ஒரு தேசத்தலைவருக்கு மற்ற
தேசத்து தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதும் அந்த தேசத்தின் தலைவர்கள்
மறைவிற்கு இரங்கல் அறிக்கைகள் வெளியிடுவதும் உலக அரசியலில் மிக சாதாரனமான ஒன்று.
ஆனால் ஒரு தலைவர் மறைவிற்கு மற்றொரு தேசத்தின் சாதாரன குடியானவர்கள் இரங்கல் தெரிவித்து
துக்க தினம் அனுசரிப்பது என்பது மிக மிக அரிதான ஒன்று. அந்த அரிய நிகழ்வு தான்
ஓமன் தேசத்து சுல்தான் காபூஸ் ஆவர்கள்
மரணத்தின் போது நிகழ்ந்தது தமிழ் நாட்டின் மன்னார்குடியில் அவருக்கு அஞ்சலி
பதாகைகள் வைத்திருந்தார்கள்.திருநெல்வேலி வரகநூரில் சுல்தான் இறப்பின் காரணமாக
பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை இந்த வருடம் நடத்தவில்லை என்று அறிவித்து
இருக்கிறார்கள். வந்தவாசியில் ஒரு பள்ளியில் சிறப்பு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
ஒரு ஒரு அரபு தேசத்தின் தலைவன் அந்த தேசத்திற்கு வேலைக்கு சென்ற
உழைப்பாளிகளின் மனதில் நீங்காது இடம் பிடித்திருப்பதே ஒரு தேசத்தலைவரின்
வெற்றியும் புகழும் ஆகும்.................
சுல்தான் காபூஸ் பின் சாய்த் அல் சாய்த்
சுல்தான்
காபூஸ் பின் சாய்த் அல் சாய்த், 1940 ஆம்
தைமூருக்கு மகனாக சலாலாவில் பிறந்தார்.
சிறுவயது முதலே லண்டனில் வளர்க்கப்பட்ட இவர் அவரது ஆரம்ப கல்வி முதல் உயர்நிலை
கல்வி வரை பிரிட்டீஷ் மஹாராணியின் பாதுகாப்பில் இருந்த அங்கேயே படித்தார் .
சான்ட்கர்ஸ்ட் இராணுவ மையத்தில் பட்டம் பெற்று சிறுது காலம்
பிரிட்டீஷ் ராணுவத்தில் பணிபுரிந்து நாடு திரும்பினார். அன்று ஓமன் தேசம் மஸ்கட்
மற்றும் ஓமன் என்ற பெயரில் அவரது தந்தையான சுல்தான் தைமூர் அவர்களால் ஆட்சி
செய்யப்பட்டு வந்தது. எண்ணெய் வளம் கண்டுபிடித்து சிலகாலம் தான் அகியருந்தது
நாட்டின் உள்ளேயே சில கிளர்ச்சியாளர்கள் உருவாகி இருந்தார்கள். நாட்டின் வளங்களை
காத்து ஒருங்கினைக்கும் திறன் அன்றைய சுல்தானுக்கு இல்லாத காரணத்தால் ஓமன்
தேசம் பின்னோக்கி போய் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் நாடு திரும்பிய சுல்தான்
காபூஸ் அவர்கள் பிரிட்டீஷ் ராணுவத்தின் துணையுடன் நம் தந்தையாரின் ஆட்சியை
முடித்து வைத்து 1970 ஆம் ஆண்டு யூலை மாதம் சுல்தானாக முடி
சூடிக்கொண்டார்.........
சுல்தானும் ஓமன் தேசத்தின் வளர்ச்சியும்
அவர் ஆட்சிக்கு வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய
சவால்கள் காத்திருந்தன. ஓமன் வளர்ச்சியடையாத தேசமாக இருந்தது. அன்று ஓமனில் ஒரே
ஒரு மருத்துவமனையும் ஆறு மைல்களுக்கான சாலையும் தான் இருந்தன. பள்ளிகளோ கல்லூரிகளோ
சரியான மின்சாரமோ இல்லாத மிகவும் பின் தங்கிய நிலையுல் மீன்பிடியையைம் சிறியதாக
விவசாயத்தயும் நம்பி மக்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு பக்கம் நாட்டின் பின்தங்கிய
நிலை மற்றொரு பக்கம் உள்நாட்டு கிளர்ச்சி மற்றும் ஏமன் தேசத்தினுடனான போர்.
ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே ஒட்டுமொத்த கிளர்ச்சியையும் அண்டை நாட்டு
அச்சுறத்தல்களயும் நிறைவுக்கு கொண்டு வந்து மஸ்கட் மற்றும் ஓமன் தேசம் என்ற பெயரு மாற்றி
சுல்தானேற் ஆப் ஓமன் என்ற ஒருங்கினைந்த தேசத்தை உருவாக்கினார். அன்றிலிருந்து
ஓமானிகளின் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது.
