Pages

Saturday, March 28, 2020

#மீன்_கறி




ஒரு மன் சட்டயில் தேங்கா எண்ணெய் ஊத்தி எண்ண காஞ்சதும் அதுல கடுகு கறிவேப்பல போட்டு பொட்டி தெறிச்சதும் சின்ன உள்ளிய போட்டு நல்லா வதக்கணும்.அதுல இரண்டு பச்ச மிளகா கீத்த போட்டு வதக்கி சின்னதா இஞ்சி தட்டி போடவும்.........

இது நல்லா வதங்கினதும் மூணு டீஸ்பூண் மல்லி பொடி இரண்டு டீ ஸ்பூண் காஷ்மீரி வத்த பொடி ஒரு பொடி மஞ்ச பொடி அர டீஸ்பூன் சீரக பொடி போட்டு மசாலா கறுகாம வதக்கவும். இதில் ஒரு தக்காளியை சிறு கீற்றாக அரிந்து போட்டு வதக்கி உப்பு போட்டு மூடி வைக்கவும்.....

இரண்டு கைப்பிடி தேங்காய், மூன்று பல் வெள்ளகூடு, மூன்று சிறிய உள்ளி கறிவேப்பிலை ஒரு வத்தல் நாலு நல்லமிளகு கொஞ்சம் வெந்தயம் போட்டு மைய அரைத்து சேர்க்கவும்.....

மசாலா வாட தீர வதக்கி அதில் புளி தண்ணி சேர்த்து உப்பு பாத்து கொதிக்க விடவும் கொதித்ததும் பாற மீனை போட்டு கூடவே முருங்கக்காய் அரை மாங்காய் சேர்க்கவும்.தீயை கூட்டி வைத்த ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு உப்பு உறப்பு பாத்து தீயை குறைத்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்........

கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கி விடவும்.........

#மீன்கறி ரெடி.......

No comments:

Post a Comment