீகத்தின் நறுமண தைலம் முதல் சோழர்களின் பட்டாடை வேணாட்டின் பனம் பானங்கள் முதல் கருப்பட்டி வரை எல்லாம் கிடைக்கும் என இந்த மாநகரை ஆயிரத்தி ஐநூரு வருடங்களுக்கு  முன்னே  ரோமிலிருந்து இந்த மாநகரை  தரிசித்து சென்ற கடல்போக்கன் ப்ளினே எழுதி வைத்திருக்கிறான் இப்படி முக்காலமும் பெயர் பெற்ற இந்த மாநகரத்திற்கு இந்திரனே மனித பிறப்பெடுத்து வந்து போனதாகவும் நகரத்தின் ஓரத்தில் அமைந்திருக்கும் ஆலயத்தை  அவனே எழுப்பியதாகவும் பஃறுளியாரு அவனது யானை ஐராவதம் தன தந்ததால் உண்டாகியது எனவும் ஒரு கதை பாடலயும் பண்டாரங்கள்  பாடி வைத்திருந்தார்கள்............

இப்படி  பெயர் பெற்ற மாநகரின்  தனித்துவம்தான்  இந்த வருடா வருடம் சித்திரை மாதம் மூண்றாவது சனி அன்று தொடங்கி பவுர்ணமி அன்று நிறைவு பெறும் இந்த சித்திரை திருநாள் வணிக பெருவிழா.பெயர் தான் வணிக பெருவிழா என்றாலும் வணிக பெருவிழா அல்ல எல்லா நிலைத்து சான்றோர்களும் ஒண்றுகூடும் அறிவு பெருவிழா வேணாட்டு களரி ஆசான்கள் தம்மிடம் வித்தை கற்ற வீரர்களை களமிறக்கும் வீரத் திருவிழா  சேர நாட்டு மங்கையர் நடனம் பயிலும் கலை திருவிழா அது............

மண்ணின் கலையாம் களியலடி மலை தமிழர் கலயாம் கதகளி என எல்லா வித கலைகளும் அரங்கேற்ற படும் நாட்டிய திருவிழா தெருவெங்கும் விழா கோலம் பூண்டு நிலமெங்கும் மாக்கோலம் பெற்று அலங்கார விளக்குகள் ஒளியில் தக தகவென மின்னி நிற்கும் இம்மாநகரம் அந்த பத்து நாளும்.வேணாட்டின் கட்டிளம் காளைகள் தம் நெஞ்சம் மலர்த்தி வீர நடை பயில்வதாகட்டும் சேரத்து பெண்டியர் தம் பேரழகால் காளையர்களை கவர்வதாகட்டும் அந்த பத்து நாளும் காதல் அலைகள் வீசும்  தம் கண்களால் சுயம்வரம் நடத்தும் நிகழ்வுகள் ஆயிரம் நடக்கும்.....

இந்த வியாபார நகருக்கு வட மலபாரிலிருந்து  தன் குடிம்ப சகிதம் வந்து தன நிலத்தின் மிளகு மற்றும் வாசனை பொருட்களை விற்று பத்து நாள் விழாவை ரசித்து பொன்னும் பொருளொடும் திரும்புபவர் பெருஞ்செல்வந்தர் மஸ்தான் பகதூர் கான். கொற்றமாறின் திருவிழா  வருகிறதென்றால் அவரது இரு மனைவிகளும் ஏழு பெண்குழந்தைகளுக்கு பெரும்மகிழ்வோடு தயாராகி  விடுவார்கள் எல்லா வருடமும் போல் இந்த  முறையும் காளை பூட்டிய நான்கு  வண்டிகளில்  தன்பணியாட்கள் மற்றும் குடும்பத்தினர் சகிதமாக வியாபார விழாவுக்கு கிளம்பினார் மஸ்தான்...............

இரண்டு நாட்கள் காடும் மலையும் பயனித்து வேனாட்டு எல்லையை அடைந்துவிட்டால் விடியும் தருவாயில் இவ்விழா நடக்கும் கொற்றம் ஆற்று பகுதியின் கிழக்கே இருக்கும் காதர் பாய் வீட்டை சென்றடைந்து விடலாம் அதன் பிறகு ஓய்வு எடுத்துவிட்டு அடுத்த நாள் முதல் வியாபாரத்தயும் கேளிக்கைகளயும் கண்டு ரசிக்கலாம் இதுதான் மஸ்தானின் திட்டம் வண்டிக்காரர்களின் சத்தங்களும் அதனை ஒத்து காளைகளின் பாய்ச்சலும் அதனால் வண்டியின் வேகமும் அதிக மெடுக்கவே மெல்ல தன் தலையை சாய்த்தபடி கண்ணயர்ந்தார்.இரண்டு நாள் பயணம் வேனாட்டு அரன்மனையை பகுதியை வந்து அடையும் கோது பொழுது சாய்ந்திருந்தது மஸ்தானுக்கோ தக்கலையில் ஓய்வெடுத்து மறுநாள் காலையில் பயணிக்கலாம் எனும் எண்ணம் ஆனால் அவரது மனைவிகளும் மகள்களும் வேலையாட்களும் சிறிய தூரமே உள்ளது இரவே பயணத்தை தொடருவோம் என்று வற்புறுத்தவே அரைமனதோடு சம்மதித்ததார். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை அவரது உற்ற நன்பரான புலிக்காட்டான் கடந்து மாதம் கொற்றமாறுக்கு வந்தபோது கண்ட சில காட்சிகளை விவரித்திருந்தார். அதை எண்ணும்போது சம்மதம் இல்லையென்றாலும் தன் வேலையாட்கள் இருக்கும் நம்பிக்கையில் சம்மதம் தெரிவித்தார்.........