ஆட்சிக்கு
வந்த முதல் ஆண்டில் கொத்தடிமைத்தனத்தை தடை செய்திருந்தார். பள்ளிகள் கல்லூரிகள்
மருத்துவமனைகள் என்று மக்கள் தேவைக்கான அனைத்தயும் தொடங்கினார் . நீர் தேவைக்கான
ஆலைகளை உருவாக்கினார் மின்துறையை கட்டமைத்தார் வங்கிகள் உணவகங்கள் இன்சூரன்ஸ்
நிறுவனங்கள் என்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினார். ஓமன்
அசுரத்தனமான வளர்ச்சியை நோக்கி சென்றது அவர் ஆட்சிக்கு வந்த முதல் பத்து ஆண்டில்
பன்னிரண்டாயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகளும் இருபத்தியெட்டு மருத்துவமனைகளும்
முன்னூத்தி அறுபத்தி மூன்று பள்ளிகளும் தொடங்கப்பட்டிருந்தன.அவரின் தொலை நோக்கு
பார்வையால் அவர் கொண்டு வந்த திட்டங்கள் இன்று ஒமனை ஐம்பது வருடத்தில் அதிக
வளர்ச்சி கொண்ட நாடாக மாற்றிவைத்திருக்கிறது. கிளர்ச்சியாளர்களும் அச்சுறுத்தலும்
கொண்டு தொடங்கிய அவரது ஆட்சி உலகிலேயே அமைதியான நாடாக மாறி இருக்கிறது.
சுல்தானின் காலத்தில் இந்தியர்கள்
இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையிலான உறவு ஏழாம் நூற்றாண்டு தொட்டு
இருந்து வந்தாலும் சுல்தான் காபூஸின் ஆட்சி காலத்தில் மிக வலிமையாக மாறியது.
ஏறக்குறையா இருபது லட்சத்திற்கு அதிகமான இந்தியர்கள் வசிக்கும் ஓமனில் இந்தியர்கள்
சிறு மற்றும் தொழில் முனைவோராக வளர்ந்தது அவரது ஆட்சி காலத்தில் தான்.
கட்டிடத்துறை மின்துறை மற்றும் உணவு விடுதிகளில் இந்திய தமிழர்களின் பங்கு மிக
அதிகம். ஓமனின் மொத்த இந்தியர்களில் என்பது சதவிகிதம் தென்னிந்தியர்கள் அதில்
கணிசமானவர்கள் தமிழர்கள். உதவியாளர் வேலை முதல் நிறுவனங்களின் தலைவர்கள் வரையிலான
பொறுப்புகளில் இந்தியர்களின் பங்கு உண்டு. நவீன ஓமனில் இந்தியர்கள் சொந்த நாட்டில்
வாழ்வதை போன்ற சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். சுல்தான் அவர்களின்
சட்டத்திருத்தத்திற்கு பிறகு இருபது வருடத்திற்கு மேலாக ஓமனில் வாழ்ந்தால் ஒருவர்
ஓமனின் குடியுரிமை பெறலாம். ஆயிர கணக்கான இந்தியார்கள் இது போன்று ஓமனி
குடிமக்களாக மாறியிருக்கிறார்கள். ஓமனில் மட்டும் இந்திய வழி கல்விமுறை கொண்டு
இந்திய கல்வித்துறையின் கீழ் இயங்கும் பதினொரு பள்ளிகள் உள்ளன. ஓமன் தேசத்தின்
வளர்ச்சியில் பங்கு இருப்பதை உனர்ந்து சுல்தான் இந்தியர்களுக்கு கொடுத்திருக்கும்
மதிப்பு மிக உயர்ந்து. அவரின் தாராளமயத்தால் வாழ்வு பெற்ற இந்தயர்கள் மிக
அதிகம்............
சுல்தானின் எளிமை
மக்களால்
தேர்ந்தெடுக்க பட்ட தலைவர்களே மக்கள் வரி பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும்போது
அப்சலுயுட் மோனார்ச்சி எனப்படும் முழுமையான முடியாட்சியில் இருந்த தலைவர் எளிமையாக
வாழ்ந்தார். அவரது எளிமைக்கு உயர்ந்த பண்புக்கும் சான்றாக இந்திய ஜனாதிபதி அரசு
முறை பயணமாக ஓமன் வந்தருந்தபோது நடந்த நிகழ்வை சொல்லலாம். 1994 ஆம்
ஆண்டு அரசு முறை பயணமாக அன்றைய இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள் ஒமன் வந்திருந்தபோது அவரை விமான நிலயத்திற்கே வந்து வரவேற்றதோடு இல்லாமல் அவருக்கான வாகனத்தின் ஓட்டுநரை நீக்கிவிட்டு சர்மா அவர்களை அமர வைத்து வாகனத்தை தானே ஓட்டினார். பின்னர் ஓமன் இராஜ குடிம்பத்தின் அனைத்து விதிமுறைகளயும் மீறியதைப்பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “ நான் ஒரு தேசத்துன் தலைவராக அங்கு செல்லவில்லை எனக்கு கல்வி பயிற்றுவித்த ஒரு ஆசானுக்கு ஒரு மாணவனாக என் மரியதையை செலுத்தவே நேரடியாக சென்று வரவேற்றேன். இந்தியாவில் கல்வி கற்ற காலத்தில் நான் பலவற்றை கற்று தெரிந்து கொண்டேன் அவர் எனது ஆசான்களில் ஒருவருக்கு இத்தகைய ஒரு மரியாதையை செலுத்துவதே அறம்” என்றிருந்தார். இன்று அரசியல் ஆசான்களையே மதிக்காத தலைவர்கள் இருக்கும் உலகில் ஒரு மாமன்னராக அவர் நடந்து கொண்டவிதம் அவரது உயர்பண்புக்கு ஒரு சான்று...........
