Pages

Sunday, March 29, 2020

சாதனமாகும்_அந்தர்ஜனம்





அந்தர்ஜனத்தை பற்றியும் அவர்கள் அவர்கள் பூத்திரிகளிடம் அனுபவித்த அடக்குமுறைகளை பற்றியும் எழுதியிருந்தேன். நடக்ககூடாது காணக் கூடாது என என்னத்தான் மனையில் பெண்களை அடக்கி வைத்தாலும் பாலியல் தேவை என்பது அனைத்து உயிர்களுக்குமானது. எழுபதுகளில் இருக்கும் பூத்திரியை திருமணம் செய்து கொள்ளும் பதின் வயது பெண்ணோ அல்லது திருமணமே ஆகாமல் முதிர் கண்ணிகளாக இருக்கும் பெண்களோ பூத்திரிகளின் கண் தப்பி சூத்திர நாயர் மற்றும் இதர தாழ்ந்த சாதி ஆண்மகனுடன் உறவு வைத்து கொள்வார்கள். இப்படி அவர்கள் உறவு வைத்து கொள்பவர்களுக்கு சாரன் என்று மலையாளத்தில் பெயர்............

இந்த உறவில் ஈடுபடவோ அல்லது பூத்திரிக்கு தன் மனையின் அந்தர்ஜனத்தின் மேல் உறவில் ஈடுபட்டதாக சந்தேகம் வந்தாலோ நடைபெறும் கொடுமை தான் ஆணாதிக்க வெறியின் உச்சம் இதற்கு ஸ்மார்த்த விசாரம் என்று பெயர். ஆறு அடுக்கு விசாரனை நிலை கொண்ட அந்த கொடுமையை படித்தாலே மனம் பதபதைக்கிறது......

முதலாம் நிலையில் மனையின் வேலைக்காரிகளான சூத்திர நாயர் பெண்கள் தாசி விசாரம் என்ற பெயரில் விசாரிக்க படுவார்கள் இதில் சந்தேகம் உறுதி செய்யப்பட்டால் இரண்டாம் நிலை விசாரனை நடக்கும்.......

இரண்டாம் நிலையில் மனையின் பின் புறத்தில் உள்ள தனியறையில் அவள் அடைத்து கொடுமை செய்யப்படுவாள் இதற்கு அஞ்சாம் புறையல் அக்கல் என்று பெயர். இப்போது பூத்தரி மன்னனை போய் சந்தித்து ஸ்மார்த்த விசாரத்திற்கு கோரிக்கை வைப்பான் மண்ணனும் ஒரு குழுவை அனுப்பி வைப்பான் அதில் நான்கு விசாரனை அதிகாரி ஒரு பூத்திரி ஒரு நீதிபதி இருப்பார்கள்.அவலத்தை பார்த்தீர்களா ஒரு கிழ பூத்திரி பெண்ணிற்கு இல்லற சுகம் கொடுக்க வக்கில்லாமல் போக அதை தேடும் பெண்ணை விசாரிக்க மட்டும் ஆறுபேர் அப்போ திருவிதாங்கூரின் ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள்...........

மூன்றாம் நிலையில் ஸ்மார்த விசாரம் சக அந்தர்ஜன பெண்களை வைத்து அப்பெண்களை அடித்து உதைப்பது பல நாட்கள் பட்டிணி இடுதல் இருட்டு முறியில் அடைத்தல் விஷ விலங்குகள் அந்த முறியில் இடுதல் போன்ற கொடூரங்களை செய்து அவளை ஒத்து கொள்ள செய்வர். வலியும் வேதனையும் தாங்காமல் ஒத்துகொள்ளும் பெண்கள் அந்த நிமிடத்தில் இருந்து சாதனம் என்று அழைக்க படுவர் அதாவது உயிரற்ற அஃறினை பொருள். இப்போது தான் உறவு கொண்ட சாரன்களின் உருவ அடையாளம் பெயர் முதல்கொண்டு ஆணுறுப்பின் நீல அகலம் என எல்லாவற்றயும் அவள் பொதுவழியில் கூற வேண்டும்..........

நான்காம் நிலையல் அந்தர்ஐனம் கூறிய சாரன்கள் மன்னனின் விசாரனைக்காக வரவேண்டும் உண்மையை ஒத்து கொள்ளாவிட்டால் சுசீந்திரம் கோவிலில் சத்தியம் செய்யவேண்டு இதற்கு சொரூபம் செல்லுதல் என்று பெயர் பாருங்கள் இறைவனின் ஆலயத்தை எதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் இந்த பூத்திரிகள் என்று................

தேகவிசேதம் எனும் ஐந்தாம் நிலையில் விசாரனை முடிந்து குற்றம் சாட்டப்பட்ட சாரனகளும் சாதனங்களும் பூத்திரிகளால் ஊரைவிட்டு காட்டு பகுதிக்கு துரத்த படுவார்கள் ஒரு வேளை இளம் அந்தர்ஜனமாக இருந்தால் நல்ல விலைக்கு விற்பனை செய்யபடுவார்கள் இது முடிந்ததும் ஆறாம் நிலை எனப்படும் சுத்த போஜனம் எனும் பூஜை செய்து விசாரனை அதிகாரிகளுக்கு பெரும் விருந்து படைப்பான் மனையின் பூத்திரி.............

ஆக ஒரு பூத்திரி இனம் தன் சுயலாபத்திற்காக உருவாக்கிய தரவாடித்துவத்தின் ஊடே அந்தர்ஜனம் எனும் சுயசாதி கூட்டத்தை உருவாக்கி அவர்களை மனிதராகவே வாழ்விடாமல் சாதனமாகவே பயன்படுத்தி கொன்றொழித்திருக்கிறார்கள்.............

மலையாள சினிமா பாடல்களில் முகம் மறைக்க தாழம்குடை பிடித்து தலை விரித்திட்டு சிறு பெண் முன்னே செல்ல வெள்ளாடை உடுத்தி பேரழகியாக நடந்து வரும் கதாநாயகிகளை காணும் போது அழகியலாகத்தான் இருக்கும் ஆனால் எனக்கோ மேலே சொன்ன கொடுமைகள் அனைத்தும் நியாபகம் வந்து செல்லும்...........

ஆம் மீண்டும் மீண்டும் சொல்லுவேன் அந்த திருவாங்கூர் நிலம் மனிதர் வாழ தகுதியற்ற நிலமே..........

No comments:

Post a Comment