அர கிலோ போத்துகறிய சின்னதா வெட்டி அதுல வத்தல்,மல்லி, நல்லமிளவு அர டீஸ்பூன் சேத்து கால் டிஸ்பூன் மஞ்ச பொடி ஒரு டீஸ்பூன் இறச்சி மசாலா ஒன்றரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு கலந்து அர மணிக்கூர் வைக்கவும்.......
ஒரு குக்கரில் கலந்து வைத்த போத்தெறச்சியை கொட்டி அதில் ஒரு கைப்பிடி சிறுஉள்ளி இரண்டு பச்ச மொளவு கீற்று அரைமுடி தேங்காயை கீத்தா நறுக்கி அதில் அரப்பங்கு எடுத்து குக்கரில் போட்டு அர கப் வெள்ளம் சேத்து அஞ்சி விசில் வச்சி இறக்கணும்.குக்கர தொறக்கும்போது வெள்ளம் இருந்தா கொஞ்சம் கொதிக்கவுட்டு வெள்ளம் இல்லாம ட்ரை ஆக்கணும்........
ஒரு உருளில சின்னதா தேங்கெண்ண விட்டு அதுல பெருஞ்சீரகம் காஞ்சதும் அதில அரமுறி தேங்காய்ல மீதம் இருந்த தேங்காய போட்டு ஒரு பெரியுள்ளிய அரகீத்தா நறுக்கு போட்டு கருவேப்பல ஒரு டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து உள்ளி கலர் மாறுவது வர வதக்கியதும் அதுல ஒரு தக்காளிய சிறு கீத்தா நறுக்கி போட்டு வதக்கணும். மைய வதக்கியதும் அதில் ஒரு டீஸ்பூண் வத்தபொடி , மல்லிபொடி, இறச்சி மசாலா, அர டீஸ்பூண் சீரகபொடி சில்லுக்கு மஞ்ச பொடி சேத்து வதக்கி கலர் மாறவர்வதக்க விடனும் கரியாமா கறுத்தா நல்லது.........
இதில் குக்கிரல் இருக்கும் போத்து கறிய போட்டு வறுத்து ட்ரையா எடுக்கனும்.......
தேங்காஎண்ணெ தான் மெயின் அடி பிடிக்காத இருக்க சிறிய சிறியதா தேங்கெண்ண சேக்கணும்..............
பீப்/போத்து உலர்த்தியது
செப்
#கிழவனார்
No comments:
Post a Comment