Pages

Sunday, March 29, 2020

பெரியாரும்_தேவிகுளம்_பீர்மேடும்

#பெரியாரும்_தேவிகுளம்_பீர்மேடும்


தேவிகுளம் பீர்மேடு எனும் தமிழர் பகுதி பூர்வீகமாக முதுவான் பழங்குடி மக்களுக்கும் மறையூர் காந்தலூர் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் குடிகளுமே இந்த நிலத்தித்தின் ஆதிகுடியாவர்.....

பதினெட்டாம் நூற்றாண்டில் மார்த்தாண்ட வர்மாவின் நாடு விரிவாக்கத்தின் போதுதான் இது திருவாங்கூரின் கட்டுபாட்டிற்குள் வருகிறது. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அந்த பகுதியை திருவாங்கூருக்காக நிர்வகித்து வந்த வலியராஜாவிற்கும் ஆங்கிலேய அரசின் பிரதிநிதி ஜான் டேனியல் மன்ரோவிற்கும் நடந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது ஆங்கிலேயர் வசமாகிறது.......

அடர்ந்த காடாக இருந்த இந்த பகுதி தேயிலை தோட்டம் அமைக்க செப்பனிடபடுகிறது முழுக்க முழுக்க தமிழ் குடிகளால் திருத்தப்பட்டு சாலைகள் அமைக்க பட்ட தேயிலை தோட்டங்கள் வருகின்றன. இந்திய சுதந்திரம் அடையும் வரை முழுவதுமாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிக மோசமான சூழலில் கொத்தடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர்........

1931 காலக்கட்டத்தில் தான் இதற்கு கேரளாவில் இருந்து சாலைகள் அமைக்க பட்டன இதன் பிறகே மலையளிகள் பெரும்பான்மையாக இந்த நிலத்தில் வந்து குடியேறினார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பின்பு அவர்கள் உறிஞ்சு போட்ட தொழிலாளர்களின் மிச்ச ரத்தத்தை மலையாளிகள் உறிய தொடங்கினார்கள்........

சுதந்திரத்திற்கு பின் தொழிலாளர்கள் நலன் பேண ஒரு தொழிற்சங்கம் ஏற்படுத்த கூட அவர்களுக்கு உரிமை கொடுக்க பட்டிருக்கவில்லை தென்னிந்திய தோட்ட தொழிலாளர் சங்கம் அங்கே தொடங்கப்பட்டு புரட்சி பரவ தொடங்கியபோது தோழர் ஆர்.குப்புசாமி அவர்கள் மலையாளிகளால் தாக்கப்பட்டு வாய் கிழிந்த நிலையில் இருண்டு மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தார்..........

1954இல் திருகொச்சி மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக இனவெறியர் பட்டம் தாணுபிள்ளை பதிவியேறியபோது தேவிகுளம் பீர்மேடு மீது வண்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதை எதிர்த்த நேசமணி , ஏஏ.ரசாக் மற்றும் சிதம்பரநாதன் உட்பட்ட தலைவர்களும் இருபது பெண்கள் உட்பட்ட நானூற்றி அறுபத்திநாலு தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர். இதில் தேவிகுளம் பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர்களும் அடக்கம் ஆம் தமிழர்கள் நிலப்பரப்பில் இரண்டு தமிழ் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்க பட்டதே இந்த இனவெறி தாக்குதல்களுக்கு காரணமாக இருந்து..........

1955இல் இந்த நிலத்தின் வரலாற்றயும் இதில் தமிழர் படும் வேதனைகளயும் மிக அழுத்தமாக ஐயா நேசமணி அவர்கள் பாராளுமன்றத்தில் பதிந்திருப்பார் அதே கால கட்டத்தில் திருகொச்சி மாநிலத்தின் சட்டமன்றத்தில பேசிய குஞ்சன் நாடார் மலையாள முதலாளிகளின் ஆதிக்கத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யுனிஸ்டுகளின் உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் எனும் வாக்கியம் வெற்று வாக்கியமே என முழங்கியிருந்தார். இப்படி தலைவர்களின் எதிர்ப்பும் கைதும் அந்த நிலத்தின் தமிழ் மக்கள் அனுபவித்த அடக்குமுறைகளுக்கிடையே மலையாள முதலாளிகளின் உயர்மட்ட லாபி வென்றது. ஆம் அந்த தமிழர் நிலம் என்றென்றைக்குமாய் கேரளாவோடு இனைக்க பட்டது........

சரி பதிவிற்கு ஏன் பெரியாரின் பெயரை தலைப்பாக இட்டுருக்கிறேன் என்கிறீர்களா தமிழகத்தில் இன்று வியாபித்திருக்கும் முதலாளித்துவ கட்டமைப்பிற்கு தனது காலத்தில் மிக மிக விசுவாசமாக இருந்த மனிதபுனிதர் பெரியார் தேவிகுளம் பீர்மேடு பகுதியை பற்றி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு

“சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பணிக்கர்.
(மொழிவாரி மாகாண அமைப்புக் கமிட்டி மெம்பர்) அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார்.நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்."

என்று பதில் அளித்திருந்தார்...........

நன்றி

No comments:

Post a Comment