Pages

Wednesday, October 23, 2019

குமரி விடுதலை போராட்ட சாட்சிகள் #1

குமரி விடுதலை போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்திருந்த நேரம் 1954 ஆம் வருடம்
 ஜூலை மாதம் 27 ஆம் நாள் நாரோயில்  நீதிமன்றத்தில் ஒரு மறியல் போராட்டம் நடைபெறுகிறது பெரும்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்தில் பண்டாரக்காட்டு விளையை சார்ந்த ஜெபமணி எனும் மெட்ரிக் மாணவரும் கலந்து கொண்டு போலிசாரால் கைது செய்யப்படுகிறார்........

நீதிமன்றம் அவருக்கு ஒரு வார கால சிறைத்தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கிறது அதை கட்ட தவறினால் நான்கு வார கூடதல் சிறைத்தண்டனயும் அளித்து தீர்ப்பளிக்கிறது. சிறை தண்டனை பெற்ற அவர் சுசீந்திரம் சிறையில் அடைக்கப்படுகிறார் அபராத கட்டணம் கட்ட தவறியதால் அவரது தண்டனைக்காலம் ஐந்து வாரமாக நீட்டிக்கப்படுகிறது..........

ஆகஸ்ட் பன்னிரண்டாம் தேதி அவரை சிறைக்கு வெளியே கொண்டு வந்த மலையாள ஏவல் துறையினர் அவரை சூழ்ந்து கொண்டு லாத்தியால் தாக்குகிறார்கள். கண்ணத்தில் அறைகிறார்கள் தங்கள் லாடங்களால் அவரது ஆணுறுப்பை மாறி மாறி மிதிக்கிறார்கள் உருட்டு கட்டையால் அவரது தலை முதல் பாதம் வரை இஞ்சி இஞ்சாக சதைக்கப்படுகிறார்.அவரது தொண்டையில் குத்துகிறார்கள்.........

அடிவயிற்றில் ஏவல்துறையின் லாடம் ஏறி இறங்கியதில் அவரை அறியாமல் சிறுநீர் வெளியேறுகிறது. தலைமை காவலர் தன் கால்முட்டால் அவரது நெஞ்சில் இடித்ததில் மூர்ச்சையாகிறார். அன்றிலிருந்து அவருக்கு ஒவ்வொரு நாளும் நரக வேதனைதான் மலம் கழிக்கும்போது வரை அவர் தாக்கப்படுகிறார் கணக்கில்லா லாத்தியடியும் லாட மிதியும் பெற்று நெஞ்சு வேதனை கூடி மனிதர் அசைவற்ற பிணமாகவே மாறுகிறார்.........

மகனின் மரணவேதனை தகவல் அறிந்த பெற்றோர் நூறு ரூபாய் செலுத்தி மகனை மீட்கின்றனர் போராட்டத்தால் தன் படிப்பை இழந்து தன் வாழ்வை இழந்து கிட்டதட்ட நடைபிணமாகவே தன் எஞ்சிய வாழ்வை கழிக்கிறார்........

ஒரு நிமிடம் விசாரணை படத்தின் காட்சிகள் மனதில் வந்து போகிறதுதானே.......?

அன்றைய  திரு-கொச்சி அரசின் முதல்வர் பட்டம் தாணு பிள்ளை. குமரியின் நான்கு வட்டத்திலும் காவல்துறை அதிகாரிகளும் அவரது ஆட்களே. அவர் மாநில காங்கிரஸில் இருந்த காலத்தில் நாயர் டெவலப்மென்ட் சொசைட்டியை வளர்த்ததில் பெரும் பங்காற்றியவரில் ஒருவர் அவரே.......

இப்போது சொல்லுங்கள் அன்று மாணவர் ஜெபமணிக்கு நடந்தது  இனவெறி தாக்குதல்தானே...........? வீழப்போகும் தங்கள் அதிகாரத்தை நினைத்து எழுந்த வெறிதானே.....?
நூற்றாண்டுகளாக தம்மை எதிர்த்தவர்கள் அதிகாரத்தில் ஏறி அமர பார்க்கிறார்கள் என்ற ஆத்திரம்தானே.............?

ஆம் இப்படி ஏராளமான வலிகளும் வேதனைகளிம் நிறந்திருந்த போராட்டகளத்தில் நம் மூப்பர்கள் சிந்திய ரத்த தியாகத்தால் மீட்டெடுத்ததே இன்று நாம் பெற்றிருக்கும் உரிமை...........

நன்றி
#குமரிக்கிழவனார்

No comments:

Post a Comment