Pages

Monday, January 20, 2020

அடிமுறை எனும் குமரி மண்ணின் கலை


அடிமுறை எனும் குமரி மண்ணின் கலை  



அடிமுறை அல்லது வர்ம அடி எனும் மனிதரின் வர்ம தலங்களிள் தாக்குவதும் திருப்பி தாக்குவதை தடுப்பதுமான அடி தட எனும் அடிமுறை பிறந்து வளர்ந்த இடம் குமரிமாவட்டமே தான். வர்ம அடி எனும் தற்காப்பு கலையின் தோற்றம் கேரளாவின் தெக்கன் திருவிதாங்கூரும் தமிழகத்தின் குமரி மாவட்டமும் தான். அதாவது குமரி விடுதலைக்கு முன்பான திருவாங்கூர் சமஸ்தானத்தின் தென் பகுதியும் தற்போதைய குமரி மாவட்ட  பகுதியிம் தான் இதன் பிறப்பிடங்கள்........

இன்றையா இந்த பகுதி ஆய் மன்னர்களால் அட்சி செய்யப்படுவதற்கு முன்பு வாழ்ந்த அகத்தியர் ஆதங்கோட்டு ஆசான் போன்றவர்களால் தோற்றிவிக்கப்பட்ட வர்ம அடி பல பரிமாணங்களை பெற்று இன்றைய அடி முறையாக வளர்ந்து நின்றது. இந்த வர்மக்கலையை முதன்முதலில் சரியாக பயிற்சி பெற்று பயன் படுத்தியவர்கள் குமரி மாவட்ட நாடார் சமுதாய மக்களே. பிற்காலத்தில் குமரி மாவட்ட சாம்பவர்களும் இந்த பயிற்சி பெற்று பயன்படுத்தினர் என்று தரவுகள் வழியாக அறியலாம். ஆனால் இன்று வரை இந்த அடி முறை பயிற்சியை முறையாக பயன்படுத்தி வருபவர்கள் குமரிமாவட்ட நாடார் மக்களே.......

அடிமுறை பயிற்சி என்பது பெரும்பாலும் திறந்த வெளிகளிலும் அல்லது பனை ஓலைகளால் சுத்தி மறைக்கப்பட்ட மேல் கூரை இல்லாத கூடங்களிலும் நடைபெறும். அடிமுறை கற்று கொடுப்பவர்கள் ஆசான் என்று அழைக்கபடுவார்கள். அடிமுறை  பயற்சிசயானது முழுவதுமாக ஆயுதமில்லாமல் வெறும் கையால் எதிரியை வீழ்த்துவது அல்லது எதிரியின் தாக்குதலை தடுப்பது அக்ரோசமாக எதிரியின் வர்ம தலங்களில் அடித்து வீழ்த்துவது என்பதே அடிமுறையின் அடிப்படை ஆகும். பிற்காலத்தில் தான் ஆயுதம் மற்றும் கொம்பு உபையோகிக்கும் முறைகள் இதில் புகுத்தப்பட்டன்.........

மற்ற தற்காப்பு கலைகளில் உள்ளது போன்று உடல் திறன் மேம்படுத்தும் பயிற்சிகள் பெரும்பாலும் அடிமுறையில் இல்லை. நேரடியாக எதிரியை ஆக்ரோஷமாக அடிப்பது மற்றும் தடுக்கும்  பயிற்ச்சி தான் அதில் பிரதானமானது.  அடிமுறை  கால்களால் தம் உடலை தாங்கி விரல், கை, முட்டு மற்றும் தோள்களால் எதிரியின் வர்ம இடங்களில் அடித்து எதிரியை நிலை குலய செய்வது அல்லது முழுவதுமாக முடக்குவது. குமரியின் ஆதி சித்தனான அகத்தியன் கண்டறிந்த மனித உடலின் 108 வர்ம ஸ்தலங்களயும் சரியாக தொட்டு  அல்லது அடித்து முடக்குவதே அடிமுறை கலையின் சிறப்பாகும்.....

கேரளாவின் களரிப்பயிற்றும் குமரியின் அடிமுறையும்

          இன்று மலையாள நாயர்கள் தாம் கண்டு பிடுத்த கலையென  சொல்லிக்கொள்ளும் களரியும் அடிமுறையும் ஒன்றா என்றால் இல்லை ஆனால் இரண்டுக்கும் தொடர்பு உண்டு எனலாம். போதிதர்மர் சீனர்களுக்கு கற்பித்த தற்காப்பு கலைகளுக்கும் அடிமுறைக்கும் தொடர்பு இருக்கும் போது குமரிக்கு மேக்கால விரியும் கேரளத்தின களரி பயற்றிர்க்கும் தொடர்பு இல்லாமலா போய் விடும்...? ஆம் அன்றைய ஆய் மன்னர்கள், வேணாட்டு மன்னர்கள் பரவியிருந்த இடமெங்கும் இருந்த அடிமுறையில் இருந்த எடுத்து அதில் சில அயத நுணுக்கங்களயும் அடவு நுனுக்கங்களயும் சேர்த்து களரி உண்டாயிற்று. திருவிதாங்கூர் சமஸ்தான முன்னூறு ஆண்டுகாலத்தில் அது அடிமுறையை விட பழைமையான கலையாக வளர்ந்தே விட்டது. 1958 ஆம் ஆண்டு கேரள களரிபயற்றிர்கான கூட்டமைப்பு தொடங்கும் முன்பு வரை அடிமுறை என்று வழங்கப்பட்டு வந்த இந்த தமிழர்களின் தற்காப்பு கலை தெக்கன் களறி என்று பெயர் பெற்று கேரளாவின் கலை போல மக்கள் மனதில் நின்றுவிட்டது. குமரி மக்களை மலையாளிகள் என்றே நினைத்து கொண்டிருக்கும் தமிழ் சமூகம் இந்த கலையையும் மலையாளிகளின் கலையென்றே நினைக்க தொடங்கிவிட்டது.......

