Pages

Sunday, October 20, 2019

ஒரு காலத்தில் மதமாற்ற வறுமையை பயன்படுத்தினர் எனும் வார்த்தைக்கு குமரிமாவட்டத்திற்கு வெளியே இருக்கும் பலருக்கும் அர்த்தம் தெரியுமா என்று தெரியாது ஆனால் இவர் சொல்ல வருவது பன்னுக்கும் ரொட்டிக்கும் மதம் மாறியவர்களே குமரி கிறுத்தவர்கள் என்று..........

வரலாற்று குறிப்புகளை படித்தால் தெரியும் தமிழரின் கிறுத்தவ மதமேற்பு எதற்காக நடந்தது என்று சவேரியார் காலத்திலும அதற்கு முன்பாகவும்  மதமாற்றங்கள் நடந்தது அது முழுக்க முழுக்க பாண்டியர் வீழ்ச்சிக்கு பின்னர் தூத்துக்குடி பரவர்கள் அடக்குமுறைக்கு எதிராக வெகுண்டெழுந்து மதம்மாறி கொண்டது அதன் எதிரொலியாக சவேரியார் போன இடங்களில் எல்லாம் மக்கள் தங்களை அடக்குமுறைகளில் இருந்து தற்காத்து கொள்ள மதம் மாறினார்கள். எந்த பரவனும் பன்னு ரொட்டி இல்லாமல் இருந்ததில்லை கடல் தாய் அவர்களை பசியில்லாமலே வைத்திருந்தாள்...........

அடுத்து குமரி மண்ணில் நாடார்கள் மதம்மாறியது முழுக்க முழுக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் புரையோடி போயிருந்த சாதி அடக்குமுறைகளில் இருந்து தங்களை விடுவித்து கொள்ளவே. ஆதிக்க சாதியான நாயர்களை எதிர்க்கவே இங்கு நாடார்கள் அய்யா வழியுலும்  கிறுத்தவத்திலும் தங்களை இனைத்து கொண்டனர். பனை தென்னை சார்ந்த விவசாயமும் நிலங்களின
 உரிமையாளராகவும்  பதினெட்டாம் நூற்றாண்டுவரை இருந்த நாடார்கள் பன்னுக்கு ரொட்டிக்கும் மதமாற வேண்டிய அவசியம் என்ன வந்தது........?

முதல் மிஷனரியாக குமரி மண்ணுக்குள் வந்த ரிங்குள் தோபேயின் குறிப்புகளை படியுங்கள் திருவிதாங்கூர் போராட்ட வரலாற்றை படியுங்கள்  நாடார்கள் சுயமரியதை காக்கவே தங்களை இந்து மதத்தில் இருந்து விடுவித்து கொண்டார்கள். நான்கு தென்னை மரமும் ஒற்றை பனைமரமும் இருந்தால் ஒரு குடும்பத்தை போற்றுவான் நாடான். அவனுக்கு பன்னு ரொட்டியும் அவசியமில்லை அதற்காக மதம்மாறவும் அவசியமில்லை...........

மதமாற்றம்  இந்துவில் இருந்துதான் கிறுத்தவத்திற்கு மாறுவது என்றில்லை கிறுத்துவத்தில் இருந்தும் இந்துவிற்கு மாறிய வரலாறும் உண்டு இடிந்தகரை சித்தி விநாயகர் கோவிலையும் அதனை சுற்றி வாழும் குடிம்பத்தினரின் வரலாற்றையும் அறிந்தால் அவர்கள் மதமாறியதற்கான நோக்கம் புலப்படும்.ஆக மதமாற்றம் என்பது ஆதிக்கத்தின் எதிராக தமிழர்கள் கடைபிடிக்கும் ஒரு ஆயுதம்.....

சரி இந்த பதிவை யார் சொல்லியிருந்தாலும் அறிவே இல்லாத ஆய்வுகளே செய்யாத சங்கி என்று கடந்து சென்றுவிடலாம் ஆனால் சொல்லியிருப்பது நியுஸ் 18 செய்தி நிறுவனத்தின் செய்தியாளர். முற்போக்காளராக பார்க்கப்படும் குனா தலைமையில் இயங்கும் குழுவில் இருப்பவர் அதே போன்று அதில் இனைக்க பட்டிருப்பவர் பாலிமர் தொலைக்காட்சியின் செய்தியாளர். ஊடகத்தில் இருப்பவர் சார்பற்று இருக்க வேண்டும் ஆனால் இந்த இருவரும் முழுவதும் மதவெறியோடு இயங்கி கொண்டிருக்கிறார்கள் என்பதின் சான்றுதான் இது............

இரண்டு நாட்களுக்கு முன்பாக சுமன் எனும்
 மதவெறியன் சுயவிளம்பரத்திற்காக கிறுத்தவத்திற்கு மாறினால் படவாய்ப்பு தருவதாக சொன்னதாக ஒரு கானொளி இட்டிருந்தார் அந்த அடிப்படை ஆதாரமற்ற கிறுத்தவர்களின் மேல் வண்மம் கக்கும் அந்த கானொளியை அடிப்படயாக கொண்டுதான் இவர்கள் இந்த பதிவை எழுதியது.ஒரு செய்தியாளர் ஏன் இந்த செயதிகளை ஆராயமல் பகிர்ந்தார் என்பதற்கு அதிகம் யோசிக்க வேண்டியதில்லை அவரது பெயரை பார்த்தாலே புரியும். ஆம் சேர நாட்டிற்குள்  வந்திறங்கி எம்மீது அதிகாரம் செலுத்திய நாயர்களை  அடக்கியது எங்களின்
மதம்மாற்றமும்  வீரம் செரிந்து தென் எல்லை போராட்டமும்.  அந்த வண்மம் தானொழிய வேறொன்றுமில்லை............

நன்றி
#குமரிகிழவனார்

No comments:

Post a Comment