வாரத்துல ஆறு நாளும் உச்சைக்கும் இராத்திரிக்கும் சோறு மீன்கறி வெறங்கறி பச்சகறி.........
இது போக சாயந்திரம் சாய குடிச்சிய நேரத்துக்கு கிளங்கும் மீன் கறியும்..........
ஞாறாச்ச ஆனா காலத்த காப்பிக்கு ஆப்பமோ இடியாப்பமோ தோசையோ தொட்டுக்க மாட்டுகறிதான்..........
வசதிய பொறுத்து ஞாறாச்ச உச்சைக்கு ஆடோ கோழியோ மூக்கு முட்ட ஒரு பிடி பிடிப்போம்.....
ஞாறாச்ச இராத்திரிக்கு போனா போவுதேனு கருவாட்டு கறியும் முட்டயும்........
இதுபோக நல்லநாள் காபிக்கு தொட்டுக்க கட்டகாலுதான்.........
இதுல மாசத்துல ஒரு நாள் ஆட்டுத்தல கண்டிப்பா தின்னே ஆவனும்.......
வாரத்துல ஒரு நாளாவது முள்ளும் தலயும் சந்தைல கிட்டிச்சினா விடுறதில்ல..........
இப்படி முழு நேர அசைவமா காலம் காலமா வாழுற எங்ககிட்ட வந்து வேகன் வேகாதமான் சைவ சமயல் சிறப்பு கொழுப்பு கொலஸ்ட்ரால்னுட்டு.........
அடேய் நாங்க இட்லிக்கே தொட்டுக்க மீன்கறி சாப்பிடிறவங்கடா........
உனக்கு பல்லு செத்துனா யு கோ வேகன் மேன் வொய் மீ..........
#குமரியான்டைரீஸ்
No comments:
Post a Comment