மலையாள மசாலா சினிமாக்களை பார்த்திருக்கிறீர்களா மோகன்லாலோ சுரேஷ்கோபியோ பட்டு வேட்டி கட்டி ஒரு நாலுகட்டு வீட்டின் முன்னே திறந்த ஜீப்பில் வந்து இறங்கி சில வசனங்களை பேசுவார்கள் அவர்களை அந்த ஊரே வலிய தரவாட்டுக்காறன் என்றோ அல்லது ஏதாவது ஒரு வீட்டின் பெயரை சொல்லியோ அழைப்பார்கள். அந்த வீடும் டாம்பீகாமாக ஒற்றை யானை முன் நிற்க பார்க்க ஒரே அழகியலாக இருக்கும் இதைத்தான் தரவாடு என்று மெச்சி கொள்வார்கள் ஆனால் எழுபதுகளில் கேரளத்தில் கூட்டு குடும்ப தடை சட்டம் வருவதற்கு முன்பான வரலாறு வேறு இந்த தரவாடு என்பதின் அர்த்தமும் வேறு..............
புதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் சேரநாட்டிற்கு வந்தேறுகின்றனர் பார்ப்பானர்கள் தங்களை சோழ நாட்டு பார்ப்பனர்களிடம் இருந்து வேறுபடுத்திகொள்ள தங்களை தாங்களே நம்பூதிரிகள் என்று அழைத்து கொள்கின்றனர் சேரநாட்டு சிற்றரசர்களுடமிருந்து தங்கள் வேலையை தொடங்குகின்றனர் சிறுது சிறுதாக அரசனுக்கு நெருங்கியவர்கள் ஆகிறார்கள் அரசனை நெருங்கிய அவர்கள் அரசனின் நம்பிக்கையை பெற ஒரு பெரும் அஸ்திரத்தை ஏவுகின்றனர்...........
இனிமேல் எங்கள் குடும்பத்தின் தலச்சன் பிள்ளைகளை தவிர்த்து நாங்கள் யாரும் திருமணம் செய்து கொள்ள போவதில்லை நாட்டிற்கும் அரசனுக்கும் தொண்டு செய்து வாழப்போகிறோம். இது கேட்கும் அரசர்களுக்கு ஆகச்சிறந்த தேச பக்தன் இவர்கள் தான் என்று நம்பூதிரிகள் சொல்வதே வேதவாக்காக மாறுகிறது.கிட்டதட்ட அரசர்கள் அளவிற்கு அதிகாரம் பெற்று சட்ட திட்டங்களை வகுக்கும் அளவிர்க்கு மாறுகிறார்கள்.........
இந்த நம்பூதிரிகள் அடுத்த கட்டமாக நாயர்களின் மேல் தங்கள் வண்மத்தை தெளிக்கிறார்கள். பெரும்பாலும் போர்படையில் வேலை செய்யும் நாயர்களை முழுவதுமாக குடும்பம் நேசம் உறவு ஆகியவற்றில் இருந்து விலகி நிற்க தரவாடித்துவுத்தை அறிமுக படித்துகிறார்கள். நாயர்கள் திருமணம் செய்வதற்கு முன் அந்த பெண்ணை நம்பூதிரிகள் மணம் செய்து கொள்வர் அதன் பின் நாயர்கள் அப்பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தலாம். இதற்கு பரிசாக தரவாடு சொத்துகள் அவர்களுக்கு பட்டயமாக தரப்படும் அதற்கு பெண்களே முழு அதிகாரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.........
அப்படியாக தரவாட்டின் முதல் பெண்ணை இரண்டாவதாக கட்டிய நாயர் ஆண் தான் தரவாட்டின் உடமஸ்தன் அதை பராமரிக்கும் பொறுப்பு முடிவுகள் எடுக்கும் பொறுப்பு எல்லாம் அவருக்குதான் இனி அடுத்த அடுத்த பெண்களை முதலாவதாக நம்பூதிரிகள் மணமுடிக்க இரண்டாவதாக நாயர்கள் மணமுடித்து கொள்ளலாம் இதனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற நம்பூதிரிகள் மன்னனை ஏமாற்றதிய போலும் ஆச்சி இல்லற சுக அனுப்பவித்தது போலும் ஆச்சு..........
இப்படியான தரவாட்டில் நான்கு பெண்கள் இருந்தால் எட்டு முதல் பன்னிரன்டு ஆண்களின் போக்குவரத்து இருக்கும் இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை பெயர் இட்டு கொள்ளும் உரிமை இல்லை தரவாட்டின பெயரையே சூட்டி கொள்ள முடியும்.இப்படி ஆணாதிக்கத்தின் உச்சத்தைதான் சில முற்போக்கியவாதிகள் பெண்ணிற்கு இணை தேடும் உரிமை என்றும் சொத்துரிமை என்றும் இட்டு கட்டுவார்கள்.........
ஆனால் இந்த தரவாடுகள் ஒரு சமூக அவலத்தின் உச்சம் என்பதை தெரிந்தாலும் தெரியாததுபோல் மலையாள சினிமாக்கள் தூக்கி பிடிக்கும். இதை பற்றி வரலாற்று அறிவே இல்லாத நாயர் குஞ்சுகள் நாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் தரவாடித்துவம் என்றும் பெருமை பீத்தும் இதுபோன்ற வீடுகள் குமரியின் விளவங்கோட்டிலும் கல்குளத்திலும் இன்றும் காணலாம்............
No comments:
Post a Comment