ஆண்டு அரசு முறை பயணமாக அன்றைய இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள் ஒமன் வந்திருந்தபோது அவரை விமான நிலயத்திற்கே வந்து வரவேற்றதோடு இல்லாமல் அவருக்கான வாகனத்தின் ஓட்டுநரை நீக்கிவிட்டு சர்மா அவர்களை அமர வைத்து வாகனத்தை தானே ஓட்டினார். பின்னர் ஓமன் இராஜ குடிம்பத்தின் அனைத்து விதிமுறைகளயும் மீறியதைப்பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “ நான் ஒரு தேசத்துன் தலைவராக அங்கு செல்லவில்லை எனக்கு கல்வி பயிற்றுவித்த ஒரு ஆசானுக்கு ஒரு மாணவனாக என் மரியதையை செலுத்தவே நேரடியாக சென்று வரவேற்றேன். இந்தியாவில் கல்வி கற்ற காலத்தில் நான் பலவற்றை கற்று தெரிந்து கொண்டேன் அவர் எனது ஆசான்களில் ஒருவருக்கு இத்தகைய ஒரு மரியாதையை செலுத்துவதே அறம்” என்றிருந்தார். இன்று அரசியல் ஆசான்களையே மதிக்காத தலைவர்கள் இருக்கும் உலகில் ஒரு மாமன்னராக அவர் நடந்து கொண்டவிதம் அவரது உயர்பண்புக்கு ஒரு சான்று...........
சுல்தானும் மதச்சார்பின்மையும்...
அடிப்படையில் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் சுல்தான் 1996 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு பிறகு ஓமனில் வசிக்கும்
அனைத்து குடியானவர்களுக்கும் மதச் சுதந்திரம் தாராளமானது. தலைநகரில் இரண்டு இந்து
கோவில்களும் சலாலா மாநகரில் இரண்டு கோவில்களும் உள்ளது. நான்கு
குருத்துவாராக்களும் ஏழு கிறுத்தவ தேவாலயங்களும் உள்ளது . இந்துக்கள் தங்கள் மத
முறையில் இறுதி சடங்குகள் நடத்தவும் அனுமதிக்கபட்டுள்ளது. ஓமனில் இருபது வருடங்கள்
வாழ்ந்தால் எந்த ஒரு மதத்தை பின்பற்றுவபவராக இருந்தாலும் அவருக்கு குடியிருமை
வழங்கப்பட சட்டம் உள்ளது. மேற்சொன்னவையெல்லாம் சுல்தானின் மதச்சார்பின்மைக்கு
எடுத்துகாட்டு.......
சுல்தானுக்கு தமிழனின் அஞ்சலி
ஒரு தேசத்தை கட்டியமைத்து அந்த தேசத்தின் வளர்சியையே கருத்தாக
வாழ்ந்து ஓமனின் வளர்ச்சியில் உறுதுனையாக இருந்த ஒவ்வொருவருக்கும் அதற்கான
மரியாதையையும் அனைத்து தேசங்களோடும் சகோதரத்தை பேணிய சுல்தான் தனது வெற்றிகரமான
ஓட்டத்தை 79ஆம் வயதில் கடந்த வெள்ளிக்கிழமை
முடித்திருக்கிறார்....
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
அன்றே மறப்பது நன்று
என்ற ஐயன் வள்ளுவனின் குறள்படி
வாழும் தமிழன் அவரால் தான் பெற்ற நலன்களுக்காக அவருக்கான இரங்கல்பா பாடுவதுதானே
தகும் அதுதான் மன்னார்க்குடியில் அவருக்கு வைக்கபெற்ற அஞ்சலி பதாகை. சுல்தானின்
ஆசீர்வாதத்தால் ஓமானிகளும் அங்கே வாழும் அனைத்து தேசத்து மக்களும் மென்மேலும்
வளரட்டும்.......
நன்றி
குமரிக்கிழவனார்
13/1/2020
பகிரி: +968
97241717
No comments:
Post a Comment