வண்டிகள் நிலவெளிச்சத்தில் காளைகள் கழுத்து மணி அதிர வேகமெடுக்க தொடங்கின மேற்கு மலையின் முகட்டில் நிலமகள் சிரிக்க வண்டிகள் கள்ளி காடுகளை தாண்டி குதிரைப்பாய்ந்தான் குளத்தங்கரையை நெருங்கியது. வேகமெடுத்த வண்டிகள் வேகம் குறைந்து நின்றன ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மஸ்தான் துகில் கலைந்த என்னாயிற்று என்று வினவினார் அவர் பேசிமுடிப்பதற்குள்  முதல் வண்டி பொல பொல வென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அவரது பணியாட்கள் கதறல் கேட்கவே தன் வண்டியில் இருந்து இறங்கி என்னவென பார்த்தார் மஸ்தான்.வண்டிகளை சுற்றி இருபது பேருக்கு மேலிருக்கும் இதுவரை மஸ்தான் பார்த்திராத ஆட்களாக இருந்தனர்.  அவர்களது நிறமும் அவரது மீசையும் உயரமும் பார்க்கும் போது வடக்கே உள்ளவர்கள் போலவே இருந்தார்கள். எரிந்துபோன வண்டியை சுற்றி நரிகளை போல் ஊளையிட்டு சிரித்து வந்தார்கள் புலிக்காட்டான் சொன்ன காட்சிகளில் இவர்கள் தான் முக்கியமானவர்கள்.மஸ்தானுக்கு அடுத்து நடப்பவை புரிந்து விட்டது உடனடியாக தான் கற்ற வித்தைகளை கான்பித்தார் ஆனாலும் தாக்கு பிடிக்க முடியவில்லை. அவரது வேலையாட்கள் அடித்து வீழ்த்தப்பட்டனர்

மஸ்தானையும் அவரது  வேலையாட்களயும் வீழ்த்திய கும்பல் மெதுவாக அடுத்த வண்டியை நோக்கி நகர்ந்தது வீழ்த்தப்பட்ட மஸ்தான் அடுத்து நடக்கப்போகும் கொடுமையை எண்ணி வெடித்து அழத்தொடங்கினார்.வந்த வாகனங்களில் பெண்கள் இருந்த வண்டியை கவிழ்க்க இருவர் சேர்ந்த அது அசைக்க தொடங்கினார் வண்டி மெதுவாக சரியதொடங்கியது.

வீச தொடங்கிய பெருங்காற்றை  கிழித்தபடி ஒரு வெள்ளை புரவி நிலம் அதிர மின்னல் கீற்றை  போல் வந்தது அந்த குதிரை நிற்குமுன் அதில் இருந்த அந்த வீரன் மூன்றடிக்கு மேலே எழும்பி குதித்து தன் வலது முட்டை நிலத்தில் ஊன்றி சாய்ந்த வண்டியை தன் தோளில் தாங்கி நின்றான் . அந்த காட்டாள கும்பல் திகைத்து நின்ற நொடிக்குள் தன் இடுப்பில் இருந்த சுருட்டுவாளை வீச இருவரின் தலை தெறித்து விழுந்து உருண்டு குளத்தின் நீரில் விழுந்தது தன் முதுகில் வைத்திருந்த பனைகைத்தடியை எடுத்து வண்டிக்கு தாங்கு வைத்து நிமிர்ந்து எழுந்தது அந்து உருவம்.............

நிலவெளிச்சத்தில் ஒற்றை பனைமரமாக எழுந்து  நின்ற அந்த வீரனை பார்த்த மஸ்தான் திகைத்து நின்றார்.ஒற்றை நொடியில் தன் வீரத்தால் மொத்த கூட்டத்தயும் அறுத்தெறிந்த ஒற்றையானை பலம் கொண்ட அந்த மாவீரன் தன் முன் நிற்பதை கண்டு  அவனை நெருங்கிய  மஸ்தான்...........

நீங்கள் இசக்கி பாண்டி நாடாரா.....?

இல்லை அவரது மகன் சுடலைபாண்டி நாடார் என கர்ஜித்தான் அந்த மாவீரன்

No comments:

Post a Comment