Pages

Sunday, March 29, 2020

பட்டம்_தாணுபிள்ளை_எனும்_இனவெறியர்





பட்டம் தாணு பிள்ளை திருவாங்கூரின் முதல் பிரதம மந்திரி திருகொச்சி மாநிலத்தின் இரண்டாம் முதல்வர் என்று கேரளத்தின் மிக முக்கியமான தலைவர்

நாயர் டெவலப்மென்ட் சொசைட்டியின் தொடக்க காலத்தில் அதற்கு பக்கபலமாக இருந்ததற்காகவும் ஐக்கிய கேரளத்தினை அமைப்பதற்கு துணை நின்றதற்காகவும் திருவாங்கூரின் முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததற்காகவும் நவீன கேரள அரசியலில் நாயர்களுக்கென்று ஒரு தனித்துவத்தை உருவாக்கியதற்காகவும் இவரை கேரள அரசியலின் பீஷ்மாச்சாரியார் என்று கொண்டாடும் பெருங்கூட்டம் உண்டு.....

ஆனால் தமிழர் விடயத்தில் தமிழினத்திற்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எடுத்ததிலும் தமிழர்களுற்கு எதிராக தன் நாயர் படையை ஏவிவிட்டதிலும் ஒரு மனித தன்மையற்றவராகவே இருந்திருக்கிறார்.ஒரு இனத்தை அதன் சொந்த அடையாளத்தை இழக்க வைத்து அவர்கள் சொந்த நிலத்தில அதிகாரமற்றவர்களாக அகதிகளாக அடக்கி வைப்பதற்கான அனைத்து முயற்சிகளயும் எடுத்திருக்கிறார்........

சமஸ்தான காங்கிரஸில் இருந்த காலம் தொட்டே தமிழர் பகுதிகளில் மலையாளிகளை முன்நிறுத்துவது தமிழர் நலன் பேசுபவர்களை மக்களின் எதிரிகளாக காட்டுவது அவர்களின் மேல் அவதூறை பரப்புவது தமிழ்வழி பாட திட்டங்களை எதிர்ப்பது கல்வி நிலையங்களில் மலையாளத்தை முன்னிறுத்துவது நாயர் நிலவுடமையாளர்களை ஆதரிப்பது திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசாரை பிரிவினவாதிகள் என்று டில்லி தலைமையிடம் புனைவது என தமிழர் விரோத வேலைகள் அத்தனையும் முன்னெடுத்தவர்...........

இன்று நாடார்களை இந்து நாடார் எனவும் கிறுத்தவ நாடார் என பிரித்துபோட ஒரு கூட்டம் இருப்பது போல் அன்று கிறுத்துவம் ஏற்று கொண்டவர்கள் நாடார்கள் அல்ல என்ற கருத்தை தன் கைத்தடிகள் மூலம் பரப்பி நாடார் ஓர்மையையும் வேளாளரையும் நாடாரயும் பிரித்து தமிழர் ஓர்மையையும் உடைப்பதை தலையாய கடமையாக செய்து வந்தார்..........

தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் தமிழர்களை தொழிற்சங்கத்தில் சேரவிடாமல் தடுத்ததாகட்டும் பின்னர் தோழர் ஆர்.குப்புசாமி அவர்கள் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தி தமிழ் தோட்ட தொழிலாளர் மனதில் புரட்சியை விதைத்தபோது தனது ரவுடி கும்பலால் அவரை கொலைவெறி தாக்குதல் நடத்தி வாயை கிழித்ததாகட்டும் என அதிகாரம் கையில் வரும் முன்னரே அவர் முழு இனவெறியாளராக இருந்திருக்கிறார்......

தமிழர்களின் எல்லை போராட்ட தீ திருவாங்கூரின் ஓன்பது வட்டங்களிலும் எரிந்து கொண்டிருந்தபோது பிரஜா சோசியலிச்ட் கட்சி மூலம் மைனாரிட்டி ஆட்சியில் அமர்ந்த அவர் தனது அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு இனவெறியின் எல்லைக்கே போய் வெறியாட்டம் ஆடுகிறார்..........

ஆகஸ்ட் 11 ,1954 அன்று அவர் ஏவிய காவல்துறை வெறியாட்டத்தில் சுட்டு படுகொலை செய்யபட்டவர் மட்டும் ஏழு பேர் பின்னர் காயம்பட்டவர்களில் மரணித்தவர் நான்கு பேர்.அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் நிறந்தரமாக உடலுறுப்புகள் செயல் இழந்தவர்கள் மட்டும் 32 பேர். மருந்துவமனையில் சிகிச்சை பெற்றவர் 558 பேர் இவரது இனவெறி தாக்குதலுக்கு பயந்து சென்னை மாகானத்திற்கு தப்பியோடி தலைமறைவான தமிழர்கள் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேல்............

தமிழரின் விடுதலை வேட்கைக்கு பரிசாக ஒரு கருப்பு நாளை பரிசாக தந்த அவர் அந்த நிகழ்வுக்காக மொத்த இந்தியமும் எதிர்ப்பு தெரிவித்தும் சலனமேயில்லாமல் தன் செயல்களுக்கு நியாயம் கற்பித்து அமைதி காத்தவர்..........

இப்படியாக தான் சார்ந்த நாயர் சமுதாய நிலவுடமையாளர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் மேல் குறிப்பாக விளவங்கோடு கல்குளம் நாடார்கள் மேல் அடக்குமுறையை இனவெறி தாக்குதலை நடத்திய விதத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவெறியாளர்கள் வரிசையில் தலையாயவராக அழுத்தமாக பதிவு செய்யப்பட வேண்டியவர்...............

No comments:

Post a Comment