Pages

Saturday, March 28, 2020

சிக்கன் மசாலா


ஒரு கிலோ சிக்கன்ல மஞ்ச பொடி ஒரு டீஸ்பூன் காஷ்மீரி வத்த பொடி தயிர் உப்பு சேத்து அரை மணி நேரம் ஊற வைக்கனும்.....

ஒரு கடாய்ல எண்ணெய காய விட்டு இதில் பெருஞ்சிரகம், கிராம்பு, ஏலம், பட்ட, பிரியாணி இல போட்டு பொட்டி தெறிச்சதும் அதில் இருண்டு பெரிய உள்ளிய கீத்தா அரிஞ்சி போட்டு வதக்கி அதில் கறிவேப்பில ஒரு இஞ்ச் அளவு இஞ்சிய நறுக்கி போட்டு ஆறு பல் வெள்ளகூட நறுக்கி போட்டு வதக்கி ஆற விட்டு மைய அரச்சி எடுக்கனும்.........

அதே கடாய அடுப்பில வச்சி எண்ணெ விட்டு அதில் அரச்ச உளளிய சேத்து தீய கொறச்சி வச்சி பச்ச வாசன போவ வதக்கி அதில் இரண்டு சின்ன தக்காளிய அடிச்சி சேத்து மீண்டும் வதக்கனும் நல்லா வதங்கினதும் ஒரு டேபிள்ஸ்பூண் வத்த பொடி இரண்டு டேபிள்ஸ்பூண் மல்லி போடி ஒரு டீஸ்பூண் சீரகபொடி தேவையான உப்பு போட்டு வதக்கி ஒரு அஞ்சி நிமிசம் வேக விடனும். எண்ணெ பிரிஞ்சி வந்து மசாலி கெட்டி ஆனதும் அதுல சிக்கன சேத்து தீய முழுசா வச்சி மூணு நிமிசம் ப்ரை பண்ணனும்.இப்ப தீய மிட்ல வச்சி ஒரு அச்சி நிமிசம் மூடி போடனும்.........

சிக்கன் நல்லா கொதிச்ச வந்ததும் அதுல ஒரு கப் வெள்ளம் சேத்து கிளறி அர டீஸ்பூண் இறச்சி மசாலா சேத்து அஞ்சி நிமிசம் வேகவிட்டு உப்பு பாத்து தீய கொறச்சி அடுத்த அஞ்சி நிமிசம் மூடி போட்டு வேகவிட்டு மல்லிதழ தூவி இறக்கணும்.....

நெச்சோறி, ரொட்டிக்கு செம ஸைடிஷ் ரெடி.......

நன்றி
செஃப்
#கிழவனார்

No comments:

Post a Comment