     களரி என்பது போரில் மற்ற நாட்டு வீரர்களை திடீரென தாக்கி அளித்து கோழி கிளறி புழுவை எடுப்பது போல அழிப்பது என்று ஒரு பொருள் உள்ளதாகவும் சொல்லப்படுவதுன்டு. அடிமுறையில் இருந்து எடுக்கப்பட்டதால் களரியும் எழுபது சதவிகிதத்திற்கு மேல் அடிமுறையை ஒத்தே இருக்கும்..........



அடிமுறையும் சித்தவைத்தியமும்

      அகத்தியரால் கண்டறியப்பட்ட மனித உடலின் 108 வர்ம தலங்களின் அடிப்படையில் உருவான கலை என்பதால் அடிமுறைக்கு சித்த மருத்துவத்திற்கும் நிறைய தொடர்புகள் உண்டு பெரும்பாலான குமரி மாவட்ட  அடிமுறை தெரிந்த ஆசான்கள் சித்த வைத்தியத்திலும் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அடிமுறையில் முடக்கிய வர்மங்களை ஆசான்கள் தான் எடுக்கு முடியும் என்ற பல உதாகரன கதைகள் குமரி மாவட்டத்தில் உண்டு. இன்றும் தமிழகம் முழுவதிலும்  சித்த வைத்திய சாலைகள் அதிகமாக உள்ள இடம் குமரிமுனைதான். இருபது வருடங்களுக்கு முன்பு மேற்கு குமரிமாவட்டத்துல் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆசானோ அல்லது ஒரு வைத்தியரோ இருந்தார்கள். நெடுஞ்சாலையில் இரண்டு எலும்பு முறிவு மருந்துவமனைகள் வந்த பின்பு தான் மக்கள் இந்த ஆசான்களை விட்டுவிட்டு அலோபதிக்கு மாறினார்கள். ஆனால் இன்றும் தளர்வாதம் வந்தவர்கள் முதற்கொண்டு முதுகுதண்டு வலியில் துடிப்பவர்களுக்கு வரை சித்த முருத்துவம் செய்யும் ஆசான்கள் பலர் உள்ளனர் குமரியில்..........

அடிமுறை நாடார்களின் கலையா....?

அகத்தியர் நாடாரா என்று தெரியாது ஆனால் அவர் குமரியில் பிறந்தவர் என்பதற்கான கோட்பாட்டுகளை உடைக்க கூடிய  சான்று இதுவரை இல்லை. அகத்தியர் வாழ்ந்ததாக கருதப்படும் ஊர்களில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் நாடார்கள். இதுவரை அடிமுறை தொடர்பாக வந்த அனைத்து ஆராய்ச்சி கட்டுறைகளிலும் புத்தகங்களிலும் அடிமைறையை முதலில் கற்றவர்கள் நாடார்கள் பின்னர் சாம்பவர்களாலும் அது பயிற்சி செய்யப்பட்டது என்று பதியப்பட்டுள்ளது இந்த இரண்டு சாதியை தவிர்த்து வேறு எந்த சாதியின் பெயரும் இல்லை. இன்று வரை இந்த இந்த அடிமுறையை குமரியில் போற்றி பாதுகாத்து பயிற்சி எடுத்து வருபவர்கள் நாடார்கள் தான். இன்று குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பான்மையினர் நாடார்  ஆசான்கள் தான். இனி நாடார்கள் எங்கு போர் புரிந்தார்கள் போர் புரியாதவர்களுக்கு எப்படி இந்த கலையை வடிவமைத்தார்கள் என்று கேட்பீர்களேயென்றால் நீங்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் இடைபட்ட சில ஆண்டுகளின் வரலாற்றை படித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். குமரி வரலாறு மிக நீண்ட வரலாறு  தமிழ் பிறந்து ஆதி மண் இது வெசனப்படாமல் வரலாற்றை புரட்டுங்கள்.....

 மேலே குறிப்பிட்ட இந்த ஒரு பத்தி அடிமுறை நாடார்களின் கலையா என்று என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்தானே அன்றி என்னை பொறுத்தவரை இது தமிழ் இளம்காளைகள் கற்று தெரியவேண்டிய தமிழர் தற்காப்பு கலை......... 

  
         இந்த அடிமுறை கலையை பற்றி இப்போது இங்கு எழுத காரணம் அடிமுறை என்ற கலை உண்டா என்று குமரியின் மக்கள் அறிந்து கொண்டதே சமீபத்தில் வந்த ஒரு திரைப்படம் வழியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கராத்தே டேக்வான்டோ என்று இந்த ஆதி கலையின் அடியொட்டி உண்டான தற்காப்பு கலைகளை பெருமையுடன் கற்க பிள்ளைகளை அனுப்பும் குமரியான்கள் இந்த கலை கற்ற ஆசான்களை தேடுங்கள் அவர்களின் மாணவர்கள் பலர் உள்ளனர் அவர்களிடம் இந்த கலையையும் கற்று கொள்ளுங்கள் தமிழர்க்கு குமரி தந்த பெருங கொடையாம் இந்த கலை உயிர்ப்பித்து கிடக்கட்டும்

நன்றி
குமரிக்கிழவனார்
21/1/2020

No comments:

Post a Comment